அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. இன்று பைரவருக்கு உகந்த தேய்பிறை அஷ்டமித் திதியாகும் .. மாலைவேளையில் சிவாலயம் சென்று பைரவரைத் தரிசிப்பது சாலச்சிறந்தது .. தங்களனைவருக்கும் தொழில்விருத்தி .. உத்தியோகத்தில் பதவி உயர்வு .. கடன்சுமை குறையவும் இல்லத்தில் மகிழ்ச்சியும் .. சுபீட்சமும் நிலவிடவும் பைரவரைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் ஷ்வானத்வஜாய வித்மஹே ! 
சூலஹஸ்தாய தீமஹி !
தந்நோ பைரவஹ் ப்ரசோதயாத் !! 

பைரவர் என்றாலே பயத்தைப் போக்குபவர் .. மற்றும் அடியார்களின் பாபத்தை நீக்குபவர் என்று பொருள் .. அவருக்குத் தகுந்த பூஜைகள் செய்தால் மட்டுமே நம்மை காப்பார் என்றில்லை .. எந்தவிதபூஜைகள் செய்யாவிட்டாலும் கூட இக்கட்டான நேரத்தில் முழுமனதுடன் அபரை நினைத்தாலே போதும் .. சந்தோஷத்துடன் உடனே செயல்பட்டு நம்மை ஆபத்துகளில் இருந்து காப்பாற்றுவார் ..

துன்பங்களும் .. துயரங்களும் வாழ்க்கையில் தொடர்கதையாகிப் போனால் வாழ்க்கை என்பதை வாழப்பிடிக்காமல் அதனைத் தீர்த்துவிடத்தான் மனம் ஏங்கும் .. அப்படி சோகத்தின் விளிம்பில் இருப்பவர்களுக்கு ஆறுதல்கூறி அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் அமுதமொழியாக பைரவர் வழிபாடு கூறப்படுகிறது .. கடவுள்வழிபாடு செய்துவிட்டு அதற்கான பலன்களை எதிர்பார்க்கும் பக்தர்களுக்கு உடனடி நிவாரணம் தரும் கடவுளாக பைரவர் விளங்குகின்றார் .. 

இத்தகைய சிறப்புவாய்ந்த அஷ்டமித் திதியில் நாமும் பைரவரைப் போற்றுவோம் ! எல்லா நலமும் பெறுவோமாக ! ஓம் பைரவாய நமஹ ! 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED ASHTAMI WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD BHAIRAVA .. MAY HE REMOVE ALL THE OBSTACLES AND NIGHTMARE IN YOUR LIFE .. AND SHOWER YOU PEACE AND HAPPINESS .. " JAI BHAIRAVA DEV "




அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. புதன்கிழமையாகிய இன்று இப்பிரபஞ்சத்தைக் காத்தருளும் விஷ்ணுபகவானைத் துதித்து தங்களனைவரும் சகல சௌபாக்கியங்களும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்ந்திடவாழ்த்துகிறேன் .. பகவானை வணங்குகின்றேன் .. 

ஓம் நாராயணாய வித்மஹே !
வாசுதேவாய தீமஹி !
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !! 


பகவானின் நாமமே நம்மை ரக்ஷிக்கும் .. அவரை விட நம்மிடம் அதிகப்பரிவுடையது அவரது நாமமே ! 
“ சர்வோத்த மஸ்ய கிருபையா “ .. சர்வ உத்தமமான அவனுடைய நாமங்களை நம்மைஉச்சரிக்க வைப்பதும் 
அவனுடைய கிருபைதான் .. கருணைதான் .. 

பகவான் நாமத்தை யாருடைய நாக்கு மறவாமல் உச்சரித்துக் கொண்டு இருக்கிறதோ அவன் சாஸ்திரங்களை அறிந்தவனாயினும் .. அறியாதவனாயினும் .. சத்தியரூபத்தை அடைகிறான் .. பகவானுடைய நாமத்திற்கு அத்தகைய மகத்துவம் இருக்கிறது ..

நாமசங்கீர்த்தனம் செய்பவன் எல்லாவித அபராதங்களில்
இருந்தும் நிவாரணம் அளிப்பதும் .. அசுபங்களிலிருந்து
மீட்டு .. சுகத்தை உண்டாக்குவதும் பகவானுடைய நாமம்
மட்டுமே ! என்று பகவானின் நாமமஹிமைகளை பத்மபுராணம் நமக்குக் கூறுகிறது .. 

காக்கும் கடவுளின் திருவருளையும் .. அருட்கடாக்ஷ்த்தையும் பெற்று .. மஹாவிஷ்ணுவை இதயத்தில் இருத்தி வழிபடுவோமாக ! 
” ஓம் நமோ நாராயணாய “ .. வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A VERY PLEASANT DAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD VISHNU .. MAY YOU BE BLESSED WITH GOOD LIFE .. GOOD FORTUNE .. AND FILL YOUR HEART WITH LOVE AND MIRTH .. 
" OM NAMO NAARAAYANAAYA "

Swamiye Saranam Iyyappa...Guruve Saranam...






அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் ..
செவ்வாய்க்கிழமையாகிய இன்று சஷ்டித் திதியும் சேர்ந்து வருவது சாலச்சிறந்தது .. ஆலயம் சென்று முருகப்பெருமானைத் தரிசிப்பது விசேஷமாகும் .. சகல தோஷங்களும் .. தடைகளும் .. தடங்கல்கள் யாவும் நீங்கி வளமான வாழ்வு தங்களனைவருக்கும் அமைந்திட முருகப்பெருமானைப் பிரார்த்திக்கின்றேன் ..

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹேஷ்வர புத்ராய தீமஹி !

தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத் !! 

“ அமரர் இடர்தீர அமரம் புரிந்த குமரன் அடி நெஞ்சே குறி “ ஆம் ! அமரர்களாகிய தேவர்களின் துன்பத்தினைப் போக்குவதற்காக அசுரர்களுடன் போர்புரிந்து தேவர்களை மீட்டவர் முருகப்பெருமானே ! முருகப்பெருமானை முழுமுதற் பொருளாகக் கொண்டு வழிபடப்படும் நெறி கௌமாரமாகும் .. 

அழகன் முருகனை வழிபடுவதன் மூலம் அடியவர்களின் சொல்லொணாத் துன்பம் நீக்கப்படுவதுடன் .. தினமும் 
நெஞ்சுருகி கந்தசஷ்டி கவசத்தினைப் பாராயணம் செய்வதன் மூலம் பதினாறு பேறுகளும் (செல்வங்களும்) கிடைக்கப்பெறுவர் என்பதனை ..
“ துதிப்போர்க்கு வல்வினை போம் “ என்னும் அடிகள் மூலம் அறியமுடிகின்றது .. 

கிடைத்தற்கரிய மானிடப் பிறவியினைப் பெற்ற நாம் இப்புனித நன்னாளில் முருகனைப் போற்றித் துதித்து அவரது அருட்கடாக்ஷ்த்தையும் பெறுவோமாக ! 
“ ஓம் சரவணபவாய நமஹ “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED TUESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF
LORD MURUGA ... MAY HE REMOVE ALL THE OBSTACLES AND SHOWER YOU WITH .. BEST HEALTH AND HAPPINESS .. 

