PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

Swamy saranam...guruve saranam...today pooja at sannidhanam 29-1-22






 #சுருட்டபள்ளி

இன்று சனி மகா பிரதோஷம். ஆதலால் பிரதோஷத்திற்கு பிரசித்தி பெற்ற சிவாலங்களில் ஒன்றான சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர் ஆலயம் பற்றி வாசிப்போம் யோசிப்போம் மனசீகமாக தரிசிப்போம்.
சிவபெருமானை நின்ற நிலையிலோ அமர்ந்த நிலையிலோ லிங்க வடிவிலோ தான் தரிசித்திருப்போம். பெருமாளை மட்டும்தான் சயனக்கோலத்தில் பார்க்கமுடியும். ஆனால் பார்வதியின் மடியில் தலை வைத்து சயனக்கோலத்தில் காட்சி தரும் சிவனை சுருட்டப்பள்ளி திருத்தலத்தில் தரிசிக்கலாம். அவரது திருநாமம் பள்ளிகொண்டீஸ்வரர் என்பதாகும்
இத்தலம் உருவானதே பிரதோஷத்தையொட்டி தான். அதாவது அமுதம் வேண்டி தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது ஆரம்பத்தில் வெளிப்பட்ட ஆலகால விஷத்தை கண்டு அகிலமே அதிர்ந்த போது தாம் படைத்த ஜீவராசிகள் துன்புறுவதை பொறுக்காமல் ஈசன் அதை தானே உண்ண முன் வந்து விழுங்கினார்.
பிரதோஷத்திற்கு பிரசித்தி பெற்ற தலம் என்பதை உணர்த்தும் வகையில் கோயிலின் எதிரே பெரிய நந்தி அமைந்துள்ளது. அதனை அடுத்து அழகிய ராஜகோபுரம். உள்ளே நுழைந்தால் கொடிமரம் பலிபீடம் பிரதோச நந்தி என சிவாலயத்திற்கே உரிய எழிலுடன் விரிகிறது.






Swamy saranam...guruve saranam....

 பாடல் பெற்ற சிவாலயம் ;;காளையார் கோவில்


 புராணப்பெயர் ;திருக்கானப்பேர்

 மூலவர்;சொர்ணகாளீஸ்வரர், சோமேசர், சுந்தரேசர்

 தாயார்;சொர்ணவல்லி, சவுந்தரவல்லி, மீனாட்சி

 தல விருட்சம் ; மந்தாரை

 தீர்த்தம் ; கஜபுஷ்கரணி, சிவகங்கைக்காளி, விஷ்ணு, சரஸ்வதி, கௌவுரி, ருத்ர, லட்சுமி, சுதர்சன தீர்த்தங்கள்.

 பாடல் வகை ; தேவாரம்

 பாடியவர்கள் ; சம்பந்தர், சுந்தரர்

 தலவரலாறு


   ஒரு முறை சுந்தரமூர்த்தி சுவாமிகள், விருதுநகரில் உள்ள திருமேனிநாதரை வழிபட்டு இந்த வழியாக வந்தார். அப்போது சொர்ணகாளீஸ்வரரை வணங்க நினைத்தார். ஆனால் வழி எங்கும் சிவலிங்கமாக தென்பட்டதால் அவரால் உள்ளே சென்று இறைவனை தரிசிக்க முடியவில்லை. இதனால் இறைவனை நினைத்து வேண்டினார். தன் நண்பன் மீது இரக்கம் கொண்ட ஈசன், காளையை அனுப்பினார். அது ஆலயத்தில் இருந்து ஓடி வந்து, சுந்தரமூர்த்தி நின்றிருந்த இடம் வரை வந்து விட்டு, மீண்டும் ஆலயம் சென்றது. காளை வந்த வழித்தடத்தில் சிவலிங்கம் இல்லை என்பதை உணர்ந்த சுந்தரமூர்த்தி சுவாமிகள், அதன்வழியே சென்று இறைவனை தரிசித்தார். காளை வழிகாட்டியதால், இதற்கு ‘காளையார்கோவில்’ என்று பெயர் வந்தது.


 இந்திரனின் வாகனமான ஐராவத யானை, மகரிஷி ஒருவரால் தரப்பட்ட பிரசாத மாலையைத் தரையில் வீசி எறிந்தது. இதனால் சாபம் பெற்ற ஐராவதம் யானை, சாப நிவர்த்திக்காக இத்தல இறைவனுக்கு அபிஷேகம் செய்து வந்தது. மனிதர்களின் பார்வை இந்த யானை மீது படக்கூடாது என்பது விதி. ஆனால், ஒருமுறை ஒரு மனிதன் அந்த யானையைப் பார்த்து விட்டான். இதனால், அந்த யானை தன் தலையால் பூமியை முட்டி பாதாளத்துக்குள் சென்றுவிட்டது.

யானை முட்டிய பள்ளத்தில் தண்ணீர் பெருகி, ஒரு தீர்த்தக்குளம் உண்டானது. இதற்கு “யானை மடு" என்று பெயர்.

        

 ஆலய அமைப்பு


   சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் 157 அடி உயரம் கொண்ட 9 நிலை இராஜகோபுரம் மற்றும் 5 நிலை கொண்ட மற்றொரு ராஜகோபுரத்துடன்  கிழக்கு நோக்கி அமைந்த பிரம்மாண்டமான ஆலயம். 

இரண்டு பிரகாரங்களைக் கொண்ட இக்கோவில் மூன்று இறைவன் சந்நிதிகளைக் கொண்டு  விளங்குகிறது.     இறைவன் சந்நிதிகள் மூன்றும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன. இறைவி சுவர்ணவல்லி சந்நிதி சுந்தரேஸ்வரர் சந்நிதிக்கு இடதுபுறம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. மற்ற இரண்டு அம்பாள் சந்நிதிகளும் தெற்கு நோக்கி அமைந்துள்ளன.

காளீஸ்வரர் சந்நிதியிலுள்ள கருவறை லிங்கம் தனிச்சிறப்பு வாய்ந்ததாகும். இங்குள்ள அம்மன் சொர்ணவல்லி ஆவார். சோமேஸ்வரர் சந்நிதிக்கு எதிரிலுள்ள இராஜ கோபுரம் மருது சகோதரர்களால்க ட்டப்பெற்றதாகும்  சோமேஸ்வரர் ஆலயத்தின் அம்மன் சௌந்திர நாயகி எனப்படுகிறார். இவ்வம்மனின் கருவறை சிற்ப

வேலைப்பாடு மிக்கதாகும்.   


 சோமேஸ்வரர் – சௌந்தரநாயகி : 


 மூன்று சதாசிவ மூர்த்தங்களில் இவரே பெரிய தோற்றப் பொலிவோடு திகழ்பவர். பிரம்மா, குபேரன்,சந்திரன் ஆகியோரால் ஸ்தாபிக்கப்பட்டு பூஜிக்கப்பட்ட சோமேஸ்வரர் ஸ்தாபகலிங்கம் ஆகும். ராஜகோபுரம் வழியாக உள்நுழையும் போது   இடது பக்கத்தில் இந்திரனால் பூஜிக்கப்பட்ட ஒரு பிரம்மாண்ட சகஸ்ரலிங்கம் அமைந்துள்ளது.

நந்திகேஸ்வரரையும், கொடிமரத்தையும் தாண்டி உள்ளே சென்றதும் மூலவர் கிழக்கு நோக்கி லிங்க வடிவில் காட்சி தருகிறார். பிரகாத்தில் சூரியன், தட்சிணாமூர்த்தி, சோமாஸ்கந்தர், விநாயகர் இருவர், சுகந்தவனப்பெருமாள், விசுவநாதர், லிங்கோத்பவர், வீரபத்திரர்,

சப்தமாதர், கெஜலட்சுமி, சுப்பிரமணியர், பிரம்மா, நடராஜர், சண்டீஸ்வரர், சனீஸ்வரர், பைரவர், சந்திரன் ஆகியோர் அருள் பாலிக்கின்றனர்.

