அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. ஞாயிற்றுக்கிழமையாகிய இன்று பூமியில் சூரியனின் ஆதிக்கம் நிறைந்த நாளாகும் .. இன்றைய நாள் தங்களனைவருக்கும் ஓர் மகிழ்ச்சிகரமான நன்னாளாகவும் .. குடும்பத்தில் சுபீட்சமும் கிட்ட பிரார்த்திக்கின்றேன் .. ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே ! பாசஹஸ்தாய தீமஹி ! தந்நோ சூர்ய ப்ரசோதயாத் !! உலகிலுள்ள உயிரினங்களுக்கெல்லாம் கண்கண்ட தெய்வமாக விளங்குபவன் சூரியன் .. சூரியனது ஒளியிலாலேயே உயிரினங்கள் வாழ்கின்றன .. எனவேதான் சூரியவழிபாடு பழங்காலந்தொட்டே கடைப்பிடிக்கப்படுகிறது .. காலைவேளையில் சூரியனுக்குரிய மூலமந்திரத்தினை ஜெபித்து கிழக்குநோக்கி அமர்ந்து தியானம் செய்தால் புத்துணர்ச்சியும் .. ஆரோக்கியமும் கிட்டுவதுடன் உடலில் நோய் எதிர்ப்புச்சக்தியும் கூடும் .. கண்ணொளி பிரகாசிக்கும் .. இதயம் வலிமைபெறும் .. “காலையில் ரிக்வேதமாகவும் ..நண்பகலில் யசுர்வேதமாகவும் மாலைநேரத்தில் சாமவேத சொரூபமாகவும் சூரியன் திகழ்கிறான் “ .. என்கிறது சூரிய அஷ்டகம் .. சூரியன் வலம்வரும் தேரின் குதிரைகள் ஏழு என்பதால் சூரியனிடமிருந்து ஏழுபிராணங்கள் .. ஏழுஜுவாலைகள் .. ஏழுசமித்துக்கள் .. ஏழுஹோமங்கள் தோன்றி இதயக்குகையில் ஒடுங்குகின்றன .. உலகம் போற்றும் சூரியனைப்போற்றி சகல ஐஸ்வர்யங்களையும் பெறுவீர்களாக .. “ஓம் சூர்யாய நமஹ” .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SUNDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SURYA .. MAY HE SHOWER YOU WITH HAPPINESS .. AND PROSPERITY .. "JAI SURYA DEV " ..



வாரம் ஒரு பாசுரம் சுவைப்போம்..
சனி விடியலில் அன்பு வணக்கம்..

"மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்
தக்க நெறியும் தடையாகித் -தொக்கியலும்
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்
யாழினிசை னேதத் தியல்" 
- நம்மாழ்வார்

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. சனிக்கிழமையாகிய இன்று மாலை 6.25க்கு மேல் தேய்பிறை அஷ்டமித் திதி ஆரம்பம் .. நாளை மாலை 4.43 வரை .. அதனால் இன்று மாலையே ‘ பைரவருக்கு ‘ விளக்கு ஏற்றி வழிபடுவது விசேஷம் .. தங்கள் அனைவரது தேவைகளை நியாயமான முறையில் உணர்ந்து நிறைவேற்றுவார் .. இன்றைய நாள் தங்களனைவருக்கும் ஓர் இனிய நன்னாளாக அமைந்திட பிரார்த்திக்கின்றேன் .. ஓம் சூலஹஸ்தாய வித்மஹே ! ஸ்வாந வாஹனாய தீமஹி ! தந்நோ பைரவஹ் ப்ரசோதயாத் !! .. பைரவரை வழிபட ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியும் சிறந்த நாளாகும் .. ஏனெனில் அன்றைய நாளில் அஷ்டமாலக்ஷ்மிகளும் பைரவரை வழிபடுவதாகவும் .. அதனால் அன்று அவரை வணங்கிட மக்கள் அனைத்து வளங்களையும் பெற்று சிறப்புடன் வாழலாம் என்பது ஐதீகம் .. எல்லா சிவாலயங்களிலும் ஈசான்ய மூலை எனப்படும் வடகிழக்கு திசையில் நீலமேனியராய் .. நாய் வாகனத்துடன் பைரவர் காட்சி தருவார் .. காலையில் ஆலயம் திறந்தவுடனும் இரவு அர்த்தஜாமத்தில் பூஜைமுடிவுறும் போதும் பைரவருக்கு என்று விசேஷ பூஜைகள் செய்யப்படவேண்டும் என்று பார்த்த நித்யபூஜாவிதி கூறுகிறது .. பைரவரை வணங்கும்போது நோய் விலகும் .. எதிர்மறையான எண்ணங்கள் விலகும் .. சனியால் - ஏழரை .. அஷ்டமத்துச்சனியால் ஏற்படக்கூடிய இடர்பாடுகளுக்கு பைரவர் வழிபாடு தைரியத்தையும் .. எதிர்மறை எண்ணங்களை முழுமையாக வேரறுக்கக் கூடியவர் .. அதனால் பைரவரை வணங்கும் போது எல்லாவையான சக்தியும் கிடைக்கும் .. பணம்சார்ந்த பிரச்சினைகள் தீரும் என்பது வரலாறு .. பைரவரை வழிபாடு செய்வதால் வறுமை .. பகைவர்களின் தொல்லைகள் ..பயம் நீங்கி .. அவரருளால் அஷ்ட ஐஸ்வர்யங்களும் .. தனலாபமும் .. வியாபார முன்னேற்றம் .. பணியாற்றும் இடத்தில் தொல்லைகள் நீங்கி மனத்தில் மகிழ்ச்சியையும் பெறலாம் .. தினமும் பைரவர் காயத்ரியை ஓதிவரவும் .. தன்னை அண்டியவர்களுக்கு அருள்செய்யும் தன்மைமிக்க ஸ்ரீபைரவரைத் தொழுது வணங்க நம் தீராவினைகள் அனைத்தும் தீரும் .. ”ஓம் ஸ்ரீபைரவாய நமஹ “ .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SATURDAY .. WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD BHAIRAVA .. MAY HE PROTECT YOU FROM EACH EVIL EYE .. " OM SHREE BHAIRAVAAYA NAMAHA " ..