" OM MURUGA "

SWAMIYE SARANAM,,,,,GURUVE SARANAM.....






GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A SUCCESSFUL MONDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SHIVA .. MAY YOU BE BLESSED WITH GOOD HEALTH .. WEALTH AND PROSPERITY .. " OM NAMASHIVAAYA " .. JAI BHOLE NATH .. 

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. திங்கட்கிழமையும் .. சோகங்களைப் போக்கி .. சுகங்களைத் தரவல்ல “ சோமவார விரதத்தை “ நாமும் அனுஷ்டித்து சிவபெருமானின் அன்புக்கு உரியவராவோம் .. 

தட்சனின் சாபத்துக்குள்ளாகிய சந்திரன் தன்பொலிவை இழந்து .. ஒளிதேய்ந்து ..போவதையறிந்து வேதனையடைந்து சிவபெருமானை சரணடைந்தான் .. சிவபெருமானும் சந்திரனை தன்னுடைய தலையில் சூடி .. பாதிநாள் வளர்ந்தும் .. பாதிநாள் தேய்ந்தும் .. இருக்கும்படி சாபத்தை மாற்றி அமைத்தார் .. 

இவ்வாறு சந்திரனின் சோகம் போக்கி .. சுகம்பெறச் செய்த சிவபெருமானிடம் சந்திரன் சோமவாரவிரதத்தைக் கடைபிடிப்பவர் வாழ்வில் சுகங்கள் பெருகவேண்டும் என வேண்ட .. சிவனும் வேண்டுதலை ஏற்று அனைவருக்கும் சுகங்களை நல்குவதாக வாக்களித்தார் .. 

நாமும் இறைவனைக் குறித்து நல்விரதம் இருப்போம் .. இல்லாமை என்ற ஒன்று இல்லாமல் செய்து அனைத்து வளங்களையும் .. நலங்களையும் அள்ளித்தருவார் ஈசனே! ”ஓம் நமசிவாய “ .. வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..



GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED 
SADURTI AND EASTER SUNDAY TOO .. MAY YOU BE BLESSED WITH HAPPINESS AND PROSPEROUS .. " JAI GANESHA " 

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் மற்றும் அனைத்து கிறிஸ்தவ அன்புள்ளங்களுக்கும் எங்கள் ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகளும் உரித்தாகட்டும் .. 

அங்கிங்கெனாதபடி .. எங்கும் வியாபித்திருக்கும் “ ஓம் “ எனும் ஓங்காரவடிவமாக விளங்கும் ஸ்ரீவிநாயகரைத் துதித்து தடங்கல்கள் அனைத்தும் தகர்த்து வாழ்வில் வெற்றிபெற வாழ்த்தி வணங்குகின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
வக்ரதுண்டாய தீமஹி ! 
தந்நோ தந்தி ப்ரசோதயாத் !! 

விநாயகப்பெருமானை வழிபாடு செய்வதற்குப் பலவிரத தினங்கள் இருந்தாலும் .. விரதத்தில் மிகச்சிறந்ததும் .. பழமையானதும் சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய “ சங்கடஹர சதுர்த்தியாகிய “ இன்று விரதம் இருந்தால் அனைத்து சங்கடங்களும் தீர்ந்து வாழ்வில் அளவுகடந்த ஆனந்தத்தையும் .. சகல சௌபாக்கியங்களையும் பெறலாம் .. 

“ ஹர “ என்ற சொல்லுக்கு அழித்தல் என்று பொருள் .. 
ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தி திதியே “ சங்கடஹர சதுர்த்தியாகும் “ .. 
இவ்விரதத்தை கடைபிடிப்பதால் நீண்ட நாட்களாக 
வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு 
உள்ளாகிறவர்கள் நிலையான சந்தோஷத்தை அடைய முடியும் .. 

சிறப்பான கல்வி அறிவு .. புத்திகூர்மை .. நீண்ட ஆயுள் .. நிலையான செல்வம் .. நன்மக்கட்பேறு .. என பலவிதமான
நன்மைகளை அடையமுடியும் .. சனிதோஷத்திற்கு உள்ளாகிறவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்தால் சனியின் தாக்கம் பெரும்பகுதி குறையும் .. 

விரதம் இருப்பது எப்படி ..
சங்கடஹரசதுர்த்தியன்று அதிகாலை நீராடி பால் பழம் அருந்தி .. உணவு உட்கொள்ளாமல் மாலைவரை கணநாதன்
நினைவோடு உபவாசம் இருந்து மாலை ஆலயத்திற்குச் சென்று விநாயகப்பெருமானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனைகளில் கலந்துகொள்ள வேண்டும் .. ஆலயத்தை
எட்டுமுறை வலம்வந்து விநாயகர் அகவலையும் பாராயணம் செய்தல் நலம் .. வீட்டிற்குவந்து உபவாசத்தை முடித்துக்கொள்ள வேண்டும் .. 

சங்கடஹர சதுர்த்தியின் மஹிமை - 
காட்டில் தருமபுத்திரன் இவ்விரதத்தை மேற்கொண்டார் ..
பாண்டவர்க்கு இவ்விரதத்தை உபதேசித்தவர் கண்ணபிரான்
முதல்முதலில் தன் தாய் பார்வதிதேவிக்குக் கணபதியே 
இவ்விரதத்தைச் சொல்லி அருளினார் .. அன்னையும் ஆண்டுக்காலம் இவ்விரதத்தை மேற்கொண்டு தன் பதியை அடைந்தாள் ..
இந்திரன் .. சிவன் .. இராவணன் .. போன்றோர் இவ்விரதத்தினால் நற்பயன் அடைந்திருக்கின்றனர் .. 
அனுமன் சீதையைக் கண்டது ..
தமயந்தி நளனை அடைந்தது ..
அகலிகை கௌதமரை அடைந்தது .. போன்றவை நிகழ்ந்ததும் இவ்விரதத்தின் மஹிமையால்தான் .. என முருகப்பெருமானே முனிவர்க்கு எடுத்துரைக்கிறார் ஸ்காந்தத்தில் .. 

விநாயகரைப் போற்றுவோம் ! வாழ்வில் எல்லாத் துன்பங்களும் நீங்கப்பெற்று நிம்மதி பெறுவோமாக ! 
” ஓம் விக்னேஷ்வராய நமஹ “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..



அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. 
வெள்ளிக்கிழமையாகிய இன்று அன்னை மஹாலக்ஷ்மியைத் துதித்து .. தொடர்தோல்விகள் .. காரியதடைகள் .. அனைத்தும் நீங்கி வாழ்வில் எல்லா நிலைகளிலும் உயர்ந்திடவும் .. நல்வாய்ப்புகளையும் .. அதிர்ஷ்டங்களையும் தங்களனைவருக்கும் தந்தருளுமாறு அன்னையைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் மஹாலக்ஷ்மீ ச வித்மஹே ! 
விஷ்ணு பத்னீ ச தீமஹி !
தந்நோ லக்ஷ்மி ப்ரசோதயாத் !! 