சோமேசர் சன்னதிக்கு வலது பக்கம் அமைந்திருப்பது சௌந்தரநாயகி அம்மனின் சன்னதி.  கருவறை மண்டப திருச்சுவரினை இச்சா சக்தி, ஞான சக்தி மற்றும் கிரியா சக்திகள் அலங்கரிக்கிறார்கள்.

 

 சொர்ண காளீஸ்வரர் – சொர்ணவல்லி : 


உமாதேவிக்கு அருள்பாலிக்க இறைவன் தானே சுயம்புலிங்கமாக எழுந்தருளியவரே சொர்ண காளீஸ்வரர்.     சௌந்தரநாயகி சன்னதிக்கு அடுத்து அமைந்து இருப்பது சொர்ணகாளீஸ்வரர் சன்னதி. இது இரண்டு பிரகாரத்துடன் கூடியது. கொடிமரம், நந்தீஸ்வரர் தாண்டி உள்ளே முதலில் அதிகார நந்தி, வல்லப கணபதி, நால்வர், அறுபத்து மூவர், பைரவர்,  சப்தமாதர், விநாயகர்,  சந்திரசேகரர்,  பஞ்சலிங்கங்கள், அஷ்டலட்சுமிகள்,  செந்தில் முருகன், அவரைத் தொடர்ந்து வருணனால் பூஜிக்கப்பட்ட வருணலிங்கம்,  நடராஜர், பைரவர் சன்னதிகள் உள்ளன.


 சுந்தரேஸ்வரர் –  மீனாட்சி அம்மன் : 


வேட்டைக்கு வந்த வரகுண பாண்டியன் இரவு மதுரைக்குத் திரும்ப முடியாமல் தவித்ததால் மீனாட்சி சுந்தரேஸ்வரர் அவருக்காக திருக்கானப்பேரில் வந்து காட்சி கொடுத்த அதிசயத்தை நினைவு கூறும் வண்ணம் எழுப்பப்பட்டது சுந்தரேஸ்வரர் மீனாட்சி கோவில் ஆகும்.

காளீஸ்வரர் சன்னதிக்கும்,சொர்ணவல்லி சன்னதிக்கும் இடையில் அமைந்திருப்பது சுந்தரேஸ்வரர் – மீனாட்சி திருக்கோவில்.  இங்கு பரிவார தேவதைகள், தனி சன்னதியில் நடராஜர், நவக்கிரகங்கள் அனைவரும் அருள் பாலிக்கின்றனர்.

சுவாமி சன்னதியை நோக்கியவாறு பிரகாரச் சுவரில் வரகுண பாண்டியன் கூப்பிய கரங்களுடன் நிற்கிறார். சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட தூண்கள், பெரிய கோபுரம், மண்டபங்கள் கொண்ட, சன்னதிகள் கொண்ட அழகிய ஆலயம்.

 

 அமைவிடம் 


 சிவகங்கையில் இருந்து 16 கி.மீ தொலைவில்தொண்டி செல்லும் சாலையில்  உள்ளது இவ்வாலயம்.   பேருந்து வசதி உள்ளது.   

 ஆலய முகவரி

  அருள்மிகு சொர்ணகாளீஸ்வரர் திருக்கோயில், காளையார் கோவில்,   சிவகங்கை மாவட்டம், 630 551. 

இவ்வாலயம் தினமும் காலை 5.30 மணி முதல் 12.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும். 

 சிறப்பு;மூன்று சிவன், மூன்று அம்பாள் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கும் ஆலயம்.


சகஸ்ரலிங்கம் (ஒரே லிங்கத்தில் ஆயிரம் லிங்கம்) உள்ள தலம். தங்கத்தால் ஆன பள்ளியறை உள்ள ஆலயம். இராமபிரான்  பிரம்மஹத்தி தோஷம் நீங்க வழிபட்ட தலம்.இத்தலத்தில் பிறந்தாலும், இறந்தாலும் முக்தி.


சொர்ணகாளீஸ்வரரை வழிபட்டால் செல்வ வளம் பெருகும்.இந்திரன், தனக்கு ஏற்பட்ட சாபத்தைப் போக்க வழிபாடு செய்த தலங்களில் ஒன்று.


 காளீஸ்வரர் – சுயம்புலிங்கம்

 சேமேசலிங்கம், சகஸ்ரலிங்கம், வருணலிங்ம் – திவ்ய லிங்கம்

 சுந்தரேஸ்வரர் – மானுட லிங்கம்

 சோமேசர் – ஆர்ஷ லிங்கம்


மருதுபாண்டிய சகோதரர்களைக் கைது செய்ய எண்ணிய ஆங்கிலேயர், அவர்கள் வந்து சரணடையாவிட்டால் இந்த பெரிய கோபுரத்தை இடித்துவிடப் போவதாகப் பறை சாற்றினர். காட்டில் திரிந்து வாழ்ந்து கொண்டிருந்த மருதுபாண்டியர் இதையறிந்து கோபுரத்தைக் காக்க விரும்பி தங்களது உயிரைப் பொருட்படுத்தாமல் வந்து சரணடைந்து, பின்னர் வெள்ளையரால் தூக்குத் தண்டனை விதிக்கப் பெற்றனர்







Swamy saranam..guruve saranam..today 22-1-22 pooja at sannidhanam

 

ராமேஸ்வரம் ஸ்ரீராமநாதசுவாமி கோயில் கருவறையில் உள்ள மணலால் ஆன மூலவர் ராமநாதசுவாமி சீதா தேவியால் கடற்கரை மணலிலே உருவாக்கபட்டு ஸ்ரீராமரால் வழிபாடு செய்யப்பட்ட சிவலிங்கமாகும்.

காசி விஸ்வநாதருக்கு நிகராக போற்றப்படக்கூடியதாக சீதா தேவியால் மணலில் உருவாக்கப்பட்ட
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி சிவலிங்கம்தான் இந்த கோயிலில் மூலவராக
இன்றும் உள்ளது.
ஸ்ரீராமநாதசுவாமி கோயில் கருவறையில் உள்ள மணலால் ஆன மூலவர் ராமநாதசுவாமி சிவலிங்கத்தினை தரிசிக்கும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைப்பதில்லை
காண்பதற்கரிய இந்த மணலால் ஆன மூலவர் ராமநாதசுவாமியின்
புகைப்படம் முதன் முறையாக அனைவரும் தரிசிப்பதற்காக கீழே!👇👇
No photo description available.

Swamy saranam..guruve saranam...today pooja at sannidhanam 21-1-22

 