தமிழ்நாட்டிலிருந்து சிற்பிகளைக் கூட்டிப் போய் நம் ஆகம
விதிகளின் படி கட்டப்பட்ட கோவில் அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் சிவா விஷ்ணு ஆலயம். மிகச் சுத்தமாக பராமரித்து வரும் நம்மவர்கள் நம் கலாச்சாரத்தை சனி ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் தென்னிந்திய பாரம்பரிய உடை அணிந்து வந்து காப்பாற்றி வருகிறார்கள்.

சந்நிதானத்தில் புதிய பொலிவுடன் பாலகன் தோற்றம்



அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. வியாழக்கிழமையாகிய இன்று அனைவராலும் போற்றி வணங்கப்படும் குருநாதர் ஷீரடி சாய்பாபாவினதும் நாளும் ஆகும் .. அவரைத் துதித்து தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் மகிழ்ச்சிகரமான நன்னாளாகத் திகழவும் பிரார்த்திக்கின்றேன் .. ஓம் ஷீரடிவாஸாய வித்மஹே ! ஸச்சிதானந்தாய தீமஹி ! தந்நோ ஸாயி ப்ரசோதயாத் !! உங்கள் விதியை மாற்ற பாபா அருளிய வழிகள் - தினமும் கடவுளை பிரார்த்தனை செய்யுங்கள் .. எல்லாம் கடவுள் அருளால் நடக்கிறது என்பதை முழுமையாக நம்புங்கள் .. தீபம் .. ஊதுபத்தி .. மெழுகுவர்த்தி .. சாம்பிராணி ஏற்றி இறைவனை வணங்குங்கள் .. உங்களுக்குத் தெரிந்த மந்திரங்கள் .. ஸ்லோகங்களைச் சொல்லுங்கள் .. உங்கள் வருமானத்தை நியாயமான வழியில் பெறுங்கள் .. முறையில்லாத வழிகளில் பணத்தை சம்பாதிக்காதீர்கள் .. எண்ணம் .. சொல் .. செயல்களில் உண்மையை கடைபிடியுங்கள் .. மற்றவர்களுக்கு எந்த பிரதிபலனும் இல்லாமல் உதவி செய்யுங்கள் .. பசி என்று வருபவர்களுக்கும் ..ஏழைகளுக்கும் உங்களான உதவியைச் செய்யுங்கள் .. வாழ்க்கை நடத்த என்ன தேவையோ அதுமட்டும் இருந்தால் போதும் குறைந்த தேவைகளோடு எளிமையாக இருங்கள் .. தியாகம் .. வைராக்கியம் இரண்டையும் மறக்காமல் செயல்படுத்துங்கள் .. உங்களின் ஒவ்வொரு விநாடியும் கடவுளால் கண்காணிக்கப்படுகிறது என்பதையும் .. அவரது ஆசியுடன் தான் வாழ்கிறீர்கள் என்பதையும் உணர்ந்து கொள்ளுங்கள் .. பாபா அருளிய இந்தவிதிகளை யார் கடைப்பிடிக்கிறார்களோ அவர்களுக்கு வாழ்வில் எந்தப் பிரச்சினையும் வராது .. விதியையே மாற்றியமைக்கும் வல்லமை அவர்களுக்கு உண்டு என்று ஆசி வழங்குகிறார் பாபா .. பாபாவைப் போற்றி வணங்கி அவரது பரிபூரணத் திருவருளைப் பெறுவோமாக .. “ ஓம் சாய் ராம் “ .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED THURSDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF SHIRDI SAI .. MAY HE BLESS YOU TODAY AND FOREVER MORE .. " OM SAI RAM " ..

Suchindram Anjaneyar Temple Suchindram Anjaneyar Temple is also called as Thanumalaya Perumal temple, Hanuman temple. It’s a belief that Lord Shiva stayed at Suchindram Temple when Devi came for self-punishment at Kanyakumari. Suchindrum is located 6 km south-east to the district capital Nagercoil and 13 kms from Kanyakumari. Suchindram is lying between Nagercoil and Kanyakumari main road. This Hanuman Temple situated in a village of Suchindram and is famous for its sculptural richness and tall tower known as “gopuram”. This gopuram is large, white coloured, sculptural and 40 meters in height There is a large Hanuman statue is the main attraction in the temple and “vada mala” pooja is special for this Hanuman. The statue is 18 feet high and depicts ‘visuvaroopam‘. Hanuman Temple is dedicated to Sri Thanumalayan. The place dedicated to the Trinity is Shrine which is known as “Thanumalaya”. The name Thanumalaya is came from the combination of Thirumurties “Siva”, “Vishnu” and “Brahma” as. ‘Thanu’ represents Siva; ‘Mal’ represents Vishnu and ‘Ayan’ represents Brahman i.e. Siva, Vishnu and Brahman in “One Form”. Based on the ancient belief, top, middle and base of the “Linga” is represent as Sive, Vishnu and Brama respectively




அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. புதன்கிழமையாகிய இன்று விநாயகருக்குரிய ” சங்கடஹர சதுர்த்தி “ விரதமும் சேர்ந்து வருவதால் ஆலயம் சென்று விநாயகரைத் தரிசிப்பது விசேஷம் .. இன்றைய நாள் தங்கள் அனைவரது சங்கடங்களும் பனிப்போல் நீங்கி .. சகலசௌபாக்கியங்களும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகின்றேன் .. வணங்குகின்றேன் .. ஓம் தத்புருஷாய வித்மஹே ! வக்ரதுண்டாய தீமஹி ! தந்நோ தந்தி ப்ரசோதயாத் !! .. ”சங்கடம்” என்றால் துன்பம் .. என்றும் ..”ஹர” என்றால் ஒழிப்பது என்றும் .. “சங்கடஹர” என்றால் .. “ சங்கடங்களில் இருந்து விடுதலை ” .. ” துன்பங்களில் இருந்து விடுதலை “ .. என்பதாகும் .. சங்கடஹர சதுர்த்தி விரதம் இருப்பதால் நினைத்தகாரியம் கைகூடும் .. வீண்பழி அகலும் .. பகைவர்களும் நண்பர்களாவார்கள் .. தீவினை அகலும் .. மனச்சுமை நீங்கும் .. வளர்பிறை சதுர்த்தி தினத்தில் சந்திரனைப் பார்த்ததால் கெட்டபெயர் ஏற்பட்டு அதை நீக்க வேண்டி விநாயகருக்கு தேய்பிறை சதுர்த்தி தினத்தில் பூஜை செய்த ஸ்ரீகிருஷ்ணருக்கு விநாயகர் அபவாதம் நீங்குவதற்கு அனுக்கிரகம் செய்தார் .. ஸ்ரீகிருஷ்ணர் வழிபாடு செய்து கெட்டபெயர் நீக்கிக்கொண்டு நற்பெயர் பெற்றதை நினைவு கூறும் வகையிலும் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு சிறப்பானதாகிறது .. சனிபகவானின் பார்வையால் ஏற்படும் தோஷங்களும் .. சகலரோகங்களும் .. நீங்குகின்றன .. சங்கடஹர சதுர்த்தி ஒவ்வொரு மாதமும் உண்டு .. எக்காரணம் கொண்டும் சந்திரனைப் பார்க்கக் கூடாது .. சந்திரனும் இந்நாளில் வெகுநேரம் கழித்துதான் வானத்தில் தோன்றுகின்றது .. கிரகங்களில் அழகோடு கவர்ச்சியும் இருந்ததால் சந்திரனுக்கு ஆணவம் ஏற்பட்டது .. சிறிய எலிமீது பெரிய விநாயகரின் நர்த்தனக் காட்சிகளைக் கண்டு ஆகாயத்தில் சந்திரன் பரிகசித்து சிரித்தான் .. வெகுண்ட விநாயகரின் சாபத்தால் சந்திரன் ஒளிமங்கிப்போனான் .. தேவர்கள் விநாயகரை சரண்புகுந்து சந்திரனை மன்னித்து அருளும்படி கூறினார்கள் .. விநாயகரும் சாந்தமடைந்து பதினைந்து நாட்கள் ஒளிமங்கி போகவும் .. பதினைந்து நாட்கள் ஒளி அதிகரிக்கவும் அருளினார் .. விநாயகசதுர்த்தி தினத்தில் சந்திரனை வழிபடுவோருக்கு நன்மைகள் கிடைக்கவும் அருள் செய்ததன் அடிப்படையிலேயே சதுர்த்தி தினத்தன்று சந்திரதரிசனம் செய்யும் வழக்கம் உண்டாயிற்று .. விநாயகரைப் போற்றுவோம் .. குடும்பத்தில் சுபீட்சமும் .. தடங்களின்றி அனைத்து காரியங்களும் வெற்றியடையும் .. “ ஓம் விக்னேஷ்வராய நமஹ “ .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED DAY WITH THE DIVINE BLESSINGS OF LORD GANESH BRINGS YOU ALL ETERNAL BLISS .. " JAI GANESHAAYA NAMAHA " ..

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. செவ்வாய்க்கிழமையாகிய இன்று கலியுகவரதனாகிய கதிர்வேலவனைத் துதித்து தங்களனைவருக்கும் .. உடல்நலமும் .. மனநலமும் ஆரோக்கியத்துடன் திகழவும் .. மகிழ்ச்சிகரமான வாழ்வு வாழவும் பிரார்த்திக்கின்றேன் .. ஓம் தத்புருஷாய வித்மஹே ! மஹேஷ்வர புத்ராய தீமஹி ! தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத் !! முருகனின் கரத்தில் இருக்கும் வேல் ”சக்தி ஆயுதம்” எனப்படும் .. அம்பிகையின் அம்சமே வேல் எனவும் கூறுவர் .. முருகனை வழிபடுவோருக்கு நல்லன எல்லாம் தேடிவரும் .. தீயனயாவும் ஓடிப்போகும் என்பர் .. வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா ! வேல்முருகா ! வெற்றிவேல் முருகா ! என்றுச் சொல்வது வெற்றிவேலைக் கொண்ட முருகனே ! எங்கள் வாழ்க்கையில் இருக்கும் துன்பங்களைப் போக்கி நற்கதியை அருள்வாயாக ! என்று உரிமையோடு முறையிடுவதாகும் .. முருகனுக்கு அரோஹரா ! கந்தனுக்கு அரோஹரா ! முருகனைப் போற்றுவோம் .. வெற்றிகள் யாவும் பெறுவோமாக ..வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED TUESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD MURUGA .. MAY HE SHOWER YOU WITH BEST HEALTH .. WEALTH .. AND HAPPINESS .. " OM MURUGA " ..

SABARIMALA AYYAPPA SWAMI 's Arattu Ritual .. SWAMIYEEE SARANAM AYYAPPA.... Sreekrishnarppanamasthu...






அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. திங்கட்கிழமையாகிய இன்று சிவபெருமானுக்குரிய நாளாகும் இன்றைய நாள் தங்களனைவருக்கும் ஓர் வெற்றிகரமான நாளாக அமைந்திட பிரார்த்திக்கின்றேன் .. ஓம் தத்புருஷாய வித்மஹே ! மஹாதேவாய தீமஹி ! தந்நோ ருத்ர ப்ரசோதயாத் !! சிவன் நாகங்களை ஆபரணங்களாக அணிந்திருப்பதும் .. த்ரிசூலம் .. மான் .. நெருப்பு .. உடுக்கை .. ஆகியவற்றை ஆயுதங்களாக கொண்டிருப்பதும் ஏன் ..? .. பித்ருவனத்தில் ப்ராமணர்கள் யாகம் செய்யும் போது ஒரு அழகான துணியில்லாத ஒரு பிச்சைக்காரனைப் பார்த்து அவர்கள் மனைவிகள் கோபம் கொண்டார்கள் .. அவர்கள் மான் மழு .. உடுக்கை .. நாகம் .. எல்லாவற்றையும் மந்திரம் செய்து அந்த பிச்சைக்காரன்மேல் ஏவினார்கள் .. அந்த பிச்சைக்காரன் சிவனாகையால் தன் ஆயுதங்களாகக் கையில் ஏந்திக் கொண்டார் .. ப்ராமணர்களிடமிருந்து விடுபட்ட குள்ள பூதகனங்கள் அந்த பிச்சைக்காரனைச்சுற்றி (சிவனை) நடனமாடினர் ..அப்போது அபஸ்மார என்ற அசுரனை தன் காலில் கீழே போட்டு அடக்கினார் ..அப்போதுதான் ப்ராமணர்கள் அவர் சங்கரன் என்று அறிந்து அவரை வழிபட்டார்கள் .. சிவனின் ஐந்து செயல்கள் - 1 - ஸ்ருஷ்டி - (ஆக்கல்) என்பதை அவரது கையில் உள்ள உடுக்கை குறிக்கின்றது .. 2 - ஸ்திதி - (காத்தல்) என்பதை மேல் எழும்பியுள்ள அவரது கைகள் காட்டுகின்றன .. 3 - ஸம்ஹாரம் (அழித்தல்) என்பது அவரது உடல் முழுவதும் தவழ்ந்திருக்கின்ற அரவங்கள் உணர்த்துகின்றன .. 4 - திரோபாவம் என்னும் அஞ்ஞான இருளினை போக்குவது போல் அவரது கலைந்த ஜடாமுடி காணப்படுகிறது .. 5 - அனுக்ரஹம் - என்பது அவரது தூக்கிய பாதமும் .. கீழாக அமைந்துள்ள கைகளும் குறிக்கின்றன .. நடராஜரைச் சுற்றி சுழன்று கொண்டிருந்த தீ ஜ்வாலைகள் பிரணவத்தையும் .. அவரது பூர்ணத்தவத்தையும் குறிக்கின்றது சிவனைப்போற்றுவோம் அவரது அருட்கடாக்ஷ்ம் பெற்று அனைத்திலும் வெற்றி பெறுவோமாக .. என்றும் வெற்றி ! எதிலும் வெற்றி ! வெற்றி நிச்சயம் !! “ ஓம் நமசிவாய “ வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A VICTORIOUS MONDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SHIVA .. MAY HIS DIVINE BLESSINGS BRINGS YOU ETERNAL SUCCESS IN YOUR CAREER TODAY AND FOREVER MORE .. " OM NAMASHIVAAYA " .. L


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. சனிக்கிழமையாகிய இன்று ஈஸ்வரனைத் துதித்து தங்களனைவருக்கும் உடல் நலமும் .. மனநலமும் ஆரோக்கியம் பெற்று .. மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகின்றேன் வணங்குகின்றேன் .. ஓம் தத்புருஷாய வித்மஹே ! மஹாதேவாய தீமஹி ! தந்நோ ருத்ர ப்ரசோதயாத் !! ” தென்னாடுடைய சிவனே போற்றி .. எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி “ .. வெள்ளிடைமலை தென்னாடுடைய சிவனே ! எந்நாட்டவர்க்கும் இறைவன் .. அல்லது எந்நாட்டவர்க்கும் இறைவன் தென்னாடுடைய சிவன் என்பதே ! அத்திருவாசகத்தின் கருத்து .... சிவன் என்பதன் பொருள் மங்களம் தருபவன் .. என்றும் செம்மை தருபவன் என்றும் கூறப்படும் .. இறைவனுக்கு மூன்று கண்கள் .. இவற்றில் நெற்றிக்கண் நெருப்பு வடிவமானது .. இந்த பார்வை நன்மை அளிக்காது .. மற்றைய இருகண்கள் சூரிய .. சந்திர வடிவமானவை .. இவை நன்மைபயக்கக் கூடியவை .. தெய்வத்தின் கடைக்கண்பார்வை தான் நமக்கு வேண்டும் .. இதைத்தான் “ கடாக்ஷ்ம் “ என்பர் .. கடபார்வை இது கருணையே வடிவமானது .. சகல ஐஸ்வர்யங்களையும் தரவல்லது .. அதற்காகத்தான் நேருக்குநேர் தரிசிக்காமல் பக்கமா நின்று வழிபடவேண்டும் .. சிவன் .. அருவம் ..உருவம் .. அருவுருவம் .. என்று மூவகை திருமேனியைக் கொண்டவன் .. உயிர்களுக்கு குருவாய்த் தோன்றி அருள்புரிபவன் .. அவனே ஜோதிவடிவான இறைவனின் ஒருபாதியில் பராசக்தி விளங்குகிறாள் .. சிவசக்தி விளையாட்டே இவ்வுலகம் வடிவான சக்தி .. அறிவான சிவன் .. இரண்டும் இல்லாமல் உடலுக்குள் உயிர் பொருந்தி நிற்பதில்லை .. இந்த மேலோனின் திருவுருவத்தைத் தெரிந்து அறியாமையால் இதுவரை காலங்கள் வீணில் கழிந்தன .. அந்நிலையில் சிவனாகிய தலைவன் குருவாகவந்து காட்டுவித்தனன் .. மெய்யறிவு துணையாய் கொண்டவரை மேவியிருப்பான் சிவன் .. சிவனைப்போற்றுவோம் .. அவரின் பரிபூரணத் திருவருளையும் அருட்கடாக்ஷ்த்தையும் பெறுவோமாக .. “ ஓம் நமசிவாய “ .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A HAPPY SATURDAY WITH THE BLESSINGS OF LORD SHIVA .. MAY THE DIVINE BLESSINGS OF LORD SHIVA BRING YOU ALL ETERNAL BLISS .. " OM NAMASHIVAAYA "