தீபத்தின் ஒளியானது தன்னைமட்டும் வெளிப்படுத்திக் கொள்வதில்லை .. தன்னைச்சுற்றி இருப்பவற்றையும் வெளிப்படுத்துகிறது .. அதுபோல்தான் அன்னை மஹாலக்ஷ்மியும் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதுடன் .. தன்னைச் சரண் அடைந்தவர்களையும் சிறப்புறச் செய்வாள் .. 

அன்னையின் திருவடிகளை நாமும் பற்றிக்கொள்வோமாக ! கருணாகடாக்ஷ்ம் பெற்று வாழ்வில் நலம் யாவும் பெறுவோமாக ! ஓம் சக்தி ஓம் ! 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED FRIDAY WITH THE DIVINE BLESSINGS AND GUIDANCE OF GODDESS LAKSHMI .. MAY SHE ILLUMINATE YOUR LIFE WITH GOOD LUCK .. HEALTH ..WEALTH .. AND HAPPINESS .. 
" OM SHAKTHI OM " .. JAI MAA LAKSHMI ..
 
 
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் ..
வியாழக்கிழமையாகிய இன்று குருவருளும் .. திருவருளும் தங்களனைவரும் பெற்று .. செய்யும் அனைத்து காரியங்களிலும் வெற்றிபெற ஷீரடிபாபாவைப்
பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் ஷிர்டிவாஸாய வித்மஹே ! 
சச்சிதானந்தாய தீமஹி !
தந்நோ சாய் ப்ரசோதயாத் !!

மனவேதனை .. மற்றும் பிரச்சினைகளில் உள்ள ஒருவர் 
மனத்தூய்மையுடன் சாயிகவசத்தினை பாராயணம் செய்யும்போது அனைத்து பிரச்சினைகளும் பனிபோல் மறைந்து மனநிம்மதி பெறுவர் .. மேலும் பாபாவின்மீது நம்பிக்கையும் மென்மேலும் அதிகரிக்கும் ..

சாயி கவசம் -
முன்னர் .. பின்னர் வினைகள் நீக்கி .. எம்மை சாய் என்றும் காக்க ! 
இல்லறவாழ்வில் எல்லா நலமும் .. இறைவா தந்து 
எம்மைக்காக்க ! 
தேடும் மேன்மையாவும் தந்து .. தீர்க்கமுடனே சாயிகாக்க!
நாடும் பிள்ளைச்செல்வம் முதலாய் .. நலங்கள் யாவும் தந்து காக்க ! 
எண்ணிரு செல்வம் இசைந்த வாழ்வில் புண்ணிய நலங்கள் பொலிவுடன் அருள்க ! 
எந்தவடிவில் எவ்வாறாயினும் எதுவும் எம்மை அனுகாதிருக்க உந்தன் நாமம் உருகியே சொல்ல !
வந்தவினையை வாட்டியே ஒழிப்பாய் ! துஷ்டதேவதை ..
தொடரும் பிசாசு .. கெட்டமிருகம் .. கெடுக்கும் உறவு .. 
அனைத்திலிருந்தும் எம்மைக் காத்திடுவாய் ! சாய்நாதரே!

” ஓம் சாய் ராம் “ .. வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED THURSDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF 
SHIRDI SAI .. MAY YOU BE BLESSED WITH EVERY SUCCESS AND
GOOD FORTUNE .. " OM SAI RAM "

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM

 
 
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் 
“ பங்குனி உத்திரத் திருநாள் நல்வாழ்த்துகளும் “ உரித்தாகுக .. புதன்கிழமையும் .. பௌர்ணமித் திதியும் வரும் இந்த மங்களங்கள் மலரும் நன்நாளில் கலியுகவரதனுக்குரிய பங்குனி உத்திர விரதமும் அனுஷ்டிக்கப்படுகிறது .. இன்றைய நாளில் தாங்கள் செய்யும் அனைத்து காரியங்களும் வெற்றி பெற கந்தப்பெருமானைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹேஷ்வர புத்ராய தீமஹி !
தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத் !!

பங்குனிமாதத்தில் பூமி மீனராசியில் இருப்பதால் உத்திர நட்சத்திரத்துடன் சேர்ந்து ஏழாம் இடமாகிய கன்னியில் நின்று முழுகலையையும் பெற்று பூமிக்கு ஒளிவழங்குவான் .. அந்த பூரணபௌர்ணமி நிலாவில் களங்கத்தைக் காணமுடியாது .. களங்கமில்லாத சந்திரஒளி உடலுக்கும் .. உள்ளத்துக்கும் நிம்மதிதரும் ..
பல நற்பலன்களையும் கொடுக்கும் .. எனவே இந்நாள் கூடுதல் பலன்களைத் தரக்கூடிய நாளாகக் கருதப்படுகிறது ..

பங்குனிமாதத்தில் வரும் உத்திர நட்சத்திரம் முருகக்கடவுளுக்குரிய சிறப்புத் தினமாகக் கொண்டாடப்படுகிறது .. 
தமிழ்மாதங்களில் 12ம் மாதம் பங்குனி .. 
நட்சத்திரங்களில் 12ம் நட்சத்திரம் உத்திரம் .. 
எனவே பன்னிரெண்டுகை வேலவனுக்கும் சிறப்பான தினமாகக் கொண்டாடப்படுகிறது .. முருகன் கோயில்களில் இத்தினத்தில் வருடாந்த திருவிழாக்கள் 
( மஹோற்சவம் ) நடைபெறும் ..

இத்தினத்தின் சிறப்புகள் - 
மீனாட்சி கல்யாணம் - சிவனுக்கும் பார்வதிக்கும் சோமசுந்தரர் என்றும் மீனாட்சி என்றும் நாமம் கொடுத்து மணம்செய்வித்த நாளும் பங்குனி உத்திரநாளே !

சிவனின் மோனநிலையைக் கலைத்த மன்மதனை எரித்ததால் கலங்கி நின்ற தேவர்களுக்கு ஆறுதல் வார்த்தையாக சிவன் தேவியை இத்தினத்தில் மணந்தார் என்பது ஐதீகம் .. 

பங்குனி உத்திரக்கல்யாணத் திருவிழா .. பசுவாகிய ஆன்மா .. பதியாகிய சிவத்துடன் இணைவதாக ஓர் உயர்ந்த நிலையினை எடுத்துக்காட்டுகிறது .. இத்தினத்தில் அம்மயப்பனைக் குறித்து விரதமிருப்பர் .. 
பகற்பொழுது உணவு உற்கொள்ளாது .. இரவில் பால் .. பழம் அருந்தி விரதம் அனுஷ்டிப்பர் .. இதனைக் கல்யாணசுந்தர விரதம் என்றும் அழைப்பர் .. 

உத்திர நட்சத்திரத்திற்குரிய கிரகம் சூரியன் .. இந்நாளில் நாம் செய்யும் வழிபாட்டினால் பாவங்கள் அனைத்தும் பஸ்பமாகிவிடும் என்று சூரியபுராணம் கூறிகிறது .. 

ஜனகனின் வில்லை ஒடித்து ஜானகியை மணந்த ராமர் ..
சீதாராமாவானார் .. 
லட்சுமணன் .. சத்ருகன் ஆகியோருக்கும் திருமணம் நடந்தது .. 