ஓம் நமோ நாராயணா

🙏🌹🙏
🙏எல்லாம் அறிந்த நாரதருக்கே ஒரு சந்தேகம். ஒரு முனிவரிடம் கேட்டார்.🙏
""நாராயணன் என்றால் என்ன அர்த்தம்?''
முனிவர் சொன்னார். ""ரொம்ப சுலபம்..."நாரம்' என்றால் "தண்ணீர்'. "அயனன்' என்றால் "சயனித்திருப்பவன்'. அவன் கடலிலே சயனம் கொண்டவன் அல்லவா? அதனால் நாராயணன் என்றார்.
நாரதருக்கு இந்த பதிலில் திருப்தி ஏற்படவில்லை.
நாராயணனிடமே ஓடினார்.
""ஐயனே! உம்மை நான் நாராயணா...நாராயணா என்று துதிக்கிறேன். ஆனால், அதற்கு சரியான விளக்கம் தெரியவில்லை! அது உம் பெயர் தானே! நீரே விளக்கம் சொல்லுமே!''
குறும்புக்கார நாரதர் கேட்ட கேள்விக்கு, குறும்பு நாராயணனும் குறும்பாகவே பதிலளித்தான்.
""அடடா...எனக்கும் தெரியாதே! எதற்கும் நீ நர்மதைக்கரையில் இருக்கும் வண்டிடம் போய் கேள். அதற்குத் தெரியும் என்று கேள்விப்பட்டேன்''.
நாரதர் வண்டிடம் ஓடினார்.
""வண்டே! நாராயணன் என்ற பதத்திற்கு அர்த்தம் தெரியுமா?''
கேள்வியைக் கேட்ட மாத்திரத்திலேயே வண்டு விழுந்து இறந்து போனது.
நாரதர் நாராயணனிடம் திரும்பினார்.
""நாராயணன் என்ற நாமம் கேட்பவர்கள் இறந்து விடுவார்கள்..அப்படியானால் அது தானே அர்த்தம்,'' என்றார்.
""அப்படி நான் கேள்விப் பட்டதில்லையே! எதற்கும் அதோ! அந்தக் கிளியிடம் கேள்,'' என்று ஒரு மரத்தை நோக்கி கைநீட்டினார் பகவான்.
கிளியிடம் இதே கேள்வியை நாரதர் கேட்க, கிளி சுருண்டு விழுந்து இறந்து போனது.
நாரதருக்கு திக்கித்து விட்டது. மூச்சுக்கு முன்னூறு தடவை "நாராயணா' என்கிறோமே! நாமும் செத்து விடுவோமா!'' பயத்துடன் நாராயணனிடம் வந்தார்.
""பெருமாளே! அதற்கு அர்த்தம் "அது'தான்...உறுதியாகி விட்டது.
""நாரதா! அவை விதிமுடிந்து இறக்கின்றன. எதற்கும் அந்த பசுவின் கன்றிடம் போய் கேள்''.
""நல்லாயிருக்கு நாராயணா! இதை நான் போய் கேட்க, அந்த கன்று இறந்து போக, பசுக்கன்றை கொன்ற கொடியபாவம் என்னை அணுக வேண்டுமென திட்டம் போடுகிறீரா! முடியாது'' என்றார் நாரதர்.
""அப்படி ஏதும் ஆகாதென்றே நினைக்கிறேன். நீ ஒரு தபஸ்வி! தபஸ்விக்கு தைரியம் வேண்டாமோ!'' என்று உசுப்பிவிட்டார் பெருமாள்.
நாரதரும் சற்று தைரியத்துடன் கன்றிடம் போய் கேட்க, கன்றின் கதை முடிந்தது.
""நாராயணா! எல்லாம் போச்சு! இனிமேல் உம்மிடமில்லை பேச்சு! பசுக்கன்றைக் கொன்ற கொடிய பாவத்துக்கு என்னை ஆளாக்கி விட்டாய்! வருகிறேன்!'' எனக்கிளம்பியவரை, பெருமாள் தடுத்தார்.
""நாரதா! கலங்காதே! இதுவரை நீ கேட்டது பூச்சி, பறவை, விலங்குகளிடம்! இனி காசி இளவரசனிடம் போய் கேள், அவன் மனிதனாயிற்றே! அவனுக்கு ஏதும் ஆகாது!'' என்ற நாராயணனை,"" அய்யா! என்னை அரசதண்டனைக்கு ஆளாக்க எத்தனை நாள் திட்டம் போட்டு வைத்திருந்தீர்! முடியாதைய்யா! முடியாது'' என்ற நாரதரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.
நாரதர் பயந்தபடியே இளவரசனிடம் கேட்டார். அவனுக்கு ஏதும் ஆகவில்லை. அவன் அழகாகப் பதில் சொன்னான்.
""நாரதரே! வண்டாய், கிளியாய், கன்றாய் உம் முன் காட்சி தந்தது நானே! உம் வாயால் "நாராயணா' என்ற நாமத்தை திரும்பத் திரும்பக் கேட்டு உயர்ந்த மனிதப்பிறவி... அதிலும் செல்வங்களையெல்லாம் அனுபவிக்கத்தக்க இளவரசனாய் பிறந்திருக்கிறேன். தொடர்ந்து நாராயண மந்திரத்தை பக்தியுடன் ஓதி வைகுண்டம் செல்வேன்!'' என்றான்.
""ஆகா! "நாராயணன்' என்றால் "வாழும் காலத்தில் செல்வம் அருள்பவன்', "வாழ்வுக்குப் பின் பிறவிப்பணி தீர்ப்பவன்' என்றல்லவா அர்த்தம் எனப்புரிந்து கொண்டார் நாரதர். நாராயணா!! நாராயணா!!! 🙏


Swamy saranam.guruve saranam....today pooja at panvel sannidhanam 20-1-22

 



பழநி மலை முருகன் பற்றிய சில அதிசய தகவல்களும் ,எந்த அலங்காரத்தில் பழநி மலை முருகனை தரிசனம் செய்யலாம் என்பதற்கான விபரங்களும்....
தண்டாயுதபாணி விக்ரகத்திற்கு நான்கு விதமான அபிஷேக பொருட்கள் மட்டும் தான் உபயோகிக்கப்படுகிறது.
அவை நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி என்பவை.
மார்கழி மாதத்தில் மட்டும் பன்னீர் உபயோகப்படுத்தப்படுகிறது.
இவைகளில் சந்தனம், பன்னீர் தவிர மற்றவை எல்லாம் தண்டாயுதபாணியின் சிரசில் வைத்து, உடனே அகற்றப்படுகிறது.
அதாவது முடி முதல்,அடி வரை அபிஷேகம் என்கிற முழு அபிஷேகம் சந்தனத்துக்கும், பன்னீரும் மட்டும் தான்.
இதில் சிரசு விபூதி என்பது சித்தர் உத்தரவால் பக்தர்களுக்கு வழங்கபடுகிற ஒரு பிரசாதம் அது கிடைப்பது மிக புண்ணியம்.
ஒரு நாளைக்கு ஆறு முறை தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யபடுகிறது.
இது ஐந்து முதல் ஏழு நிமிடத்துக்குள் முடிந்துவிடும்.
அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்துவிட்டால், பின்னர் அடுத்த அபிஷேகம் வரை மாலை சாற்றுவதோ, பூக்களால் அர்ச்சனை செய்வதோ கிடையாது.
இரவில் முருகனின் மார்பில் மட்டும் வட்ட வடிவில் சந்தனக் காப்பு சார்த்தபடுகிறது.விக்ரகத்தின் புருவங்களுக்கிடையில் ஒரு பொட்டு அளவுக்கு சந்தனம் வைக்கப்படும்.
முன்னொரு காலத்தில் சந்தன காப்பை முகத்திலும் சார்த்திக் கொண்டிருந்தனர். பின்னாளில் இந்த முறை மாற்றப்பட்டது.
தண்டாயுதபாணி விக்ரகம் மிகுந்த சூடாக இருக்கும்.
ஆதலால் இரவு முழுவதும், அந்த விக்கிரகத்திலிருந்து நீர் வெளிப்படும்.
இந்த நீரை அபிஷேக தீர்த்ததுடன் கலந்து,காலை அபிஷேகம் நடக்கும் போது, அங்கு இருக்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகம் செய்கிறார்கள்.
தண்டாயுதபாணி சிலையை சுற்றி (இதுவரை ஒரு போதும் வெளியே உணர்ந்திராத)எப்போதும் ஒரு வித சுகந்த மணம் பரவி நிற்கும்.
தண்டாயுதபாணி சிலைக்கு இடது பக்கத்தில் ஒரு சின்ன மரகத லிங்கம் உள்ளது.
அவரை தரிசிக்க வலதுபக்கமாக சென்று, தீபம் காட்டுதல் வேண்டும். ஏனெனில் தீப ஒளி இல்லாமல் அந்த லிங்கத்தை தரிசிக்க இயலாது.
பழனியில் இரண்டு மரகத லிங்கம் உள்ளது. ஒன்று முருகர் சன்னதியில், இன்னொன்று போகர் சமாதியின் மேல் .இந்த இரண்டையுமே போகர் பூஜை செய்ததாக ஒரு தகவல் உண்டு.
தண்டாயுதபாணி சிலையை இராஜ அலங்காரத்தில் தரிசிக்க வேண்டுமா? ஆண்டி கோலத்தில்(கற்சிலை) தரிசிக்க வேண்டுமா?
எது ‌சிற‌ந்தது?
முற்றும் துறந்த தவ நிலை, அதாவது அலங்காரம் இல்லாமல் ஆண்டிக் கோலத்தில் பார்க்கும்போது நமக்குள் ஒரு மெய்ஞானம் உண்டாகும் என்பதற்காக,பெரிய ஞானிகளெல்லாம் அந்தக் கோலத்தைக் காண்பதற்காகத்தான் துடிப்பார்கள்.
முற்றும் துறந்தவர்கள், குடும்பத்தில் பல நிலைகளைக் கடந்தவர்கள் இவர்களெல்லாம் அந்தக் கோலத்தை விரும்பி பார்க்கலாம்.
வழக்குகளெல்லாம் நடக்கிறது, தீராத நோய்களெல்லாம் இருக்கிறது போன்ற பிரச்சனைகளுக்கு அலங்காரம் இல்லாத முருகனை வணங்குதல் நன்று.
20 வருடமாக வாதாடிக் கொண்டிருக்கிறேன்.தீர்ப்பு தள்ளி தள்ளிப் போகிறது என்றால் அதற்கு அலங்காரம் இல்லாத ஆண்டிக் கோல முருகன் வழிகாட்டுவார்.
தீராத நோய்,என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள், அவ்வளவுதான் என்ற நிலையில் அதற்கும் நீங்கள் முருகனின் ஆண்டி கோலத்தை தரிசிக்கலாம்.
மன குழப்பம் அடைந்து இருக்கிறார்களே, அவர்களையும் இந்த ஆண்டிக் கோல முருகனை வழிபடச் சொல்லலாம். அவர்களுக்கு மன நிலையில் மாற்றங்கள் ஏற்படுகிறது.
பேச இயலாதவர்கள், குறைபாடு உள்ளவர்கள், மன எழுச்சி, மன உளைச்சல் உள்ளவர்கள் இவர்களெல்லாம் ஆண்டி கோலத்தைப் பார்த்தால் ஒரு சாத்வீகம், சமத்துவம் அவர்கள் மனதிற்குள் பாயும்.
பெண்ணிற்கு கல்யாணம் முடிக்கப் போகிறோம், பத்திரிக்கை அடித்து கும்பிடப் போகிறோம், வீடு விற்பது, வாங்குவது, கட்டுவது, கட்டிய பின் கிரகப் பிரவேசம் செய்வதற்கு சாமி கும்பிடப் போகிறோம் ஆகிய இதுபோன்ற நிகழ்வுகளுக்கெல்லாம் ராஜ அலங்கார கோலத்தில் தரிசிக்கலாம்.
நம்மால் சரி செய்யக்கூடிய விஷயங்களுக்கு ராஜ அலங்கார தரிசனம்.
நம்மால் முடியாது, மருத்துவராலும் முடியாது, யாராலும் முடியாது போன்ற விஷயங்களுக்கெல்லாம் ஆண்டிக் கோலம் மிக மிக உகந்த தரிசனக் கோலம் ஆகும்.
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா !

SWAMY SARANAM...GURUVE SARANAM..TODAY POOJA AT SANNIDHANAM 19-1-22

 


*"#குடிமல்லம்" - 2300 ஆண்டுகள் பழமையான "லிங்க" கோயில்.*
திருப்பதியில் இருந்து 15 கிமீ தொலைவில் உள்ள "குடிமல்லம்" எனும் கிராமத்தில் உள்ள "பரசு ராமேஸ்வர" ஆலயத்தில் கிமு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த லிங்க வடிவம் காணப்படுகிறது. இக்கோயிலில் உள்ள செங்கல் கிபி ஒன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக அறியப்பட்டுள்ளது. பல்லவர், பாணர், சோழர் கால கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவற்றில் பழமையானது நந்திவர்மன் காலத்து கல்வெட்டு.
லிங்கம் 5 அடி உயரம். தடிமன் 1 அடி. லிங்கத்தின் தண்டு பகுதி 4 அடி. நுனியில் உள்ள மொட்டு 1 அடி. தண்டுப் பகுதியில் ஓர் வேடன் உருவம் வலது கையில் ஆட்டை தொங்கவிட்டும், மறு கையில் சிறு பாத்திரமும், தோளில் வேட்டை கோடரி (பரசு) யும் வைத்துள்ளவாறு செதுக்கப்பட்டுள்ளது. மார்பில் பூணூல் இல்லை. ஜடாமுடி தரித்துள்ளது. லிங்கத்தின் கீழ் யோனி பீடம் (ஆவுடை) காணப்படவில்லை.
இக்கோவில் கலை காணப்படுகிறது.
ரேணிகுண்டாவிற்கு அருகில் உள்ள ஊர்.
இந்த குடிமல்லம் சிவன் கோயில் ASI (Archaeological Survey of India) -ன் கட்டுப்பாட்டில் உள்ளது.
உலகில் சிவலிங்கத்தை ஆராய்ச்சி செய்பவர்களின் கருத்துப்படி இதுவே மிகவும் பழமையான சிவலிங்கம்.
ஆன்மீகத்தில் முன்னேற விரும்பும் ஒவ்வொரு மனிதனும் நிச்சயம் காண வேண்டிய சிவ ஸ்தலம்.
உண்மை ஆன்மீகத்திற்கான திறவுகோல் இந்த சிவ லிங்கம். உண்மையில் தேடுபவர்களுக்கு மட்டுமே உண்மைப் பொருள் விளங்கும். ஆன்மீக முன்னேற்றம் பெற விரும்பும் ஒவ்வொருவரும் வாழ்கையில் ஒரு முறையாவது அந்த சிவலிங்கத்தை நேரில் சென்று தரிசனம் செய்ய தவறாதீர்கள்.
*ஓம் சர்வம் சிவார்ப்பணம்.🙏*




Swamy saranam..guruve saranam...pooja at panvel sannidhanam today 18-1-22

 