உண்ணுவதும் உறங்குவதும் அன்றி வேறொன்றும் அறியாமல்
பண்ணிடும் செயலிலெல்லாம் உன்னை ஒன்றும் சேர்க்காமல்
எண்ணிடும் எண்ணத்தில் உனை ஒரு போதும் நினையாமல்
கண்ணிய வாழ்விருந்தும் அதைப் போற்றத் தெரியாமல்
விண்ணிலிருக்கும் நீ மண்ணில் வந்து வாழ்ந்திருந்தும்
கண்ணால் காணுகின்ற எண்ணம் போலும் இல்லாமல்
மண்ணில் வாழ்ந்து விட்டேன் இத்தனை நாள் கடந்துவிட்டேன் 
வெறுத்தாலும் அணைக்க மறக்காத தாய் போல- உன்
திருவிழியால் ஆசிகளைத் தந்திடவே விழைகின்றாய்
பொருத்து என் பிழை எல்லாம் பெரு வாழ்வு தருகின்றாய் 
சிறுத்த என் மனதினிலே சீரியன் நீ வந்தமர்ந்து 
பெருத்த மாற்றங்கள் நலமளிக்க செய்கின்றாய்
அறுத்தென்னைக் களையாது அருகே வைக்கின்றாய்
ஒரு போதும் அகலாது புகலிடமும் தருகின்றாய் - இனி 
உனைப் பேணுவதல்லாத செயல் ஒன்றும் நான் செய்யேன் 
எனைப் பேணி அடை காத்து உன் நிழலில் வைத்திருப்பாய் -

Today is Panguni Uthiram. Ayyappa Swami's birth star. Lets pray for his blessings.... Om Swamiye Sharanam Ayyappa.





அனைவருக்கும் என் அன்பான காலை வந்தனங்கள் .. வெள்ளிக்கிழமையாகிய இன்று மங்களங்கள் மலரும் பொன்னாள் .. பங்குனி உத்தரமும் சேர்ந்து வருவதே சிறப்பு .. ஆலயம் சென்று அனைத்து தெய்வங்களையும் ஒன்றாக தரிசித்து சகல சௌபாக்கியங்களும் பெற்று .. மகிழ்ச்சியுடன் வாழ பிரார்த்திக்கின்றேன் .. பங்குனி உத்தர சிறப்புகள் - பால்போலவே வான்மீதிலே சந்திரன் பௌர்ணமி நாளில் கூட சிறுகளங்கத்துடன் தான் ஒளிதருவான் .. ஆனால் பங்குனி மாதத்தில் பூமி மீனராசியில் இருப்பதால் உத்திர நட்சத்துரத்துடன் சேர்ந்து ஏழாம் இடமாகிய கன்னியில் நின்று முழுகலையையும் பெற்று பூமிக்கு ஒளிவழங்குவான் .. அந்த பூரணபௌர்ணமி நிலவில் களங்கத்தைக் காணமுடியாது களங்கமில்லாத சந்திரனொளி உடலுக்கும் .. மனதுக்கும் நிம்மதிதரும் .. பலநற்பலன்களையும் கொடுக்கும் .. எனவே இந்தநாள் கூடுதல் பலன்களைத் தரக்கூடிய நாளாகக் கருதப்படுகிறது .. சைவக்கடவுளாகிய முருகனுக்குரிய சிறப்பு விரததினமாகக் கொண்டாடப்படுகிறது .. இது பங்குனி மாதத்தில் வரும் உத்தர நட்சத்திர தினமாகும் .. தமிழ் மாதங்களில் 12ம் மாதம் பங்குனி .. நட்சத்திரங்களில் .. 12ம் நட்சத்திரம் உத்தரம் .. எனவே 12 கை வேலவனுக்கும் சிறப்பான தினமாகக் கொண்டாடப்படுகிறது .. அநேகமான முருகன் கோயில்களில் இத்தினத்தில் வருடாந்த திருவிழாக்கள் (மஹோற்சவம்) நடைபெறும் .. பல தெய்வத்திருமணங்கள் நிகழ்ந்த பங்குனி உத்திரத் திருநாள் கல்யாண விரதமென்றே சிறப்பிக்கப்படுகிறது .. மதுரையில் சொக்கநாதர் மீனாட்சிக்கு மாங்கல்யதாரணம் செய்த பொன்னாள் பங்குனி உத்தரம் .. அன்னை தாட்சாயிணிதேவி .. மலையரசன் இமயவானின் மகளாகப் பிறந்து பார்வதி என்ற பெயரில் சிவனை வேண்டி கடும் தவம் இருந்தாள் .. இமவான் தன் மகள் பார்வதியை சிவனுக்கு திருமணம் செய்ய தேர்ந்தெடுத்தது பங்குனி உத்திரத்திருநாள் .. மதுரையில் சொக்கநாதருக்கு மீனாட்சி மாலையிட்ட நன்னாள் ஜனகனின் வில்லை ஒடித்து ஜானகியை மணந்த ராமர் .. சீதா ராமனானார் .. லக்‌ஷ்மணன் .. சத்ருகன் ஆகியோருக்கும் திருமணம் நடந்தது .. முழுமுதற் பொருளான விநாயகருக்கு அம்மையப்பனான உமாமகேஸ்வரர் சித்தி .. புத்தி எனும் இருவரை திருமணம் செய்வித்து உளம் மகிழ்ந்தார்கள் .. சந்திரபகவான் கார்த்திகை .. ரோகிணி உள்ளிட்ட 27 நட்சத்திரங்களை மனைவியராக அடைந்த புண்ணிய தினம் .. மஹாலக்ஷ்மி விரதமிருந்து மஹாவிஷ்ணுவின் திருமார்பில் இடம் பிடித்தநாள் .. பிரம்மன் தன் மனைவி சரஸ்வதியை நாக்கிலேயே வைத்துக் கொள்ளும்படியான வரத்தைப் பெற்றார் .. இந்திராணி இந்திரபதிக்கு கிடைத்த பொன்னாள் .. திருப்பரங்குன்றத்தில் முருகன் தெய்வானை திருமணம் நடந்தது .. ஆண்டாள் ரங்கமன்னார் திருமணம் நடந்தது .. பசுவாகிய ஆன்மா பதியாகிய சிவத்துடன் இணைவதாக ஓர் உயர்ந்த நிலையினை எடுத்துக்காட்டுகின்றது .. இத்தினத்தில் அம்மையப்பனைக் குறித்து விரதமிருப்பர் .. பகற்பொழுது உணவு உட்கொள்ளாது இரவில் பால் .. பழம் போன்ற உணவு வகைகளை உட்கொண்டு விரதம் அனுஷ்டிப்பர் .. இதனைக் கல்யாணசுந்தர விரதம் என்பர் .. உத்திர நட்சத்திரத்திற்குரிய கிரகம் சூரியன் .. இந்நாளில் செய்யும் வழிபாட்டினால் பாவங்கள் அனைத்தும் பஸ்பமாகிவிடும் என்று சூரியபுராணம் கூறுகிறது .. அனைவரையும் போற்றி வணங்குவோம் .. அனைத்தும் பெற்று மகிழ்வோம் .. ஓம் நமசிவாய .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. . WISH YOU ALL A BLESSED DAY WITH THE BLESSINGS OF LORD SHIVA .. MAY HE SHOWER YOU WITH BEST HEALTH .. BEST WEALTH AND HAPPINESS ..