சந்திரபகவான் கார்த்திகை .. ரோகிணிஉள்ளிட்ட 27 நட்சத்திரங்களை மனைவியராக அடைந்த புண்ணியத்தினம் ..

மஹாலக்ஷ்மி விரதமிருந்து மஹாவிஷ்ணுவின் 
திருமார்பில் இடம் பிடித்தநாள் .. 
பிரம்மன் தன் மனைவி சரஸ்வதியை நாக்கிலேயே வைத்துக்கொள்ளும்படியான வரத்தைப் பெற்ற நாள் .. 

இந்திராணி இந்திரபதிக்கு கிடைத்த பொன்னாள் ..
திருப்பரங்குன்றத்தில் முருகனுக்கும் தெய்வானைக்கும் 
திருமணம் நடந்தது .. ஆண்டாள் ஸ்ரீரங்க மன்னர் திருமணமும் நடந்தது .. 
மதுரையில் சொக்கநாதருக்கு மீனாட்சி மாலையிட்ட நன்னாள் .. 

ஆலயம் சென்று இறைவனின் திருமணத்தைக்கண்டு வணங்குவது அனைத்து நலன்களையும் தரும் .. திருமணமானவர்களது வாழ்வில் எந்தவிதமான பிரச்சினைகளும் இன்றி மகிழ்ச்சிகரமான வாழ்வு பெற 
ஆலயம் சென்று அனைத்து தெய்வங்களையும் தரிசித்து 
அவர்களது ஆசியையும் .. அருட்கடாக்ஷ்த்தையும் பெறுவோமாக ! வாழ்க வளமுடனும் ... என்றும் நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A SUCCESSFUL DAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD MURUGA .. MAY HIS DIVINE POWER PROTECT YOU FROM ALL THE OBSTACLES AND LEAD YOU TO A HAPPY AND PROSPEROUS LIFE .. " OM MURUGA "

நாளை பங்குனி உத்திரம்!

முருகப் பெருமான், சிவபெருமானுக்கு பிரணவப் பொருளை உபதேசித்த நாள் பங்குனி உத்திரம். அன்று அடியார்கள் காவடி எடுத்து முருகனை வழிபடுகிறார்கள்.

பங்குனி உத்திர நாளில்தான் மீனாட்சி- சுந்தரேஸ்வரர்; முருகன்- தெய்வானை; ராமன்- சீதா; லட்சுமணன்- ஊர்மிளா, பரதன்- மாண்டவி; சத்ருக்கனன்- சுருதகீர்த்தி ஆகியோரின் திருமணங்கள் நடைபெற்றுள்ளன.


தனது தவத்தைக் கலைத்ததால் மன்மதனை எரித்து சாம்பலாக்கினார் ஈசன். இதனால் வருந்திய ரதிதேவி, மன்மதனை உயிர்ப்பித்துத் தருமாறு ஈசனிடம் வேண்டினாள். அதனால் மனம் இரங்கிய ஈசன், அவள் கண்களுக்கு மட்டும் தெரியும்படி மன்மதனை உயிர்ப் பித்தார். இது நிகழ்ந்ததும் பங்குனி உத்திரத் திருநாளில்தான்.

ஸ்ரீவள்ளி அவதரித்த நாளும் பங்குனி உத்திரமே.

பங்குனி மாதம் திருமழப்பாடியில் நடைபெறும் நந்தி கல்யாணத்தை தரிசித்தால் மணமாகா தவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என் பது ஐதீகம்.

பங்குனி உத்திர விரதத்தைக் கடைப் பிடித்த ஸ்ரீமகாலட்சுமி, மகாவிஷ்ணுவின் மார்பில் நிரந்தர இடம் பெற்றாள். பிரம்மன்- சரஸ்வதி, தேவேந்திரன்- இந்திராணி ஆகியோருக்கும் பங்குனி உத்திர விரதம் மேற்கொண்டதால், திருமணம் கைகூடிய தாகப் புராணங்கள் சொல்கின்றன.

பங்குனி உத்திர நாள் அன்று பிறந்ததால், அர்ஜுனன் ‘பல்குநன்’ என்ற பெயர்
பெற்றான்.

SWAMIYE SARANAM IYYAPPA...HAPPY HOLI TO ALL......GURUVE SARANAM....


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் ஹோலிப்பண்டிகை நல்வாழ்த்துகளும் உரித்தாகுக ..
இந்துக்களால் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஹோலியும் ஒன்று .. பெரும்பாலும் வட இந்தியாவில் தான் கொண்டாடப்படுகிறது .. ஹோலி என்றால் மனதில் உள்ள பொறாமை .. தீய எண்ணம் .. அகங்காரம் அனைத்தையும் சுட்டெரித்து அறிவுச்சுடரை ஏற்றும் புனிதநாள் என்றும் கூறுவர் ..
பனிகாலத்திற்கு விடையளித்து .. வெயில்காலத்திற்கு வரவேற்புரை வழங்கும் பண்டிகையாகும் .. விவசாயிகள் அறுவடைமுடித்து நிறைந்த மனதுடன் இதைக் கொண்டாடுவர் .. இந்தபண்டிகையின் சிறப்பு என்னவென்றால் ஒருவர்மீது ஒருவர் வண்ணப்பொடிகளாலோ அல்லது வண்ணம்கலந்த நீரையோ வீசிக்கொண்டு விளையாடுவதுதான் .. வண்ணப்பொடிகள் படாதவண்ணம் இருக்கத்தான் பலரும்
முயற்சிப்பர் .. இருப்பினும் சிக்கிக்கொள்ளும் வாய்ப்புதான் அதிகம் ..
கிருஷ்ணபகவான் தன் குழந்தைபருவத்திலும் .. பால்யபருவத்திலும் கோபியர்களுடன் விளையாடியது
தான் இந்த ஹோலிபண்டிகை .. இப்பொழுதும் ஹோலிப்பாடல்களில் கிருஷ்ணரின் குறும்புகளை விவரித்து பாடுவர் ..
ஹோலிபண்டிகையின் புராணக்கதை - 
ஹிரண்யன் என்னும் அரக்கன் தன்னையே எல்லோரும் கடவுள் எனத் தொழவேண்டும் என்று எண்ணினான் .. அவனது மகன் பிரஹலாதனோ அதை எதிர்த்தான் .. பிரஹலாதனோ மஹாவிஷ்ணுவே கடவுள் என்று போற்றி பூஜித்து வந்தான் .. இதையறிந்த ஹிரண்யன் மகன் என்றும் பாராமல் அவனைக் கொல்லத்துணிந்தான் 
ஆனால் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தன ..
இறுதியில் தனது சகோதரி ஹோலிகாவின் மடியில் பிரஹலாதனை அமரச்செய்து தீமூட்டினான் .. அவளோ நெருப்பினால் இறக்கமுடியாதபடி அதிலிருந்து காப்பாற்றும் தன்மையுடைய சால்வையினை அணிந்திருந்தாள் .. பிரஹலாதனோ தன்னைக்காப்பாற்றும்படி மஹாவிஷ்ணுவை வேண்ட ..
நெருப்புமூட்டப்பட்டவுடன் ஹோலிகாவை சுற்றியிருந்த சால்வை நழுவி பிரஹலாதனைச் சுற்றியதால் காயமின்றி தப்பினான் .. மாறாக ஹோலிகா நெருப்பில் எரிந்து இறந்தாள் ..
ஹோலிகா எரிக்கப்பட்டதே ஹோலிப்பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது தீயசக்திகளின் அழிவை ஹோலிகா உருவபொம்மை எரிப்பதன்மூலம் அழிக்கப்பட்டு விட்டது .. 
மஹாவிஷ்ணுவைப் போற்றுவோம் ! அவரது அருட்கடாக்ஷ்த்தையும் பெற்றிடுவோமாக ! 
“ ஓம் நமோ நாராயணாய “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A HAPPY AND A COLOURFUL HOLI .. MAY LORD VISHNU BLESS YOU AND SHOWER YOU WITH GOOD HEALTH WEALTH AND HAPPINESS 
" OM NAMO NAARAAYANAAYA "

