அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. கார்த்திகை விரதமாகிய இன்று கலியுகவரதனாகிய கார்த்திகேயனைத் துதித்து தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் மகிழ்ச்சிகரமான நன்னாளாகத் திகழ்ந்திடவும் .. இக .. பர சுகங்கள் யாவும் பெற்றிடவும் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் கார்த்திகேயாய வித்மஹே ! 
சக்தி ஹஸ்தாய தீமஹி !
தந்நோ ஸ்கந்த ப்ரசோதயாத் !! 

குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்குமிடம் என்பர் .. 
மலையும் மலைச்சார்ந்த இடமும் .. குறிஞ்சி .. குறிஞ்சிக்கடவுளாக குமரன் முருகனே மலைகளின் மீது ஆட்சி செய்கிறார் .. 

முருகப்பெருமானுக்குரிய விரதங்களில் கார்த்திகை விரதம் நட்சத்திர அடிப்படையில் அனுஷ்டிக்கப்படுகிறது .. சிவபெருமான் தன் ஐந்துமுகங்களோடு ஆறாவதுமுகமான அதோமுகத்தையும் சேர்த்து ஆறுகண்களில் இருந்து நெருப்புப்பொறியை தோற்றுவித்தார் .. அப்பொறிகளை வாயுவும்
அக்னியும் கங்கையில் சேர்த்தனர் .. அதிலிருந்து ஆறுகுழந்தைகள் உருவாகின ..அவர்களை வளர்க்கும் பொறுப்பை கார்த்திகைப்பெண்கள் ஆறுபேரிடம் ஒப்படைத்தார் ..
அவர்கள் பாலூட்டி சீராட்டி வளர்த்தனர் .. 

பிள்ளைகள் ஆறுபேரையும் காணவந்த அன்னை பார்வதிதேவி 
ஆறுமுகத்தையும் ஒருமுகமாக்கினாள் .. அப்பிள்ளைக்கு கந்தன் என்ற திருநாமம் உண்டானது .. கந்தன் என்றால் ஒன்றுசேர்ந்தவன் என்றுபொருள் ..சிவபெருமான் முருகனை வளர்த்து ஆளாக்கிய கார்த்திகைப் பெண்களிடம் நம்பிள்ளையை நல்லமுறையில் வளர்த்து ஆளாக்கிய நீங்கள் அனைவரும் நட்சத்திர மண்டலத்தில் என்றென்றும் நிலைத்து வாழ்வீர்கள் ..
உங்களை நினைவுபடுத்தும் வகையில் முருகனுக்கு விரதமிருந்து வழிபடுவோர் எல்லா சௌபாக்கியங்களையும் பெறுவார்கள் என்று அருள்புரிந்தார் .. 

நாமும் கார்த்திகை நன்னாளில் முருகப்பெருமானைத் துதித்து 
குறைகள் நீங்கப்பெற்று .. நல்வாழ்வும் பெறுவோமாக ! 
“ ஓம் சரவணபவாய நமஹ “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SUNDAY 
WITH THE DIVINE BLESSINGS OF LORD MURUGA .. MAY YOU BE BLESSED WITH LOVE AND HAPPINESS .. " OM MURUGA "

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM....

 
 
 
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. 
சனிக்கிழமையாகிய இன்று சதுர்த்தி திதியும் வருவதால் ஆலயம் சென்று கணபதியை தரிசிப்பது சாலச்சிறந்தது .. 
வினைகளை அண்டவிடாமல் விரட்டிக்காத்து .. ரட்சித்து . தங்கள்
வாழ்வில் ஏற்படும் இடர்பாடுகளையும் ..சோகங்களையும் களைந்து .. நிம்மதியான வாழ்வு அமைந்திட விக்னேஷ்வரனைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே !

வக்ரதுண்டாய தீமஹி !
தந்நோ தந்தி ப்ரசோதயாத் !!

திதிகளிலே சதுர்த்தித் திதி விநாயகருக்கு உகந்த திதியாகும் ..
“ சனி “ அவரைப்பிடிக்க வரும்பொழுதெல்லாம் .. 
‘ இன்று போய் நாளை வா ‘ என்று எழுதிவைக்கச் சொல்லி தந்திரத்தைக் கையாண்ட தலைவன் விநாயகரே ! 