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. வியாழக்கிழமையாகிய இன்று நம் அனைவராலும் போற்றி வணங்கப்படும் குருநாதராகிய ‘ஷிர்டி சாயின் ‘ நாளும் ஆகும் .. அவரைத் துதித்து தங்கள் அனைவருக்கும் அவரது அன்பும் ஆசியும் கிடைத்து இன்றைய நாள் ஓர் வெற்றிகரமான நாளாய் அமைந்திட வாழ்த்துகின்றேன் .. வணங்குகின்றேன் .. ஓம் ஷிர்டி ஸாயி நிவாஸாய வித்மஹே ! ஸர்வ தேவாய தீமஹி ! தந்நோ ஸர்வ ப்ரசோதயாத் !! .. ஷிர்டி சாய் பொன்மொழிகள் - 1 - எல்லா திசைகளிலும் நான் உன்னை சூழ்ந்து நிற்கையில் நீ எதற்காக பயப்படுகிறாய் .. ? .. நீ எனது பிடியிலேயே இருக்கிறாய் .. நானே உனது தந்தை (பாதுகாவலன்) உனக்கு துன்பம் நேர நான் எப்படி அனுமதிப்பேன் .. ? .. வெறும் தண்டத்துக்கா நான் இங்கு இருக்கிறேன் ..? .. உனது எல்லா கவலைகளிலிருந்தும் எப்படி விடுவிக்கிறேன் என்று மட்டும் பார் .. 2 - எனது அருள் பாரபட்சமற்றது .. அதை நான் எல்லோருக்கும் சமமாகவே வழங்குகிறேன் .. என் சங்கல்பமின்றி ஒரு துரும்பும் அசையாது .. 3 - ஆண்டவனை பக்தியோடு வணங்கவேண்டும் .. ஆனால் பாபாவை பாசத்தோடு நினைத்தாலே போதும் கோரிக்கை நிறைவேறும் .. 4 - என்னை சரணாகதி அடைந்தவர்களுடைய கோரிக்கைகள் நிறைவேறாமல் போவது என்ற பேச்சே என் சங்கல்பத்தில் இல்லை .. என்னை சரணாகதி அடைந்தவர்கள் துன்பத்தில் விழும் தருவாயில் எனது கரங்களையும் கொடுத்து அவனை மேல் எழச்செய்வேன் .. என்றும் அவனை கண் இமை காப்பதுபோல் காப்பேன் .. 5 - இப் பாதங்கள் தொன்மையானவை .. புனிதமானவை .. இப்போது உனக்குக் கவலையில்லை .. என்மீது முழுநம்பிக்கையையும் வை .. நீ சீக்கிரத்தில் உனது குறிக்கோளை எய்துவாய் .. 6 - என்னிடம் வருபவர்களுக்கும் .. என்னையே தஞ்சமாக சரணடைபவர்களுக்கும் என் உபதேசத்திற்காக என்னிடம் தீவிர நம்பிக்கை உடையவர்களுக்கும் நான் எப்போதும் உயிருடன் இருக்கிறேன் .. 7 - என்மேல் நம்பிக்கை இருந்தால் உனக்கு முடியாத காரியம் என்று எதுவுமே இருக்கமுடியாது .. 8 - உங்கள் உச்சிமுதல் உள்ளங்கால்வரை கவசமாய் நான் இருக்கிறேன் .. உங்கள் தொழில் எதுவானாலும் உங்கள் வேலையை என்னுடையதாக மாற்றி விடுகிறேன் .. பார்வையும் பார்க்கப்படும் .. 9 - நீங்கள் எதைத் தேடுகிறீர்களோ அதை உடனே உங்களுக்கு காட்டிக்கொடுக்கிறேன் .. ஆனால் என்னுடைய சொல்லுக்கு கட்டுப்பட்டவனே தான் விரும்பியதை அடைவான் .. 10 - பசியாக இருக்கிறது .. சாப்பாடு போடுங்கள் என்று யாராவது உன் வீட்டு வாசல்முன் நின்று கேட்டால் .. அந்த பசிக்கிறவன் உனக்கு மிகப்பெரிய உதவி செய்வதற்காக வந்திருக்கிறான் என்பதை மறவாதே !! .. பாபாவைப் போற்றுவோம் அவரது அருட்கடாக்ஷ்த்தைப் பெறுவோமாக .. “ ஓம் சாய் ராம் “ .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. WISH YOU ALL A VERY HAPPY MORNING AND A BLESSED THURSDAY MAY SHIRDI SAI 'S DIVINE BLESSINGS BE WITH YOU TODAY AND FOREVER MORE .. HAVE A SUCCESSFUL DAY TOO ..