தை பூசம்
‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்று பாடிய வள்ளலார் மனித சமுதாயத்தை வாழ்விக்க வந்த மகான். வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகள் 5.10.1823 அன்று கடலூர் மாவட்டம் மருதூர் என்ற ஊரில் பிறந்து 30.1.1874 அன்றைய நாளில் மேட்டுக்குப்பம் சித்தி வளாகம் மாளிகையில் தனது பூதவுடலை சோதியுடன் கலந்து மறைந்தார் என்பது வரலாறு.
எளிய குடும்பத்தில் பிறந்த அவரை உலகம் வள்ளலார் என்று வாஞ்சையுடன் அழைக்கும் என்றும் யாரும் அந்த தருணத்தில் எதிர்பார்க்கவில்லை. அவர் அவதாரகாலம் மனித சமூகத்துக்கு அளித்த மாபெரும் கருணைக்கொடை. அன்போடும் அறம் சார்ந்த உலக வாழ்க்கையை துய்க்க வேண்டும் என்று மாறுபட்ட வழிமுறையில், சித்தாந்தத்தில் மனித சமூகத்தை ஒழுங்குபடுத்த முனைந்த மிகப்பெரிய ஞானி. தமிழுலகம் கண்ட தவசீலர் அவர். மனித சமூகத்திற்கு அவர் அளித்த அறிவுக்கொடைகள் அளப்பரியது.
அறம் சார்ந்த வாழ்க்கை, வாழ்கின்றபோதுதான் மனிதப்பிறவி பெருமை அடைகிறது. அரசன் நீதி தவறினால் அறக்கடவுள் தண்டிக்கும். உயிர்களிடத்தில் அன்பு வேண்டும். உயிர்களிடத்தில் வேற்றுமை இல்லை. அவற்றை கொல்ல யாருக்கும் உரிமை இல்லை. தாவரங்களுக்கும் உயிர் உள்ளது என்று உலகிற்கு ஆணித்தரமாக எடுத்துரைத்தார் வள்ளலார்.
திருமூலர், திருவள்ளுவர், இயற்றிய நூல்களை தனது வழிக்காட்டி நூல்கள் என்று கருதிய அவர் உயிர் வதையை மிகவும் சாடினார். ஜீவ காருண்ய ஒழுக்கமில்லாமல் யோகம், தவம், விரதம், ஜெபம், தியானம் முதலியவைகளை செய்கின்றவர்கள் கடவுளின் அன்புக்கு பாத்திரமாகமாட்டார்கள் என்றும், எனவே உயிர்க்கொலைகள் கூடாது என்றும் உலகிற்கு அறைகூவல் விடுத்தார்.
அன்று முதல் இன்று வரை பசிப்பிணியால் மக்கள் வாடுவது அனைவரும் அறிந்த ஒன்று. பசி வந்திட பத்தும் பறந்துபோம் என்று அவ்வைபெருமாட்டியும், உண்டிகொடுத்தோர் உயிர்கொடுத்தோரே என்று சீத்தலைச்சாத்தனார் கூறிய மணிமேகலை செய்தியும் வள்ளலாரை மிகவும் வாட்டியது அனைவரும் உண்ண உணவு வேண்டும், பசிப்பிணி அகல வேண்டும் என்ற பொதுவுடமை சித்தாந்த கருத்தினை பாமரமக்களும் புரியும் வண்ணம்
“வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் பசியினால் இளைத்தே
வீடுதோ றிரந்தும் பசியறாது அயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்
என்று கூறினார். எனவே அவர் கண்ட லட்சியங்களை நிறைவு செய்ய, குறிப்பாக ஏழைகளுக்கு உணவளிக்க 1870-ம் ஆண்டு எரியூட்டப்பெற்ற சமையல் அடுப்பு இன்றும் அணையாமல் எரிந்து கோடானு கோடி மக்களின் பெரும் பசியை நீக்கிக்கொண்டிருக்கிறது. வள்ளலார் சமரச சன்மார்க்க சங்கம் என்ற அமைப்பைத் தோற்றுவித்து மக்களுக்கு போதனைகள் செய்தார். நூல்கள் உரைகள் எழுதுதல் பத்திரிகை நடத்துதல், ஞான விளக்கம், சொற்பொழிவு போன்றவை செய்தல், சித்த மருத்துவம் மூலிகைகள் மருத்துவ குறிப்புகள் போன்றவற்றை அருளி சமூகத்தை வழி நடத்திய சீர்திருத்தவாதி.
திருவருட்பாவை மருட்பா என கூறி யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் மஞ்சக்குப்பம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வாதிட்டார். அப்போது வள்ளலார் நீதிமன்றம் வந்தார். அவரைப்பார்த்து ஆறுமுகநாவலர் உள்பட அனைவரும் எழுந்து நின்று வணங்கினர். வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிகழ்வு அவருடைய ஞானமார்க்கத்திற்கு உள்ள அரிய எடுத்துக்காட்டு. இறுதியாக திருவருட்பா பாடல்கள் மூலமும், கடிதங்கள் மூலமும், உரைநடை விளக்கங்கள் மூலமும் சமரச சுத்த சன்மார்க்க கருத்துகளை வருங்காலத் தமிழ் சமுதாயத்திற்கு மேலே கண்ட கருத்துகளை சுருக்கமாக அளித்துள்ளார். அவைகளில் சில வருமாறு.
1. எல்லா உயிர்களையும் தம் உயிர் போல் பாவித்து தாவரங்கள் முதலான அனைத்து உயிர்களிடமும் அன்பு செலுத்த வேண்டும். இதுதான் மனிதநேயம்.
2. கொல்லாமை நோன்பும், புலால் உண்ணாமையும் ஆன்ம சாதனைக்கு இன்றியமையாதவை.
3. உருவ வழிபாடு தேவையற்றது. அருட்பெரும் ஜோதி ஆண்டவர் ஒருவரே தெய்வமாவார். அவர் ஒவ்வொரு மனிதனுக்குள்ளேயும் இருக்கிறார்.
4. தவமுறையில் “ஓம் சிவாய நம” என்ற மந்திரத்தை ஜெபித்து வந்தால் நமக்குள் உறைந்து வாழும் ஆண்டவரை உச்சந்தலையில் ஒளிவடிவில் காணலாம்.
5. தவநெருப்பினால் உடலின் குறைபாடுகளை எரிப்பதன் மூலம் எலும்பு, தசைகளாலான உடம்பு காற்றுடம்பாகும். காற்றுடம்பு பொன்னுடம்பாகும். பொன் உடம்பு ஒளி உடம்பாகும். அந்த ஒளி உடம்போடு இயற்கையுடன் கலந்து அருவமாகி எக்காலத்திலும் மரணமில்லாப் பெருவாழ்வு வாழலாம்.

இதுபோன்ற அறிய செய்திகளை அளித்துச்சென்ற வள்ளலார் தைப்பூசத்தன்று ஆன்மஜோதியில் மறைந்து கலந்து விட்டார். அப்பெருமகனாரின் கோட்பாடுகளை வாழ்க்கையில் பின்பற்றுவது அவருக்கு நாம் செய்யும் நன்றிக்கடன் மட்டுமல்ல மனித சமூகம் உய்ய வழியும் அதுதான். அவருடைய திருநாமத்தை போற்றுவோம்


Swamy saranam..guruve saranam...today pooja at panvel sannidhanam 17-1-22

 


சித்தர் ஜீவ சமாதியும்.... பிரச்சனை தீர வழிபிறப்பும்...