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் ..
திங்கட்கிழமையாகிய இன்று சிவபெருமானுக்கு உகந்த 
சோமவார விரதமாகும் .. ஆலயம் சென்று ஈஸ்வரனை
தரிசிப்பது சாலச்சிறந்தது .. தங்களனைவருக்கும் ஈசனின் அருட்கடாக்ஷ்மும் .. அனைத்து நலன்களும் பெற்றிட பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹா தேவாய தீமஹி ! 
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !! 

சிவனுக்கு உகந்த விரதங்களுள் ‘ சோமவார விரதமும் ’ ஒன்றாகும் .. சோமன் என்றால் சந்திரன் என்று பொருள் 
பார்வதியுடன் கூடிய சிவபெருமான் என்றும் கூறுவர் .. 
சந்திரன் தன்னுடைய கொடியநோய் குணமாக சிவபெருமானை ஆராதனைசெய்து நவக்கிரகங்களில் ஒருவராகத் திகழும் பேறு பெற்றான் .. அவனது பெயரால்
தோன்றியது தான் “ சோமவார விரதம் “ ..

சந்திரனுக்குரிய நாளான திங்கட்கிழமையில் இது கடைப்பிடிக்கப்படுகிறது .. சந்திரனின் ஒருகலையைத் தனது முடிமேல் சூடிக்கொண்டு சந்திரசேகரர் என்ற பெயரையும் ஈசன் பெற்றார் .. சந்திரனின் நல்வாழ்வுக்காக சந்திரனின் மனைவி ரோகிணியும் இவ்விரதத்தை கடைப்பிடித்தாள் .. அன்றுமுதல் பெண்கள் சௌபாக்கியத்துடன் திகழவும் .. கணவனுக்கு மேன்மைகள் உண்டாகவும் .. நோய்நொடிகள் தாக்காதிருக்கவும் இந்தவிரதத்தைக் கடைப்பிடிக்கின்றனர் .. 

சிவனைப் போற்றுவோம் ! ஆயுள்விருத்தியும் .. மன அமைதியும் பெறுவோமாக ! ஓம் நமசிவாய ! 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A SUCCESSFUL MONDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SHIVA .. MAY YOU BE BLESSED WITH GOOD HEALTH 
WEALTH AND HAPPINESS .. ' OM NAMASHIVAAYA ' 
JAI BHOLE NATH ..

swamiye saranam iyyappa...guruve saranam....



அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. 
ஏகாதசித் திதியாகிய இன்று ஆலயம் சென்று விஷ்ணுபகவானைத் தரிசிப்பது சாலச்சிறந்தது .. கல்வியில் உயர்வும் .. குடும்ப ஒற்றுமை சிறக்கவும் .. நல்ல பதவி .. அந்தஸ்தான வாழ்வு அமைந்திடவும் .. பகவானைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் நாராயணாய வித்மஹே ! 
வாசுதேவாய தீமஹி !
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !!
” காயத்ரி மந்திரத்திற்கு நிகரான மந்திரம் இல்லை .. 
தாய்க்கு சமனான தெய்வம் இல்லை .. 
காசியைவிட சிறந்த தீர்த்தம் இல்லை .. 
ஏகாதசிக்கு நிகரான விரதம் இல்லை என்பர் ”
பங்குனிமாத வளர்பிறை ஏகாதசியை “ ஆமலகி ஏகாதசி “ என்றழைப்பர் .. நெல்லிமரத்தடியில் பரசுராமனின் படத்தை வைத்து பூஜைசெய்து .. நெல்லிமரத்தை 108முறை சுற்றி பூ போட்டால் புண்ணியநதிகளில் நீராடியபலனும் .. ஆயிரம் பசுக்களை தானம்செய்த பலனும் கிட்டும் ..
நெல்லி திருமாலின் தோன்றலாகும் .. எல்லா தெய்வசக்திகளும் கோமாதா .. காமதேனுவுக்குள் அடக்கம்போல நலன்பயக்கும் 
சக்திகள் யாவும் நெல்லியினுள் அடக்கம் .. ஆதிசங்கருக்கு அளிக்கப்பட்ட ஒரு நெல்லி அவரை கனகதாரா துதியை பாடச்செய்து தங்கமழையை பொழியவைத்ததுபோல .. பெரும்பயன் அருளவல்லது ..
அலைபாயும் மனதை கட்டுப்படுத்தி அரங்கனையே நினைக்கச்
செய்திட விஷ்ணுபுராணம் .. பாகவதம் .. ராமாயணம் போன்ற 
இறைத் திருவிளையாடல் நூல்களையோ .. விஷ்ணுசகஸ்ரநாமம் .. நாலாயிர திவ்யபிரபந்தம் போன்ற துதிகளையோ தொடர்ந்து பாராயணம் செய்வதும் நல்லது .. 
பாராயணத்தால் பயன்பெறுவதோடு முறையற்ற செயல்பாடுகளில் ஈடுபடாமல் இருப்பதால் அல்லல்கள் வராமலும் காக்கப்படுவோம் ..
கருணாகரனைப் போற்றுவோம் ! கவலைகள் அனைத்தும் நீக்குவோமாக ! ஓம் நமோ நாராயணாய ! வாழ்க வளமுடனும் !
என்றும் நலமுடனும் !
GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED 
" EKADASI " WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD VISHNU ..
MAY YOU BE BLESSED WITH GOOD HEALTH .. WEALTH .. AND HAPPINESS .. " OM NAMO NAARAAYANAAYA "
 

swamiye saranam iyyappa....




அனைவருக்கும் எனதன்பார்ந்த காலை வந்தனங்கள் .. மங்களங்களை அள்ளித்தரும் வெள்ளிக்கிழமையாகிய இன்று ..
ஹரிஹர ப்ரஹ்மாதி தேவர்களாலும் ஸேவித்து வணங்கப்படும் அன்னை மஹாலக்ஷ்மியைத் துதித்து .. அன்னையின் அருட்கடாக்ஷ்மும் .. சகல ஐஸ்வர்யங்களும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன் அன்னையை வணங்குகின்றேன் .. 