அருள்மிகு சிந்தாமணி நாத சுவாமி திருக்கோவில்
(அர்த்த நாரீஸ்வரர் திருக்கோவில்), 
வாசுதேவ நல்லூர் (திருநெல்வேலி மாவட்டம்).
தென் பகுதியிலிருக்கும் அர்த்த நாரீஸ்வரர் கோவில். இந்த கோவில் மதுரை – செங்கோட்டை சாலையில் (NH 208) – மதுரையிலிருந்து 115 KM தூரத்திலும், ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து 40 KM தூரத்திலும் அமைந்திருக்கிறது. பஸ் வசதி நிறைய. வடக்கிலிருந்து வந்தால் (ராஜபாளையம் பகுதியிலிருந்து) பழைய பஸ் ஸ்டாண்டு நிறுத்தத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து நடந்து செல்லும் தூரத்தில் தான் கோவில் அமைந்துள்ளது.
அருமையான பெரிய கோவில். முன்னால் 2 தேர்கள் நிற்கின்றன. புதிய தேர் தகரத்தினால் மூடி போட்டு பாதுகாக்கப் படுகிறது. இன்னொரு பழைய தேர் – அருமையான சிற்பங்களுடன் – வெயிலில் காய்ந்து, முறையாக பராமரிக்கப் படாமையால் சிதிலமடைந்து வருகிறது; வேதனையாக இருக்கிறது.
கோவிலுக்கு முன்னால் அழகான தெப்பம் இருக்கிறது, நடுவில் அழகான மண்டபம் இருக்கிறது. தெப்பத்தில் தண்ணீர் இல்லை.
கோவில் முகப்பு அருமையாக இருக்கிறது. கோவிலுக்குள் நுழைவதற்கு முன் நிறைய காலி இடம் இருக்கின்றது. திருவிழா சமயம் எவ்வளவு கூட்டம் வந்தாலும் தாங்கும்.
கோவில் பிரகாரம் அருமையாக நிறைய மரங்களுடன், மூலிகை, மலர் செடிகொடிகளுடன் அமைந்திருக்கிறது. இந்த கோவிலின் ஸ்தல விருட்சம் – புளிய மரம். அதை படம் எடுத்து போட்டிருக்கிறேன். அதன் கீழே நாகர் சிலை இருக்கிறது. ஒரு பெண்மணி பாலபிஷேகம் செய்து வழிபடும் காட்சி காணலாம்.
வெளிப்பிரகாரத்திலேயே மதிய அன்னதானத்திற்கான சமையல் நடக்கிறது.
இறைவன் அர்த்த நாரீஸ்வரர் கோலத்தில் இருக்கிறார். நன்கு அருமையாக அமைந்த கோவில். அருமையாக பராமரிக்கப் படுகிறது. 
குற்றாலம் செல்லும் நண்பர்கள் பார்க்க வேண்டிய கோவில்.
நன்றி நண்பர்களே.