எந்தவொரு காரியத்தைத் தொடங்கினாலும் விநாயகரை வழிபட்டுத்தான் நாம் தொடங்குவது வழக்கம் .. சதுர்த்தியில் விரதமிருந்து ஆனைமுகத்தோனை முறையாக வழிபட்டால்
வேண்டிய வரத்தையும் .. காரிய அநுகூலத்தையும் பெருமையுடன் நமக்கு அளிப்பார் .. 

விநாயகரைப் பணிவோம் ! வினைகள் நீங்கப் பெறுவோமாக !
“ ஓம் விக்னேஷ்வராய நமஹ “ .. வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED 
" CHATHURTI DAY " AND MAY LORD GANESHA SHOWER ABUNDANT 
GOOD LUCK ON YOU AND MAY HE ALWAYS BESTOW YOU WITH HIS 
BLESSINGS .. " JAI GANESHA "

 
 
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. வெள்ளிக்கிழமையாகிய இன்று சகலசௌபாக்கியங்களையும் அள்ளித்தரும் அன்னை மஹாலக்ஷ்மியின் அருட்கடாக்ஷ்ம் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன் .. அன்னையை வணங்குகின்றேன் .. 

ஓம் மஹாலக்ஷ்மீ ச வித்மஹே ! 
விஷ்ணு பத்னீ ச தீமஹி ! 
தந்நோ லக்ஷ்மி ப்ரசோதயாத் !! 

” லக்ஷ்மிகடாக்ஷ்ம் ” என்னும் சொல் ஏதோ செல்வச்செழிப்பை மட்டும் குறிப்பது அல்ல .. அது ஒரு மிகப்பெரிய பதம் .. சகலசௌபாக்கியங்களையும் குறிப்பது .. 
வெற்றி 
வித்தை
ஆயுள்
சந்தானம்
தனம்
தான்யம்
ஆரோக்கியம்
இப்படி அனைத்தையும் ஒருங்கே அமைவதுதான்
” லக்ஷ்மிகடாக்ஷ்ம் “ ..

நம்முள் மண்டிக்கிடக்கும் தீமை எனும் தாரித்திரியத்தை அழித்து
ஞானம் எனும் ஐஸ்வர்யத்தை அருள்பவளே ! ஸ்ரீமஹாலக்ஷ்மி!
அன்னையைப் போற்றுவோம் ! மங்களங்கள் யாவும் நித்யாவாசம் செய்து தங்களனைவரையும் மகிழ்விப்பாளாக ! 
ஓம் சக்தி ஓம் ! வாழ்க வளமுடனும் ! என்றும் நலமுடனும் ! 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED FRIDAY 
WITH THE BLESSINGS AND GUIDANCE OF GODDESS LAKSHMI ..
MAY SHE SHOWER YOU WITH GOOD HEALTH .. WEALTH AND FORTUNE 
" OM SHAKTHI " .. JAI MAA LAKSHM ..

இந்துக்கள் மேற்கொள்ள வேண்டிய சடங்குகள்

Hinduism Facts - இந்து சமய உண்மைகள்


இந்துக்கள் தங்களின் வாழ்நாளில் மேற்கொள்ள வேண்டிய முக்கியமான சில சடங்குகளை தர்மநூல்கள் வரையறுத்துக் காட்டுகின்றன. சடங்கு என்பது ஒரு முக்கிய நிகழ்ச்சி எனப் பொருள்படும். சடங்குகளை எளிமையான முறையில் மேற்கொள்வதே சிறப்பாகும். இவை சம்ஸ்காரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்துக்களின் ஐந்து முக்கிய கடமைகளில் ‘சம்ஸ்காரமும்’ ஒன்றாகும். ’சம்ஸ்காரம்’ என்றால் முறைப்படுத்துதல் அல்லது தயார்படுத்துதல் எனப் பொருள்படும். கிரியசூத்திர நூல் 16 புற சடங்குகளை விவரிக்கின்றது. இந்த பதினாறு சடங்குகளும் புறத்தில் செய்யப்பட வேண்டியவை. அகத்தில் செய்யப்பட வேண்டிய எட்டு சடங்குகளையும் இந்நூல் விளக்குகின்றது. இவை கௌதமர் தர்மசூத்திரம் (8:14-8:25) இல் விளக்கப்பட்டுள்ளன.