சித்தர்களை யாரும் நேரடியாக பார்க்க முடியாது. அதனால். நமது கோரிக்கைகளை கடவுளை அடைய ஒரு கருவியாக இருப்பவர்கள்தான் சித்தர்கள். இன்னும் சொல்லப் போனால், கடவுளிடம் கேட்பதை, சித்தர்களே முன்வந்து நமக்கு அளிப்பார்கள் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை.
சித்தர் என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்று பொருள். சிவத்தை நினைத்து அகக்கண்ணால் கண்டு, தியானித்து தரிசனம் செய்து,
ஆத்ம சக்தியை எழுப்பி, தெய்வீக செயல்களையும், நினைத்த காரியங்களையும் செய்வர்கள்தான் சித்தர்கள். இதையே சித்து விளையாட்டு என்று அழைக்கின்றனர்.
அதனால்தான், இதுவரை கோவில்கோவிலாக சென்றவர்கள்கூட, சித்தர்கள் ஜீவசமாதி உள்ள கோவில்களை கேட்டு அறிந்து, தேடிச்சென்று சுவாமி தரிசனம் செய்து வான் புகழும், அளவில்லா செல்வமும், நல்ல ஆரோக்கியமும், மனதில் மகிழ்ச்சியுடனும் வாழ்கின்றனர்.
உதாரணத்திற்கு, தமிழக மக்கள் மட்டுமின்றி கேரளா மக்களும் பழனிமலை முருகனை மனம் உருக வழிபட காரணம் அங்கு போகர் சித்தர் ஜீவசமாதி உள்ளதே.
அதே போன்று, இந்தியாவில் உள்ள பெரும்பெரும் பணக்காரர்கள் எல்லாம், திருப்பதி மலை நோக்கி சென்று வருவதற்கு அங்கு, கொங்கணவர் என்ற சித்தர் ஜீவசமாதி உள்ளதே. இப்படி பெருமைமிகு சித்தர்களில் 18 பேர்தான் தலையாய சித்தர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.
அருளும், அன்பும், சிவமும், அளவற்ற சக்தியையும் ஒருங்கே பெற்றுள்ள அந்த 18 சித்தர்கள் ஜீவசமாதி உள்ள பெருமைமிகு கோவில்கள்
அகஸ்தியர் – திருவனந்தபுரம்
கொங்கணர் – திருப்பதி
சுந்தரனார் – மதுரை
கரூவூரார் – கரூர்
திருமூலர் – சிதம்பரம்
தன்வந்திரி – வைதீஸ்வரன்கோவில்
கோரக்கர் – பொய்யூர்
குதம்பை சித்தர் – மாயவரம்
இடைக்காடர் – திருவண்ணாமலை
இராமதேவர் – அழகர்மலை
கமலமுனி – திருவாரூர்
சட்டமுனி – திருவரங்கம்
வான்மீகர் – எட்டிக்குடி
நந்திதேவர் – காசி
பாம்பாட்டி சித்தர் – சங்கரன்கோவில்
போகர் – பழனி
மச்சமுனி – திருப்பரங்குன்றம்
பதஞ்சலி – இராமேஸ்வரம்
மனிதர்கள் யாவரும் ஏதாவது ஒரு திதியில் நட்சத்திரத்தில் பிறந்திருப்பார்கள். இதை அவரவர் ஜாதகத்தில் அறியலாம். பலருக்கும் தன் பாவ வினையால் எவ்வளவு முயற்சித்தும் தெய்வ அருளை பெறமுடியாமல் இருப்பார்கள். அவர்கள் அவர்கள் தன் திதியிலோ அல்லது நட்சத்திரத்திலோ அல்லது நட்சத்திரத்திலோ பிறந்த சித்தர்களைக் கண்டு வணங்கினால் பிரச்சனை தீர வழிபிறக்கும்.
ஒரு முறையாவது உங்கள் சித்தர் ஜீவ சமாதி நேரில் சென்று ஜென்ம நட்சத்திரத்திலோ, திதியிலோ சென்று தரிசித்துவிட்டு பின்பு வீட்டிலேயே மறுமுறையில் அந்த குறிப்பிட்ட நாளில் மாதாமாதம் உபவாசம் இருந்து வணங்கிவந்தால் பல மாறுதலான வாழ்வு தங்களுக்கு அமையும்.
வெகு தொலைவில் சில ஜீவ சமாதிகள் அமைந்துள்ளதால் அங்கு சென்றுவர இயலாதவர்கள் வீட்டிலேயே ஒரு வெள்ளை விரிப்பின்மீது அமர்ந்து உங்கள் சித்தரின் பெயரை உச்சரித்து முடிந்தால் அவரின் மந்திரங்களைக்கூறி தியானம் செய்யுங்கள். நல்லதே நடக்கும்.
திதியில் பிறந்தவர்களே அனைவரும் எனவே திதி இல்லாமல் விதி அமையாது. உங்கள் நட்சத்திர நாளை பார்த்து பூஜிக்க முடியாவிட்டாலும் உங்கள் திதி நாளில் பூஜிக்கலாம்.
அதுவும் முடியாவிட்டால் அமாவாசை பௌர்ணமி திதிகளில் வழிபாடு செய்யலாம். சில சித்தர்களின் ஜீவ சமாதி எங்குள்ளது என்று தெரியாமலேயே இருக்கிறது.
சிலர் அங்குள்ளது இங்குள்ளது எனவும் தன் ஊரை வளர வைக்க எத்தனித்து இங்குதான் சமாதி உள்ளது. ஓலைச்சுவடி ஆதாரம் உள்ளது என ஒரு கதையையும் உருவாக்கிய சம்பவம் நிறைய உள்ளது.
எது எப்படியோ நம்பிக்கையே தெய்வம். அந்த நம்பிக்கையோடு இருக்கும் இடத்தை நாடிச்சென்று வழிபாடு செய்யுங்கள்.
சித்தர்கள் எந்த திதியில் பிறந்தார்கள் என்பதை வரலாறு சரியாக அனைவருக்கும் குறிப்பிடவில்லை. ஆனால் நட்சத்திரங்களையும் பிறந்த தமிழ் மாதங்களையும் குறிப்பிட்டுள்ளார்கள்.
கீழே எந்தெந்த நட்சத்திரத்தில் சித்தர்கள் பிறந்தார்கள் அவர்கள் ஜீவ சமாதி எங்குள்ளது. அவர்களுக்கான மந்திரம் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது பயன்படுத்தி வளம் காணுங்கள்.
அசுவினி நட்சத்திர சித்தர் பெயர்🌼🌿
காளங்கிநாதர் ஆவார். இவர் சமாதி மற்றும் சக்தி அலைகள் கஞ்சமலை மற்றும் திருக்கடையூர் ஆகிய தலங்களில் உள்ளது.
அவரவருக்குபெயரே மந்திரம். எனவே சித்தர்களின் பெயரை மரியாதையாக உச்சரித்தலே போதும்.
ஓம் குருவே சரணம் என மூன்றுமுறை கூறி ஓம் ஸ்ரீ காளங்கி நாதர் சித்த குருசுவாமியே சரணம் சரணம் என முடிந்தளவு மனம் விரும்பும் வரை கூறலாம்.
அடுத்து பரணி நட்சத்திரம் சித்தர் போகர் ஆவார்.
இவர் பழனி முருகன் சன்னதியில் சமாதி உள்ளது.
அடுத்து கிருத்திகை நட்சத்திரம் ரோமரிஷி சித்தர்ஆவார்.
இவருக்கு சமாதியும் இல்லை. இவர் உடல் அழியவும் இல்லை. நேரே கைலாயத்திற்கு சென்றுவிட்டார் என வரலாறு கூறுகிறது.
இவரை திங்கள்கிழமை வெள்ளை ஆடை அணிந்து வடக்கு நோக்கி திருக்கயிலை இருப்பதாக பாவித்து வணங்கவும்.
அடுத்து ரோகிணி நட்சத்திரம் சித்தர் மச்சமுனி ஆவார்.
இவர் ஜீவ சமாதி திருப்பரங்குன்றத்தில் உள்ளது.
அடுத்து மிருகசீரிடம் நட்சத்திரம் சித்தர் பாம்பாட்டி சித்தர்