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. புதன்கிழமையாகிய இன்று பிரதோஷ விரதமும் வருவதால் பிரதோஷவேளையில் மாலை 4.30 - 6.00 மணிவரையிலான நேரத்தில் சிவாலயம் சென்று நந்தீஸ்வரரின் கொம்புகளுக்கிடையில் சிவலிங்கத்திற்கு நடக்கும் அபிஷேகத்தைக் கண்டு தரிசித்தால் பாவங்கள் .. கடன்தொல்லை .. வறுமை .. நோய் .. பயம் .. மரணவேதனை .. அனைத்தும் நீங்கும் .. தங்கள் அனைவருக்கும் இன்றைய நாள் ஓர் இனிய நன்னாளாகவும் .. செய்யும் அனைத்து காரியங்களும் வெற்றியடையவும் சிவபெருமானைப் பிரார்த்திக்கின்றேன் .. ஓம் தத்புருஷாய வித்மஹே ! மஹாதேவாய தீமஹி ! தந்நோ ருத்ரப்ரசோதயாத் !! பிரதோஷ வரலாறு - தேவேந்திரன் தனது வாகனமான ஐராவதத்தின் மீது (வெள்ளை யானை) அமர்ந்து சந்தோஷத்துடன் ஊர்வலம் வந்து கொண்டிருந்தான் .. அப்போது துர்வாச முனிவர் எதிரில் வந்தார் .. தேவேந்திரனது ஊர்வலம் அவர் உள்ளத்தில் ஏதோ மாறுதலை உண்டாக்கியது .. மேலும் எப்போதும் “ பிடிசாபம்” என்று சொல்லும் துர்வாசர் தன் கையில் இருந்த மலர்மாலையை மிகுந்த அன்போடு தேவேந்திரனை வாழ்த்தும் விதமாக அவரிடம் கொடுத்தார் .. தேவேந்திரன் அதை அலட்சியமாக யானையின் தலையில் வைத்தான் .. துர்வாசரின் கண்கள் சுருங்கின .. யானையோ அந்த மாலையை எடுத்துத் தனது காலடியில் போட்டு மிதித்தது .. வெடித்தார் துர்வாசர் .. “ தேவேந்திரா ! அவ்வளவு ஆணவமா உனக்கு .. ? வெறுக்கை (செல்வத்தின்) மேல் வெறுக்கை (வெறுப்பு) கொண்டவர்கள் நாங்கள் .. லக்ஷ்மிதேவியின் அருட்கடாக்ஷ்ம் உனக்கு இன்னும் பரிபூரணமாகக் கிடைக்கட்டும் என்ற எண்ணத்தில் அந்த தேவியின் பிரசாதத்தை உனக்கு அளித்தேன் ஆனால் செல்வச்செருக்கில் ஊர்வலம் வரும் நீயோ அதை அலட்சியப்படுத்திவிட்டாய் .. உன் ஆணவத்துக்குக் காரணமான அந்தச் செல்வம் முழுவதையும் நீ இழக்கக் கடவாய் “ என சாபம் கொடுத்தார் .. உத்தமரின் சாபம் உடனே பலித்தது .. தேவேந்திரனது அனைத்து செல்வங்கள் அவனைவிட்டு நீங்கி மறைந்தன .. பாற்கடலைக் கடைந்தால் தான் இழந்த செல்வம் முழுவதையும் திரும்பப் பெறமுடியும் என்ற நிலை .. ஆகவே தேவர்களும் .. அசுரர்களும் சேர்ந்து பாற்கடலைக் கடைவது என முடிவாயிற்று .. திருப்பாற்கடலில் எல்லாவிதமான மூலிகைகளையும் போட்டார்கள் மந்தரமலையை மத்தாக்கி .. வாசுகி என்ற பாம்பைக் கயிறாகச் சுற்றி பாற்கடலைக் கடையத் தொடங்கினர் .. வாசுகியின் தலைப்பக்கத்தை அசுரர்களுக்கும் வால்பக்கத்தை தேவர்களும் பிடித்துக் கொண்டார்கள் படுவேகமாகப் பாற்கடல் கடையப்பட்டது .. சோதனைபோல மத்தான மந்தரமலை கடலுக்குள் அமிழத்தொடங்கியது .. உடனே மஹாவிஷ்ணு கூர்மாவதாரம் எடுத்து அதைத்தாங்கி மூழ்காதபடி தடுத்தார் .. பழையபடியே கடலைக் கடைந்தார்கள்.. அப்போது வேறு ஒரு விபரீதம் விளைந்தது .. ஆலகாலவிஷம் எழுந்தது .. அனைவரும் அங்கிருந்து ஓடி நந்திதேவரிடம் அனுமதி பெற்றுக் கயிலாயத்தின் உள்ளே போய் சிவபெருமானின் திருவடிகளில் விழுந்தார்கள் .. ”ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் ஜோதியே ! உமையருபாகா ! கங்காதரா ! கடுமையான இந்த விஷத்தில் இருந்து எங்களைக் காக்கவேண்டும் ஸ்வாமி ! அபயம் !அபயம் என்று வேண்டினர் .. அருகில் இருந்த அவரின் மறுவடிவான சுந்தரரைப் பார்த்து “கடும் விஷத்தைக் கைகளில் எடுத்துக்கொண்டு வா “ என்றார் விஷத்தைக் கொண்டுவந்தார் சுந்தரர் .. அவர் ஆலகால விஷத்தைக் கொண்டு வந்ததால் ஆலகால சுந்தரர் எனப்பட்டார் .. சிவபெருமான் விஷத்தை வாங்கி அதை உண்டார் .. அதன் காரணமாக அவருக்கு (திரு) நீலகண்டர் .. ஸ்ரீகண்டன் என்ற திருநாமங்கள் உண்டாயின .. சிவபெருமான் விஷத்தை உண்டபோது சகல உலகங்களும் இவருக்குள் இருக்கின்றன .. இந்த விஷம் உள்ளுக்குள் இறங்கிவிட்டால் உலகங்களில் இருக்கும் ஜீவராசிகள் அனைத்துக்கும் துயரம் உண்டாகும் .. விஷம் வெளியே வந்துவிட்டாலோ தேவர்களும் அசுரர்களும் துயரம் அடைவார்கள் .. யாருக்கும் எந்தத் துயரமும் ஆலகாலவிஷத்தால் உண்டாகக் கூடாது என்ற கருணை உள்ளத்துடன் அம்பிகை சிவபெருமானின் கழுத்தைத் தடவினாள் .. விஷம் அங்கேயே நின்றுவிட்டது என்றும் சொல்வது உண்டு .. அனைவரும் மனக்கலக்கம் தீர்ந்தார்கள் .. அவர்கள் மகிழ்ச்சி அடையும் பொருட்டு ரிஷபத்தின் பிரணவ வடிவமான கொம்புகளின் நடுவில் சிவபெருமான் ஆனந்தத் தாண்டவம் ஆடினார் .. மற்ற தெய்வங்களும் மகாதேவர்களும் அந்த ஆனந்ததாண்டவத்தை தரிசித்தனர் .. இவ்வாறு சிவபெருமான் அருள்புரிந்த காலமே பிரதோஷவேளை .. (மாலை 4.30 - 6.00 மணிவரை) சிவனையும் நந்திகேஸ்வரரையும் வணங்கி இந்த ஸ்லோகத்தை 18முறை காலை .. மாலை .. இருவேளையும் பாராயணம் செய்து வந்தால் சிவன் அருள்கிட்டி நினைத்தது நிறைவேறும் .. ஸித்தயோகீ மஹர்ஷிச்ச ! ஸித்தார்த்தஹ் ஸித்தஸாதக ! பிக்ஷூச்ச பிக்ஷூரூபச்ச ! விபனோம்ருது ரவ்யய !! .. சிவனைப்போற்றுவோம் .. சகல ஐஸ்வர்யங்களையும் பெறுவோமாக .. ஓம் நமசிவாய .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. MAY THE DIVINE BLESSINGS OF LORD SHIVA BRING YOU ALL ETERNAL BLISS .. "OM NAMASHIVAAYA" ..