அகத்தின் எட்டு (8) சடங்குகள்:

1) எல்லா உயிர்களிடமும் கருணை
2) பொறுமை
3) பொறாமை இல்லாமை
4) மனத்தூய்மை
5) சாந்தம்
6) நல்ல எண்ணங்களைக் கொண்டிருத்தல்
7) தாராளகுணம்
8) பேராசை இல்லாமை
புறத்தின் பதினாறு (16) சடங்குகள்:
1) திருமணம் (விவாகம்) – தகுதிபெற்ற வயதினை உடைய ஓர் ஆண் ஒரு பெண்ணின் கரங்களைப் பற்றி அக்கினி சாட்சியாக ஏழு முறை அக்கினியைச் சுற்றி வருதல். இறைவன் ஜோதிவடிவானவர். எனவே அக்கினியான ஜோதியை சாட்சியாக கொண்டு திருமணம் நடக்கின்றது. தமிழர்களின் திருமணத்தின் போது மணமகன் மணமகள் கழுத்தில் தாலி அணிவிக்கிறான். இது மிகவும் முக்கிய சடங்கு ஆகும். பெரும்பாலான இந்துக்கள் வாழ்நாளில் இந்த சடங்கு மிக முக்கியமானதாக மேற்கொள்ளப்படுகின்றது.
2) முதல் இரவு (கர்பதானம்) – திருமணமான ஆணும் பெண்ணும் குழந்தை பாக்கியத்தைப் பெறுவதற்காக இறைவனை பிரார்த்தனை செய்துகொண்டு தாம்பத்திய பந்தத்தில் ஈடுபடுதல். தாயான பெண் ஓர் உயிர் தன் உடலில் தங்கி உடலாக உருவெடுப்பதற்கு தன் கருவறையைத் ‘தானமாக’ தருகிறாள். கணவனும் மனைவியும் விளக்கேற்றி இறைவனை மனதார வழிபட்டு வாழ்க்கையைத் துவங்குவதன் மூலம் இந்த சடங்கு மேற்கொள்ளப்படுகின்றது. 3) கருவுற்றல் (பும்சவனம்) – கருவுற்ற மனைவி தாய் ஸ்தானத்தை அடைகிறாள். எனவே கணவன் அவளை தாயைப் போல பராமரித்து பணிவிடை செய்யவேண்டும். அவள் மனம் நோகும்படி ஒரு வார்த்தை கூட பேசாமல் விரதம் மேற்கொள்ள வேண்டும். பிருகதாரண்யக உபநிடதம் (6.4), மனைவி கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் கணவன் அவளுக்கு ஆரோக்கியமான உணவைச் சமைத்துக் கொடுக்க வேண்டும் (அல்லது ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும்) என அறிவுரை செய்கின்றது. கணவன் மனைவிக்காக பிரார்த்தனை மேற்கொள்ள வேண்டும். தன் மனைவி குழந்தையை நலமாகப் பெற்றெடுக்கும் வரை இந்த சடங்கை கடைப்பிடிக்க வேண்டும்.



4) வளைக்காப்பு (சீமந்தம்) – கருவுற்ற பெண்மணி எந்தவொரு சிரமமும் இல்லாமல் மனமகிழ்ச்சியுடன் குழந்தையைப் பெற்றெடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் முக்கிய சடங்காகும். பெரும்பாலும் 8-ஆவது அல்லது 9-ஆவது மாதத்தில் மேற்கொள்ளப்படுகின்றது. கர்ப்பமாக இருக்கும் பெண்மணிக்கு அவளின் உறவினர்களும் நண்பர்களும் பழங்களும் பலகாரங்களும் ஊட்டிவிட்டு மகிழ்ச்சிப் படுத்துவார்கள். மேலும் வளையல்களும் அணிவிப்பார்கள். கர்ப்பிணி பெண் ஆசைபடும் அனைத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும், அவளுக்கு வருத்தம் ஏற்படுத்தும் விஷயங்களைத் தவிர்த்துவிட வேண்டும் என யஜ்ஞவல்கய ஸ்மிரிதி (3:79) தெரிவிக்கின்றது. மேலும் பிரசவ காலம் நெருங்கும் போது அவளின் கணவன் எப்போதும் அவளின் அருகாமையில் இருக்கவேண்டும் என்றும் நீண்டதூரப் பயணத்தை தவிர்த்து விட வேண்டும் எனவும் அறிவுரைக்கப்படுகின்றது. இது மிக முக்கியமான சடங்கு. 5) குழந்தை பிறந்த சடங்கு (ஜாதகர்மன்) – குழந்தை பிறந்ததைக் கொண்டாடும் சடங்காகும். இந்துதர்மத்தைப் பொறுத்தவரை ஒருவன் இரண்டு முறை பிறக்கின்றான். தாயின் கருவறையில் தோன்றி பிறப்பது ஒருமுறை, கல்வியைத் தொடங்கும் போதும் இரண்டாவது முறை ஆகும். பிறந்த குழந்தையின் நாவில் தேன் அல்லது சீனிப்பாகு தடவி இச்சடங்கு மேற்கொள்ளப்படுகின்றது. இந்த சடங்கை வீட்டிலுள்ள பெரியவர்கள் அல்லது குழந்தையின் தந்தை மேற்கொள்வார். அதன்பிறகு அனைவரும் குழந்தையின் நீண்ட ஆயுள், நிறைவான அறிவு மற்றும் தாயின் நலம் ஆகியவற்றிற்காக பிரார்த்தனை மேற்கொள்ள வேண்டும்.