ஓம் மஹாலக்ஷ்மீ ச வித்மஹே !
விஷ்ணு பத்னீ ச தீமஹி ! 
தந்நோ லக்ஷ்மி ப்ரசோதயாத் !! 

ஸ்ரீலக்ஷ்மி வைகுண்டத்தில் - மஹாலக்ஷ்மியாகவும் ..
இந்திரனிடத்தில் - சொர்க்க லக்ஷ்மியாகவும் ..
மன்னர்களிடத்தில் - ராஜலக்ஷ்மியாகவும் ..
வீரர்களிடம் - தைரியலக்ஷ்மியாகவும் ..
குடும்பத்தில் - கிரஹலக்ஷ்மியாகவும் விளங்குகிறாள் .. 

மஹாலக்ஷ்மி பாற்கடலில் தோன்றியவள் .. உப்பின் பிறப்பிடம் கடல் .. அதனால் வெள்ளிக்கிழமைகளில் இல்லங்களுக்கு உப்பு வாங்குதல் மிகவும் விசேஷமாகும் .. 

அன்னையைப் போற்றுவோம் ! சகலநலன்களையும் பெறுவோமாக ! ஓம் சக்தி ஓம் ! வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED FRIDAY 
WITH THE DIVINE BLESSINGS OF GODDESS LAKSHMI .. 
MAY ' MAA LAKSHMI ' SHOWER YOU WITH GOOD STRENGTH .. 
GOOD FORTUNE .. AND HAPPINESS .. " JAI MAA SHAKTHI "

Today ulshavabali at Sabarimala sannidanam done by Sabarimala Thantri Brahmasree Kandararu Mahesh Mohanaru Swamiye saranam Ayyappa 🙏 Sarvam sastha mayam 🙏






SWAMY SARANAM..GURUVE SARANAM

 
அனைவருக்கும் எனதன்பார்ந்த காலை வந்தனங்கள் .. குருவருளும் .. திருவருளும் கூடிய நன்னாளாகிய இன்று அருள்மிகு ஷீரடி பாபாவின் அருட்கடாக்ஷ்ம் தங்கள் அனைவரும்
பெற்று .. நல்லாரோக்கியமும் வாழ்வில் அனைத்திலும் வெற்றியும் கிட்டுவதாக .. 
. 

சாயிகவசம் -
சாயிபாதம் என்றும் பணியும் சேயாம் எம்மைச் சாயி காக்க ! 
தூலம் சூட்சுமம் இருநிலை காக்க ! 
வாழும் பிராணவாசியைக் காக்க !
கோசம் ஐந்தும் சாயிகாக்க ! 
கொற்றவன் எங்கள் உயிரைக்காக்க ! 
காரண காரிய இயல்பைக்காக்க ! 
பூரண ஞானப் புலன்கள் காக்க !
நாடிகள் மூன்றையும் நாயகன் காக்க ! 
ஊடிடும் சக்கரம் யாவையும் காக்க ! 

உச்சியில் என்றும் உன்னடி காக்க! 
மெச்சும் மேனியை மெய்யெனகாக்க !
எலும்புத்தசைகளை இயல்புடன் காக்க !
இயங்கும் நரம்புமண்டலம் காக்க !
வாதம் .. பித்தம் .. சிலேட்டுமம் என்னும் வகைகள் மூன்றையும் 
வசமாய்க் காக்க ! எந்தநோயும் வாராதெம்மை காக்க ! 
எங்கள் சாயி என்றும் காக்க !
உச்சிமுதலாம் பாதம்வரையில் மெச்சி எம்மை பாபா காக்க !! 

பாபாவைப் போற்றுவோம் ! அவரது திருப்பாதங்களில் சரணடைவோமாக ! ஓம் சாய் ராம் ! 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED THURSDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF SHIRDI SAI .. 
MAY YOU BE BLESSED WITH EVERY SUCCESS .. BEST HEALTH AND HAPPINESS .. " OM SAI RAM "

"வளர்பிறை அஷ்டமி" ; 15-3-16..." பைரவ பூஜை".
துன்பங்களும், துயரங்களும் வாழ்க்கையில் தொடர்கதையாகி போனவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதாக பைரவர் வழிபாடு கூறப்படுகிறது. 
சிவ வழிபாடு செய்து விட்டு அதற்கான பலன்களை எதிர்பார்க்கும் பக்தர்களுக்கு உடனடி நிவாரணம் தரும் கடவுளாக பைரவர் விளங்குகின்றார்.

சிவபெருமானின் அவதாரங்களில் பைரவர் அவதாரமும் ஒன்று. சனிபக வானின் குரு.. பைரவர் மூர்த்தியாகும். ஸ்ரீ பைரவர் அவதாரத்தில் 64 வகைகள் உண்டு. பைரவரின் திருவுருவத்தில் பண்ணிரண்டு இராசிகளும் அடக்கம்.

பைரவரின் திருவுருவத்தில்....
தலையில் மேஷ இராசியும், வாய் ரிஷப இராசியும், கைகளில் மிதுன இராசியும், மார்பில் கடக இராசியும், வயற்றில் சிம்மம் இராசியும், இடையில் கன்னி இராசியும், புட்டத்தில் துலாம் இராசியும், பிறப்பு உறுப்பில் விருச்சிக இராசியும், தொடையில் தனுசு இராசியும், முகங்களில் மகர இராசியும், காலில் கீழ்பகுதி கும்ப இராசியும், காலின் அடியில் மீன இராசியும் அமைந்துள்ளன.

27 நட்சத்திரங்களுக்கும் உரிய, சிவபெருமானின் அறுபத்து நான்கு திருமேனிகளுள் ஒருவரான பைரவரை வணங்க வேண்டி செல்ல வேண்டிய ஸ்தலங்கள்.

27 நட்சத்திரங்கள் பெயர் மற்றும் 
பைரவர் அருள்தரும் தலங்களின் பெயர்கள்.

1. அசுவினி... ஞானபைரவர் பேரூர்
2. பரணி.... மகாபைரவர் பெரிச்சியூர்
3. கார்த்திகை... அண்ணாமலை பைரவர் திருவண்ணாமலை
4. ரோகிணி.... பிரம்ம சிரகண்டீஸ்வரர் திருக்கண்டியூர்
5. மிருகசிரிஷம்... க்ஷேத்திரபாலர் க்ஷேத்ரபாலபுரம்
6. திருவாதிரை... வடுக பைரவர் வடுகூர்
7. புனர்பூசம்.... விஜய பைரவர் பழனி
8. பூசம்... ஆஸின பைரவர் ஸ்ரீவாஞ்சியம்
9. ஆயில்யம்.... பாதாள பைரவர் காளஹஸ்தி
10. மகம்... நர்த்தன பைரவர் வேலூர்
11. பூரம்... பைரவர் பட்டீஸ்வரம்
12. உத்திரம்... ஜடாமண்டல பைரவர் சேரன்மகாதேவி
13. அஸ்தம்... யோகாசன பைரவர் திருப்பத்தூர்
14. சித்திரை... சக்கரபைரவர் தர்மபுரி
15. சுவாதி.... ஜடாமுனி பைரவர் பொற்பனைக்கோட்டை
16. விசாகம்... கோட்டை பைரவர் திருமயம்
17. அனுஷம்... சொர்ண பைரவர் சிதம்பரம்
18. கேட்டை... கதாயுத பைரவர் சூரக்குடி
டி.வயிரவன்பட்டி திருவாடுதுறை, தபசுமலை
19. மூலம்... சட்டைநாதர் சீர்காழி
20. பூராடம்... வீரபைரவர் அவிநாசி, ஒழுகமங்கலம்
21. உத்திராடம்... முத்தலைவேல் வடுகர் கரூர்
22. அவிட்டம்... பலிபீடமூர்த்தி சீர்காழி, ஆறகழூர்
(அஷ்டபைரவ பலிபீடம்)
23. திருவோணம்... மார்த்தாண்ட பைரவர் வயிரவன் பட்டி
24. சதயம்... சர்ப்ப பைரவர் சங்கரன்கோவில்
25. பூரட்டாதி... அஷ்டபுஜபைரவர் கொக்கரையான்பேட்டை, தஞ்சாவூர்
26. உத்திரட்டாதி... வெண்கலஓசை பைரவர் சேஞ்ஞலூர்
27. ரேவதி... சம்ஹார பைரவர்
தாத்தையங்கார்பேட்டை.