ஜீவ சமாதி சங்கரன் கோயில் என்ற ஊரில் உள்ளது.
இன்னொருவர் சட்டமுனி சித்தராவார். ஊர் திருவரங்கம் ஆகும். சில நட்சத்திரக்காரர்களுக்கு மட்டும் இரண்டு சித்தர் வருவர்.
அடுத்து திருவாதிரை நட்சத்திரம் சித்தர் இடைக்காடார் ஜீவ சமாதி திருவண்ணாமலை.
அடுத்து புனர்பூச நட்சத்திரம் சித்தர் தன்வந்தரி ஆவார்.
இவர் வைதீஸ்வரன் கோவிலில் ஜீவ சமாதி ஆனவர்.
அடுத்து பூசம் நட்சத்திரம் கமல முனி சித்தர் ஆவார்.
இவர் திருவாரூர் என்ற ஊரில் ஜீவ சமாதி உள்ளது.
அடுத்து ஆயில்யம் நட்சத்திரம் இதற்கான சித்தர் அகத்தியர்.
இவர் ஒளிவட்டம் குற்றால பொதிகைமலையில் உள்ளது.
சமாதி கேரள தலைநகரம் திருவனந்தபுரம் இங்கு உள்ளது.
அடுத்து மகம் நட்சத்திரம் இந்த நட்சத்திரத்தில் அவதரித்தவர்
சிவ வாக்கிய சித்தர் ஆவார்.
இவர் ஜீவ சமாதி கும்பகோணத்தில் உள்ளது. பெரும்பாலும் சித்தர்கள் ஜீவ சமாதி சிவாலயமாகவே இருக்கும்.
அடுத்து பூரம் நட்சத்திரம் இவர் சக்தியின் அருளைப் பெற்ற நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்தில் அவதரித்த தெய்வ பெண்மணி
ஸ்ரீ ஆண்டாள் ஆவார்.
இவர் பூமாதேவி அம்சமாக உள்ளார். இவரை வணங்க ஏற்ற இடம் ஸ்ரீவில்லிபுத்தூர் மட்டுமே.
ஏனெனில் இவர் தோன்றிய இடமே அங்குதான்.
அடுத்து ராமதேவ சித்தரும் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்தான்.
இவர் மாற்று பெயர் யாகோப்பு என்றும் உள்ளது. இவர் ஜீவசமாதி அரபு நாடான மெக்காவில் உள்ளது. இவர் ஒளி வந்துபோகும் இடம் அழகர் மலையாகும். இவரை வழிபட நம் நாட்டினர் அழகர் மலைக்குத்தான் செல்கிறார்கள்.
அடுத்து உத்திரம் நட்சத்திரம் இதில் அவதரித்த சித்தர் காகபுஜண்டர் ஆவார். இவர் ஜீவசமாதி கோயில் திருச்சி உறையூரில் உள்ளது.
அடுத்து அஸ்தம் நட்சத்திரம் சித்தர் கருவூரார் ஆவார்.
இவர் சமாதி கரூரில் உள்ளது. அடுத்து இவர் ஒளிவட்டம் வந்து செல்லும் இடம் தஞ்சாவூர் பெரிய கோயில் ஆகும்.
அடுத்து சித்திரை நட்சத்திரம் இதற்கான சித்தர் புண்ணாக்கீசர் ஆவார்.
நண்ணா சேர் என்ற இடத்தில் இவர் ஜீவ சமாதி உள்ளது.
அடுத்து சுவாதி நட்சத்திரம் இதற்கான சித்தர் புலிப்பாணி ஆவார்.
சமாதி பழனி அருகில் வைகாவூர் என்ற இடத்தில் உள்ளது.
அடுத்து விசாகம் நட்சத்திரம் இதற்கான சித்தர் நந்தீசர் மற்றும் குதம்பை சித்தர் ஆவார். நந்தீசர் காசி நகரத்திலும் (பனாரஸ்), குதம்பை சித்தர் மாயவரத்திலும் ஜீவசமாதி உள்ளது.
அடுத்து அனுஷம் நட்சத்திரம் சித்தர் வால்மீகி அல்லது வான்மீகர் என்று அழைக்கப்படுபவராவார். இவர் எட்டுக்குடியில் ஜீவசமாதி உள்ளது.
அடுத்து கேட்டை நட்சத்திரம் இதற்கான சித்தர் பகவான் வியாசர் ஆவார். இவர் உடல் அழிவற்றது. எனவே காற்றோடு காற்றாக கலந்து இருப்பார். இவரை நினைத்தாலே போதும். அவ்விடம் வருவார்.
அடுத்து மூலம் நட்சத்திரம் இதற்கான சித்தர் பதஞ்சலி ஆவார்.
இவர் சமாதி ராமேஷ்வரத்தில் உள்ளது.
அடுத்து பூராடம் நட்சத்திரம் இதற்கான சித்தர் பூரம் நட்சத்திரத்திற்கு சொல்லப்பட்ட ராமதேவர் எனும் யாகோப்பு சித்தரே ஆவார்.
அழகர்மலை மற்றும் மெக்காவில் ஜீவ ஒளி உள்ளது.
அடுத்து உத்திராடம் நட்சத்திரம் இதற்கான சித்தபிரான் கொங்கணர்.
இவர் ஜீவசமாதி திருப்பதி ஆகும்.
அடுத்து திருவோணம் நட்சத்திரம் இதற்கான சித்தர் தட்சிணாமூர்த்தி சுவாமிகள் ஆவார்.
இவர் சமாதி பாண்டிச்சேரி அடுத்து உள்ள பள்ளித்தென்னல் என்ற இடத்தில் உள்ளது.
அடுத்து அவிட்டம் நட்சத்திரம் இதற்கான சித்தர் திருமூலர் ஆவார்.
இவர் சிதம்பரத்தில் ஜீவசமாதி உள்ளது.
அடுத்து சதயம் நட்சத்திரம் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் கௌபாலர் ஆவார். இவரின் சமாதி இங்குதான் என வரலாறு தெளிவாக குறிக்கவில்லை. எனினும் மன ஒழுக்கத்தோடு இவரை நினைத்தாலே தேடிவந்து அருள்புரிவார் எனக் குறிப்பு உள்ளது.
அடுத்து பூராட்டாதி நட்சத்திரம் இதற்கான சித்தர் சோதிமுனி ஆவார்.
இவர் ஜோதி வடிவிலே ஜீவனாக உள்ளவர். அதனால் இவருக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் அங்கு அருள்பாலிப்பார். தனித்து சமாதி என்று குறிப்பிடும்படியாக தெரிவிக்கவில்லை.
அடுத்து உத்திரட்டாதி நட்சத்திரம் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் டமரகர் சித்தர் ஆவார். 🌼
இவரும் நேரிடையாக காற்றில் ஐக்கியமாகி கலந்துவிட்டதென வரலாறு கூறுகிறது. இவரை சிவாலயத்தில் ஒலிக்கும் இசை வாத்தியங்களில் ஏழாம் ஓசையில் ஒலியாக வந்து இறைவனுக்கு இசை முழக்கத்தால் சேவை செய்வார் எனக் குறிப்பிடுகிறார்கள்.
இவரை வீட்டிலேயே சிறுமணி ஓசையில் வரவழைத்து அவர் அங்கு வந்ததாக பாவித்து வணங்கலாம்.
அடுத்து ரேவதி நட்சத்திரம் இதற்கான சித்தர் சுந்தரானந்தர் ஆவார்.,
இவர் ஜீவசமாதி கோயில் மதுரையில் உள்ளது, அறிக.
மனத்தூய்மையும், உடல் தூய்மையும்,
கர்ம தூய்மையும் (பாவமற்ற கர்மாவைத் தொடர்தல்) தனிஅறையும் கொண்டு, ஒற்றை தீபம் மற்றும் ஏற்றி மன ஒருநிலைப்பாட்டோடு உங்கள் சித்தரை வணங்கி வாருங்கள்.
நிச்சயம் அவர்கள் அருளை தர தவறமாட்டார்கள். உங்களிடம் உள்ள பாவ கர்மாவிற்கு தயங்கி தெய்வம் துணைக்கு எளிதில் வரமாட்டார்கள். ஆனால் சித்தர்கள் அவ்வாறில்லை.
தன்னை அழைத்தவர்களுக்கு எதாவது ஒரு வழியில் வழிகாட்ட தயங்கமாட்டார்கள். எனவே ஒரு தினத்தில் சில நிமிடங்களையாவது சித்தர் வழிபாட்டிற்கு செலவிடுங்கள்.