6) குழந்தைக்குப் பெயர்சூட்டுதல் (நாமகரணம்) – குழந்தை பிறந்த சில தினங்களில் குழந்தைக்குப் பெயர்சூட்டப்படுகின்றது. அர்த்தமுள்ள மற்றும் இனிமையான பெயரை தேர்ந்தெடுத்து குழந்தைக்குச் சூட்டுவர். குழந்தையை குளிப்பாட்டி, புத்தாடை அணிவித்து, வீட்டு பூஜை அறையில் குழந்தையின் பெற்றோர் அந்த குழந்தையை மடியில் அமர வைத்து அதன் காதில் தேர்ந்தெடுத்த பெயரை செப்புவார்கள்.

7) குழந்தையை முதன்முதலில் வெளியில் அழைத்துச் செல்லுதல் (நிஷ்கிராமணம்) – குழந்தை பிறந்து ஒரு மாதம் நிறைவடைந்ததும் அந்தக் குழந்தையை கோவிலுக்கு அழைத்துச் செல்வார்கள். குழந்தையின் தாய், தந்தை, சகோதரர்கள், தாத்தா, பாட்டி ஆகியோரும் உடன் செல்வார்கள்.



8) குழந்தைக்கு முதல் சோறு ஊட்டுதல் (அன்னபிராஷனம்) – குழந்தை பிறந்து சில மாதங்களில், குழந்தைக்கு சில பற்கள் முளைக்க தொடங்கியவுடன் அதற்கு சோறு ஊட்டும் சடங்கு மேற்கொள்ளப்படுகின்றது. தேனுடன் அல்லது பாலுடன் கலந்த சோற்றை அன்னையும் தந்தையும், உற்றார் உறவினரும் குழந்தைக்கு ஊட்டுவார்கள். பிறகு நண்பர்களும் அண்டை அயலார்களும் வருகைபுரிந்து குழந்தையுடன் அன்பு பரிமாறிக் கொள்வார்கள். அனைவரும் குழந்தை நீண்ட ஆயுளும் நிறைவான அறிவையும் பெற பிரார்த்தணை செய்து கொள்வார்கள்.
9) குழந்தைக்கு தலைமுடி நீக்குதல் (சூடாகரணம்) – குழந்தை பிறந்த சில மாதங்களில், குழந்தையின் தலைமுடி முதன்முதலில் நீக்கப்படுகின்றது. தாய் தந்தையர் பாரம்பரிய உடைகளை அணிந்து கொண்டு குழந்தையை கோவிலுக்கு அழைத்துச் சென்று மடியில் அமர்த்திக் கொண்டு குழந்தையின் தலைமுடியை நீக்குவர். தூய்மையான வாழ்க்கையின் மகத்துவத்தை உணர்த்துவதற்காக இந்த சடங்கு மேற்கொள்ளப்படுகின்றது.
10) குழந்தைக்குக் காது குத்துதல் (கர்ணவேதம்) – குழந்தை பிறந்த ஓராண்டில், குழந்தையின் இரண்டு காதுகளிலும் தோடு குத்தப்படும். ‘செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்’ எனும் குறளைப் போல ஒரு மனிதனிடம் இருக்கும் செல்வங்களில் மிகவும் போற்றத்தக்கது அவனின் கேட்டல் திறன் தான். ஒருவன் தன் வாழ்நாளில் ஞானிகளின் வாய்ச்சொல்லைக் கேட்டு நடந்தால் அவனின் வாழ்க்கை செல்வ செழிப்பாக இருக்கும் என்பதை உணர்த்துவதற்காக இந்த சடங்கு மேற்கொள்ளப்படுகின்றது. 11) கல்வி ஆரம்பம் (வித்யாரம்பம்) – குழந்தை ஓரிரண்டு வார்த்தைகள் பேசத் தொடங்கியவுடன் இந்த சடங்கு மேற்கொள்ளப்படுகின்றது. குழந்தையின் பெற்றோர் அல்லது மற்ற குடும்ப உறுப்பினர் குழந்தையின் கையைப் பிடித்து ‘அ’ எனும் முதல் எழுத்தை எழுதி பயில்விப்பார்கள். பிறகு அடிப்படையான எழுத்துகளையும் எண்களையும் கற்றுத் தருவார்கள். குழந்தை பாடசாலையில் சேர்ந்து முறையான கல்வியைக் கற்க துவங்குவதற்கு முன்னர் அதற்கு அடிப்படையான கல்வியை வீட்டிலே கற்றுத் தர வேண்டும். 