ஒவ்வொரு நட்சத்திரதாரரும் அவரவர் நட்சத்திரத்திற்கு குறிப்பிடப்பட்டுள்ள பைரவரை வணங்கிவர ஸ்ரீ பைரவ மூர்த்தியின் பரிபூரண திருவருளை பெற்று கொள்ளுங்கள். மேலும் அனைத்து செவ்வாய்க் கிழமைகளிலும் பைரவரை வழிபடுவது சிறப்பு. 

“ஓம் பைரவாய நமஹ” 

(மந்திர சுலோகங்களுக்கு விளக்கம் தெரியாமல் மந்திரம் சொல்லி வணங்குதல் ஆகாது என்பதால் பைரவரை வணங்கும் போது இம்மந்திரத்தை 108 முறை சொல்லி மனதிற்குள் தியானித்தாலே போதும். பைரவர் அருள் கிட்டும் என்பது ஐதீகம்.)

ஓம் பைரவாய நமஹ

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM....


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. 
புதன்கிழமையாகிய இன்று இப்பிரபஞ்சத்தைக் காத்தருளும் ஸ்ரீமஹாவிஷ்ணுவைத் துதித்து தங்களனைவரது மனநலமும்
உடல்நலமும் நல் ஆரோக்கியமாகத் திகழ்ந்திடவும் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் நாராயணாய வித்மஹே !
வாசுதேவாய தீமஹி !
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !! 

” ஓம் நமோ நாராயணாய “ என்ற எட்டெழுத்து மந்திரத்தின் இனிய பொருள் .. 

மிகவிசேஷமாக ஸ்ரீவைஷ்ணவத்தில் மட்டுமே இறைவனை பகவான் என்ற அடைமொழியில் அழைக்கிறோம் .. 
ஞானம் .. சக்தி .. பலம் .. ஐஸ்வர்யம் .. வீரியம் .. தேஜஸ் .. ஆகிய
ஆறுவகையான குணங்களை ஒன்றாகக் கொண்டவன் என்பதே பகவான் என்ற வார்த்தையின் உண்மை பொருளாகும் .. 

இத்தகைய பகவான் சத்யத்வம் .. ஞானத்வம் .. அநந்தத்வம் .. 
ஆனந்தத்வம் .. அமலத்வம் .. என்ற உண்மை .. அறிவு .. எல்லையில்லா நிலை .. இன்பம் .. தூய்மை ஆகிய வடிவோடு பக்தர்களுக்கு அருள்பாலிப்பதாகவும் நம்பப்படுகிறது .. 
இறைவனின் திருகுணங்களாக தென்கலை பிரிவினர் சொல்லும் சௌலப்யம் .. சௌசீல்யம் .. காருண்யம் ஆகியவைகளும் இங்கே
சிந்திக்கதக்கதாகும் ..

இவ்வளவு பெருமைவாய்ந்த திருமாலின் அருள் அமுதத்தை 
சாதாரண மனிதன்கூட நேருக்குநேராக அனுபவிக்கும் ஒருமார்க்கத்தை ஸ்ரீவைஷ்ணவம் உலகுக்கு தந்துள்ளது .. அந்த
அமுதம் என்னவென்றால் .. “ ஓம் நமோ நாராயணாய “ என்ற 
எட்டெழுத்து மந்திரமாகும் .. 

இதில் வரும் ஓம் என்ற பிரணவம் மூலமந்திரம் என்பது நாம் அறிவோம் .. வைஷ்ணவ சித்தாந்தப்படி அ .. உ .. ம .. என்ற மூன்று எழுத்துக்களின் சேர்க்கை ஒலியே ஓம் என்பதாகும் .. 
இதனுள் இருக்கின்ற அகரம் இறைவனையும் .. மகரம் உயிரையும் .. உகரம் படைத்தலையும் காட்டுவதாகும் .. 

உயிரானது இறைவன் ஒருவனுக்கே அடிமை என்பதைக் காட்டுவதே மந்திரத்தின் கடைசிபகுதியில் வரும் நம என்ற 
வார்த்தையாகும் .. நம என்ற வார்த்தையில் ந என்ற முதல் எழுத்தில் இல்லை என்றபொருள் மறைந்திருக்கிறது .. 
மீதமுள்ள மகரம் உயிரை குறிப்பதாக அறிந்தோம் .. அதாவது
இதன்பொருள் நானும் எனக்குறியவன் அல்ல என்பதாகும் .. அப்படியென்றால் நான்யார்க்குரியவன் ..? .. சந்தேகமே வேண்டாம் நான் நாராயணன் ஒருவனுக்கே அடிமை .. அவனுக்கே நான் தாசானுதாசன் .. 

இந்தமந்திரத்தில் மீதமுள்ள நாராயணாய என்பது இதைதான் சொல்லாமல் சொல்கிறது .. மேலும் இதில் உள்ள 
நார .. அயன .. ஆய .. என்ற வார்த்தைகளுக்கு தனித்தனி பொருள் உண்டு .. நார என்பது நரனிடம் இருந்து தோன்றிய உயிர்களைக் குறிக்கும் .. அயன என்பது உபாயம் .. பலன் .. ஆதாரம் என்ற பலபொருள்களைத் தருகிறது .. இவை இரண்டும் சேர்ந்த நாராயண என்ற சொல் உயிர்களுக்கு ஆதாரம் என்ற பொருளை காட்டுகிறது .. கடைசியாக உள்ள ஆய என்றபதம் பணி என்ற பொருளை கொண்டது .. அதாவது உயிர்கள் எப்போதும் இறைவனின் பணிக்காகவே உரியவைகள் என்பது இதன் அர்த்தமாகும் .. 