சித்தர் பூஜை செய்பவர்கள் நீத்தாருக்கு திதி பார்த்து தெவசம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. குறைந்தது சித்த தியானத்திற்கு அரைமணி நேரமாவது ஒரு நிலையில் அமர வேண்டும்.
இந்த வழிமுறையை கடைபிடித்து உங்கள் கஷ்டத்தையும், வறுமையையும் போக்கிக்கொள்ளுங்கள்
27 நட்சத்திரங்களும் சித்தர்களும்
#அசுவினி (மேஷம்) = ஸ்ரீபோகர், பழனி
#பரணி(மேஷம்) = ஸ்ரீகோரக்கர், வடக்குப்பொய்கைநல்லூர்(நாகப்பட்டிணம்), ஸ்ரீபோகர், பழனி
#கார்த்திகை1(மேஷம்) = ஸ்ரீபோகர், பழனி, ஸ்ரீதணிகைமுனி மற்றும் ஸ்ரீசம்ஹாரமூர்த்தி, திருச்செந்தூர்; ஸ்ரீபுலிப்பாணி, பழனி
#கார்த்திகை 2, 3, 4 (ரிஷபம்) = ஸ்ரீமச்சமுனி, திருப்பரங்குன்றம் ஸ்ரீவான்மீகர், எட்டுக்குடி; ஸ்ரீஇடைக்காடர், திரு அண்ணாமலை
#ரோகிணி (ரிஷபம்) = ஸ்ரீமச்சமுனி, திருப்பரங்குன்றம்,
ஸ்ரீலஸ்ரீசிவானந்த மவுனகுரு யோகீஸ்வரர், திருவலம்
#மிருகசீரிடம்1, (ரிஷபம்)=சிவானந்த மவுனகுரு யோகீஸ்வரர்.
#மிருகசீரிடம்2 (ரிஷபம்) = ஸ்ரீசட்டைநாதர், சீர்காழி மற்றும் ஸ்ரீரங்கம்.
ஸ்ரீபாம்பாட்டி சித்தர், மருதமலை மற்றும் சங்கரன்கோவில்.
#மிருகசீரிடம்3 (மிதுனம்)= ஸ்ரீபாம்பாட்டி சித்தர், மருதமலை மற்றும் சங்கரன் கோவில்.
#மிருகசீரிடம்4 (மிதுனம்)=அமிர்த கடேஸ்வரர் ஆலயம், திருக்கடையூர்.
#திருவாதிரை (மிதுனம்) = ஸ்ரீஇடைக்காடர் – திருஅண்ணாமலை, ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம்.
#புனர்பூசம்1,2,3(மிதுனம்)=ஸ்ரீதன்வந்திரி,ஸ்ரீவசிஷ்டர் – வைத்தீஸ்வரன்கோவில்,
#புனர்பூசம் 4 (கடகம்)= ஸ்ரீதன்வந்திரி, வைத்தீஸ்வரன் கோவில்.
#பூசம்(கடகம்)=ஸ்ரீகமலமுனி, திருவாரூர்; ஸ்ரீகுருதட்சிணா மூர்த்தி,திருவாரூர் (மடப்புரம்)
#ஆயில்யம்(கடகம்)=ஸ்ரீகோரக்
நல்லூர்,நாகப்பட்டிணம் அருகில்; ஸ்ரீஅகத்தியர், ஆதி கும்பேஸ்வரர்கோவில், கும்பகோணம்; ஸ்ரீஅகத்தியர், திருவனந்தபுரம், பொதியமலை, பாபநாசம்.
#மகம் (சிம்மம்), ஸ்ரீராமதேவர்,அழகர் கோவில்,மதுரைஅருகில்
#பூரம்(சிம்மம்)=ஸ்ரீராமதேவர்,அழகர் கோவில்,மதுரைஅருகில்
#உத்திரம்1(சிம்மம்)= ஸ்ரீராமத்தேவர், அழகர்கோவில், மதுரை அருகில், ஸ்ரீமச்சமுனி, திருப்பரங்குன்றம்
#உத்திரம்2(கன்னி)=ஸ்ரீஸ்ரீசதா சிவப்ரும்மேந்திரா – நெரூர்;
#உத்திரம்3 = ஸ்ரீகரூவூரார் – கரூர் பசுபதீஸ்வரர் கோவில்
#உத்திரம்4 = ஆனிலையப்பர் கோவில் – கருவூர்; கல்யாணபசுபதீஸ்வரர் கோவில் – தஞ்சாவூர்.
#அஸ்தம்(கன்னி)=ஆனிலையப்பர் கோவில் – கரூவூர், ஸ்ரீகரூவூரார் – கரூர்.
#சித்திரை1,2(கன்னி)=ஸ்ரீகருவூரார் – கரூர்,ஸ்ரீசச்சிதானந்தர் – கொடுவிலார்ப்பட்டி.
#சித்திரை3, 4(துலாம்) = ஸ்ரீகுதம்பைச் சித்தர் – மாயூரம்
#சுவாதி (துலாம்)=ஸ்ரீகுதம்பைச் சித்தர் -மாயூரம்
#விசாகம்1,2,3 (துலாம்) = ஸ்ரீநந்தீஸ்வரர் – காசி,ஸ்ரீகுதம்பைச் சித்தர் – மயிலாடுதுறை
#விசாகம்4 (விருச்சிகம்)=ஸ்ரீகுதம்பைச் சித்தர் – மயிலாடு துறை, ஸ்ரீவான்மீகர் – எட்டுக்குடி, ஸ்ரீஅழுகண்ணி சித்தர் – நீலாயதாட்சியம்மன்கோவில், நாகப்பட்டிணம்
#அனுஷம்(விருச்சிகம்)= ஸ்ரீவான்மீகி -எட்டுக்குடி, தவத்திரு.சிவஞான குருசாமிகள் என்ற அரோகரா சாமிகள், தோளூர்பட்டி, தொட்டியம்-திருச்சி
#கேட்டை(விருச்சிகம்)=ஸ்ரீவான்மீகி – எட்டுக்குடி, ஸ்ரீகோரக்கர் – வடக்குப் பொய்கைநல்லூர்,நாகப்பட்டிணம் அருகில்.
#மூலம்(தனுசு)=ஸ்ரீபதஞ்சலி – ராமேஸ்வரம், சேதுக்கரை, திருப்பட்டூர்
#பூராடம்(தனுசு)=ஸ்ரீபதஞ்சலி – ராமேஸ்வரம், ஸ்ரீசித்ரமுத்து அடிகளார் – பனைக்குளம் (இராமநாதபுரம்), ஸ்ரீபுலஸ்தியர் – ஆவுடையார்கோவில்
#உத்திராடம்1(தனுசு)=ஸ்ரீகொங்கணர் – திருப்பதி, ஸ்ரீதிருவலம் சித்தர் – திருவலம்(ராணிப்பேட்டை), ஸ்ரீலஸ்ரீமவுன குருசாமிகள் – தங்கால் பொன்னை (வேலூர் மாவட்டம்)
#உத்திராடம் 2,3,4 (மகரம்) =ஸ்ரீகொங்கணர் – திருப்பதி
* திருவோணம்(மகரம்)=ஸ்ரீகொங்கணர் – திருப்பதி, ஸ்ரீசதாசிவப்ரும்மேந்திரால் – நெரூர், ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம், ஸ்ரீகருவூரார் – கரூர், ஸ்ரீபடாஸாகிப் – கண்டமங்கலம்.
#அவிட்டம்1,2 (மகரம்); அவிட்டம் 3,4 (கும்பம்)= ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம் (திருமூலகணபதி சந்நிதானம்).
#சதயம் (கும்பம்)= ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம், ஸ்ரீசட்டநாதர் – சீர்காழி, ஸ்ரீதன்வந்திரி, ஸ்ரீதன்வந்திரி – வைத்தீஸ்வரன் கோவில்.
#பூரட்டாதி 1,2,3 (கும்பம்)= ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம், ஸ்ரீதட்சிணாமூர்த்தி – திருவாரூர். ஸ்ரீகமலமுனி – திருவாரூர்,ஸ்ரீகாளாங்கிநாதர் – திருவாடுதுறை, சித்தர் கோவில்,சேலம் ஸ்ரீசதாசிவப்ரும் மானந்த ஸ்ரீசிவபிரபாகர சித்த யோகி. பரமஹம்ஸர் – ஓமலூர் – பந்தனம்திட்டா.
#பூரட்டாதி4(மீனம்)=ஸ்ரீசுந்தரானந்தர் – மதுரை, ஸ்ரீஆனந்த நடராஜ சுவாமிகள் – குட்லாம்பட்டி(மதுரை), பரம்மானந்த ஸ்ரீசித்தயோகி பரமஹம்ஸர்,ஓமலூர்.
#உத்திரட்டாதி(மீனம்)=சுந்தரானந்தர் ஃ மதுரை; ஆனந்த நடராஜ சுவாமிகள் – குட்லாம்பட்டி(மதுரை), ஸ்ரீமச்சமுனி – திருப்பரங்குன்றம்.
#ரேவதி(மீனம்)=ஸ்ரீசுந்தரானந்தர் – மதுரை, குனியமுத்தூர் சுவாமிகள் என்ற சிவ சுப்ரமணிய சுவாமிகள் ஜீவசமாதி.