12) பாடசாலையில் சேர்த்தல் (உபநயனம்) – குழந்தை வளர்ந்து பாலகப் பருவம் எய்தியவுடன், அவனை/அவளை பாடசாலையில் சேர்க்க வேண்டும். இங்கு அந்த குழந்தை முறையான கல்வியைக் கற்க தொடங்கும். முறையான கல்வியை துவங்கும் போது ஒரு மனிதன் இரண்டாவது முறையாகப் பிறக்கின்றான் என சொல்லப்படுகின்றது. கல்வி கற்றுத்தரும் ஆசான் அவனுக்கு தாய்தந்தை ஆகின்றார். ஆரம்பகாலங்களில் உபநயனம் என்பது ஒருவன் யஜ்ஞோபவிதம் (பூணூல்) அணிந்து முறையான குருகுல கல்வியில் ஈடுபடுதல் ஆகும். இந்த சடங்கின் மூலம் அந்த குழந்தைக்கு கல்வியின் முக்கியத்துவமும் அவசியமும் உணர்த்தப்படுகின்றது. கல்வி தான் ஒருவனை பண்டிதனாக்குகின்றது. எனவே கல்வியில் தேர்ச்சிப் பெறும்வரை அவனுடைய கவனம் வேறு எதிலும் சிதறக் கூடாது எனவும் உணர்த்தப்படுகின்றது. 13) வேதங்களைக் கற்க தொடங்குதல் (வேதாரம்பம்) –வேதங்கள் என்பது ரிக், சாம, யஜுர், அதர்வண ஆகியவை ஆகும். வேதம் என்றால் ஞானம் எனப் பொருள்படும். வேதங்களின் சாரமாக உபநிடதங்களும், உபநிடதங்களின் சாரமாக பகவத் கீதையும் விளங்குகின்றன. ஒருவன் தன் வாழ்க்கைக்குத் தேவையான வித்தைகளை (தொழில்திறன்களை) கற்றதோடு விட்டுவிடாமல், அவன் வேதங்களையும் அவசியம் கற்க வேண்டும். மேலும் திருக்குறள், திருமுறை, பிரபந்தம் போன்ற நூல்களும் நல்லறிவை தரும் நூல்களாகும். ஒருவன் வாழ்க்கையில் பணம் ஈட்டுவதற்கு தேவையான வித்தைகளை மட்டும் கற்பதோடு நிறுத்திவிடாமல் நல்லொழுக்கத்தையும் நல்லறிவையும் தரும் நல்லநூல்களையும் கற்கவேண்டும். 14) பருவமடைந்த சடங்கு (கேஷாந்தம்) – ஆரம்பகாலங்களில் ஆண்களும் பெண்களும் பருவமடைந்தவுடன் 'கேஷாந்தம்’ அல்லது ’ரிதுசுத்தி’ எனப்படும் சடங்கு மேற்கொள்ளப்பட்டன. பருவ வயதை (பெரும்பாலும் 16 வயதை) அடைந்த ஆணின் சிகையும் முகத்திலுள்ள முடிகளும் மழிக்கப்படும். பிறகு நீராடி விட்டு, பாரம்பரிய உடை அணிந்துகொண்டு, இனி அவனுக்கு உண்டாகும் பாலுணர்வு ஆசைகளை எப்போதும் கட்டுப்பாட்டுடன் வைத்திருக்க விரதம் மேற்கொள்கிறான். அதேபோல் பருவமடைந்த பெண்களும் நீராடிவிட்டு பாரம்பரிய உடை அணிந்து விரதம் மேற்கொள்கின்றனர். பண்டைய காலத்தில் இது எளிமையான ஒரு சடங்கு ஆகும். ஆனால் தற்போது இந்த சடங்கு ஆண்களுக்காக மேற்கொள்ளப்படுவதில்லை. ஆயினும் பெண்களுக்கு மிகவும் பெரிதாகவும் ஆடம்பரமாகவும் மேற்கொள்ளப்படுகின்றது. இந்த சடங்கில் காலப்போக்கில் சாஸ்திரங்களில் பரிந்துரைக்கப்படாத நிறைய விஷயங்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளன. 