நாமும் பகவானைப் போற்றி அவரது திவ்யபாதக்கமலங்களில் 
சரணடைவோமாக ! “ ஓம் நமோ நாராயணாய “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A SUCCESSFUL DAY 
WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD VISHNU .. MAY YOU BE 
BLESSED WITH GOOD HEALTH .. WEALTH .. AND HAPPINESS .. 
" OM NAMO NAARAAYANAAYA "



அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. தங்களனைவரது வல்வினை நீக்கி .. வரும்வினைப்போக்கி செல்வமும் ..செல்வாக்கும் தந்து .. அழகும் .. அறிவும் தந்திடும் வள்ளிமணாளனை வடிவேலவனைத் துதிப்போமாக ! 

சொல்லில் அடங்கா திருப்புகழ் கொண்டவனே ! உள்ளம் ஒன்றி
வழிபடுபவர்களுக்கெல்லாம் அருளைப் பொழியும் ஆறுமுகனே !
நம்பினோரைக் கரைசேர்த்திடும் நாயகனே ! 

வாழ்நாள் முழுவதும் எமக்கு துணையாக வருபவனே ! 
கிரகதோஷம் நம்மைத்தாக்காமல் காத்தருளவேண்டுகின்றோம் !

ஓம் சரவணபவாய நமஹ ! வாழ்க வளமுடனும் ! என்றும் நலமுடனும் !

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED TUESDAY
WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD MURUGA .. 
MAY HE REMOVE ALL THE OBSTACLES ON YOUR PATH AND SHOWER YOU WITH EVERY SUCCESS .. "

 OM MURUGA "


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. இன்று 
“ காரடையான் நோன்பு “ மாசியும் பங்குனியும் கூடும் நேரத்தில் 
பெண்கள் தங்களது கணவரது நல்வாழ்விற்காக நோற்கும் நோன்பாகும் .. 

சாவித்ரி தன் கணவனான சத்யவானை எமதர்மராஜனிடமிருந்து மீட்டது இந்நாளில் தான் .. சுமங்கலிப்பெண்கள் தங்கள் கழுத்தில் 

மங்கலநாண் நிலைக்கவும் .. தங்களது கணவன் நீண்ட ஆயுளோடு வாழவேண்டும் என்பதற்காகவும் சாவித்ரி அம்மனை வேண்டி நோற்கும் நோன்பாகும் .. 

தோரம் கருண் ஹாமி ஸுபஹே !
ஸஹாரிதரம் தாரம்யஹம் பர்து !
ஆயுஷ்ய ஸித்யர்த்தம் ஸுப்ரீதா பவ ஸர்வதா !! 

பொருள் -
அன்னையே ! எனது கணவனின் நீண்ட ஆயுளைக்கருதி மஞ்சள்
கயிற்றினை ( சரடை ) கழுத்தில் கட்டிக்கொள்கிறேன் ! நீ சந்தோஷத்துடன் இருந்து அருள்புரிவாயாக ! 
எனும் ஸ்லோகத்தைச் சொல்லி பெண்கள் தங்கள் கழுத்தில் கட்டிக்கொள்ளும் நோன்பு .. மஹா உன்னதமான விரதமாகும் .. 

“ மாசிக்கயிறு பாசிபடியும் “ ( விருத்தியாகும் ) என்பர் .. 
‘ உருகாத வெண்ணெயும் .. ஓரடையும் வைத்து நோன்பு நோற்றேன் .. ஒருநாளும் என் கணவன் என்னைப் பிரியாமல் 
இருக்கவேண்டும் ‘ அருள்புரிவாயாக ’ என்று ஒவ்வொரு சுமங்கலிப் பெண்ணும் அன்னை காமாக்ஷியிடம் வேண்டி மூத்தபெண்கள் இளையபெண்களுக்கு சரடை கட்டிவிடவேண்டும் .. பின் தானும் கட்டிக்கொள்வர் .. 

சாவித்ரியின் வரலாற்றினை அறிந்தோ .. கேட்டோ .. படித்தோ வரின் கணவரின் ஆயுளும் .. ஆரோக்கியமும் அதிகரிக்கும் என்பது கூற்று .. 

பதிபக்தியில் சிறந்துவிளங்கிய சாவித்ரி தன் விரதபலத்தாலும் ..
கற்பின் மஹிமையாலும் .. யாராலும் காணமுடியாத யமனைக்கண்டு உரையாடி அவரது பாராட்டுகள் .. வரங்களைப் பெற்று நலம்பெற்றவரலாறு .. “ சத்தியவான் சாவித்ரி வரலாறு “ 

சாவித்ரி சத்யவான் திருமணமாகி ஒருவருட காலமே உயிருடன் இருப்பான் என்பதை அறிந்தும் அவனையே மணப்பேன் என்ற உறுதியுடன் அவனை மணந்து திருமணத்திற்குப்பின் மாமனார் .. மாமியார் .. கணவன் ஆகியோருடன் காட்டுவாழ்க்கை மேற்கொண்டு பணிவிடைகள் செய்து போற்றி மனநிறைவுடன்
வாழ்ந்துவந்தாள் .. மாங்கல்யபலம் வேண்டி விரதங்கள் .. நோன்புகள் அனைத்தையும் முறைப்படி அனுஷ்டித்தாள் .. 

சத்தியவானின் ஆயுள்காலம் முடியும் நேரம் வந்தபோது அவனது உயிரை எடுக்க கையில் பாசக்கயிற்றுடன் கரிய உருவம் ஒன்று வந்தது .. அது யமன் என்றறிந்த சாவித்ரி யமனை நமஸ்கரிக்க .. யமனும் அவளை “ தீர்க்கசுமங்கலி பவ “ 
என்று ஆசீர்வதித்தார் .. 

சத்யவானின் உயிரை எடுத்துச்சென்ற யமனை சாவித்ரி பின் தொடர்ந்து சென்று அவனுடன் அறிவுபூர்வமாக வாதாடி யமன்
தடுத்தபோதும் கேளாமல் சத்தியவானின் உயிரைத்தவிர வேறு எது வேண்டுமானாலும் கேள் என்ற யமனிடம் மாமனார் மாமியார் குறித்து வரம்கேட்ட சாவித்திரி .. 
” என் கற்புநிலை பழுதுபடாமல் எனக்கு நூறுபுத்திரர்களைக் கொடு “ என்று சாமார்த்தியமான ஒருவார்த்தைக் கேட்டுப் பெற்றாள் .. சாஸ்திரங்கள் அனைத்தையும் கற்றறிந்த யமனும் அவளிடம் தோல்வியுற்று சத்யவானின் உயிரையும் விடுவித்தார் ..

என்றும் தீர்க்கசுமங்கலிவரம் அருளும் அன்னை காமாக்ஷியைப்
போற்றி அன்னையின் அருட்கடாக்ஷ்த்தையும் பெற்றிடுவோம் ! 
ஓம் சக்தி ஓம் ! “ தீர்க்கசுமங்கலி பவ “ .. வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED 
" KARADAYAN NONBU " WITH THE BLESSINGS OF GODDESS MAA SHAKTHI .. THIS NONBU IS CELEBRATED IN HONOUR OF SAVITHRI 'S SUCCESS IN BRINGING BACK HER HUSBAND SATHYAVAN'S LIFE FROM
THE HANDS OF YAMADEV .. THE GOD OF DEATH .. THE RITUAL IS KNOWN AS " SAVITRI NONBU " .. " DHEERGA SOWMANGALYAM
"