15) பட்டம் பெறுதல் (சமாவர்தனம்) – உயர்நிலைக் கல்வியில் தேர்ச்சி அடைந்து பட்டம் பெறும் சடங்காகும். இது பெரும்பாலும் ஒருவன் உயர்கல்வியை முடித்துவிட்டப் பின்னர் மேற்கொள்ளப்படுகின்றது. பட்டம் பெற்றவிட்ட அவன் எப்போதும் சத்தியத்தையும் தர்மத்தையும் போற்ற வேண்டும், நேர்மையையும் கடமையையும் கடைப்பிடிக்க வேண்டும், முக்கியமான ஒன்று என்னவென்றால் அவன் எப்போதும் கற்பதை நிறுத்தக் கூடாது என தைத்திரிய உபநிடதம் (1.11.1) குறிப்பிடுகின்றது. “கற்றது கைம்மண் அளவு, கலலாதது உலக அளவு” அல்லவா? பட்டம் பெற்றவுடன் பெற்றோர் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுவிட்டு கோவிலுக்கு சென்று வழிபாட்டில் ஈடுபடுவதே இந்த சடங்குமுறை ஆகும். ஆரம்பகாலத்தில் இந்த சடங்கு குருகுலக் கல்வியை முடித்துவிட்டு திரும்பும் போது மேற்கொள்ளப்பட்டது. இதன்பிறகு ஒருவன் திருமண வாழ்க்கையில் ஈடுபட எண்ணங்கொண்டால், அவன் திருமண சடங்கை மேற்கொள்வான். குழந்தை பெற்றவுடன் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மற்றமற்ற சடங்குகளையும் தன் குழந்தை(களு)க்கு மேற்கொள்வான். 16) இறுதிசடங்கு (அந்தயெஷ்டி) – ஒருவன் வாழ்க்கையின் இறுதிச் சடங்கு என்பது அவன் இறந்துபோனவுடன் அவனின் உடலுக்கு அவனின் சொந்தபந்தங்களும் நண்பர்களும் மேற்கொள்ளும் முக்கிய சடங்காகும். இது அவனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மேற்கொள்ளப்படுகின்றது. குழந்தைகளின் உடல் புதைக்கப்பட வேண்டும் எனவும் வாலிப வயதை தாண்டிய பெரியவர்களின் உடல் தகனம் செய்யப்பட வேண்டும் எனவும் ரிக்வேதம் (10:16) அறிவுரைக்கின்றது. இந்த சடங்கு ஓர் இரண்டு முதல் பதினாறு நாட்களுக்கு நீடிக்கின்றது. இறந்தவரின் உடல் நீராடப்பட்டு, புத்தாடைகள் அணிவிக்கப்பட்டு, கால் கட்டைவிரல்கள் ஒன்றாக கட்டப்பட்டு, நெற்றியில் திலகம் இடப்படுகின்றது. பின்னர் அவரின் உடல் முறையான ஓர் இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்படுகின்றது. பதினாறு நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்பட்டு பின்னர் பதினாறாம் நாள் ஏழை எளியவர்களை வீட்டிற்கு அழைத்து அவர்களுக்கு உணவு வழங்கபடுகின்றது. இறந்தவரின் சார்பாக ஏழை எளியவர்களுக்குத் அன்ன தானம் வழங்குவதால், அவரின் ஆன்மா இனிவரும் பிறவிகளில் நற்கதி அடையும். இந்த பதினாறு சடங்குகளையும் இந்துக்கள் கட்டாயமாக மேற்கொள்ளவேண்டும் என எந்த சாஸ்திரநூலும் தெரிவிக்கவில்லை. மாறாக அக சடங்குகள் என்று சொல்லப்படும் மேற்கூறிய எட்டு நற்பண்புகள் தான் கட்டாயமானவை. உண்மையான அர்த்தங்களை உணர்ந்து, எளிமையான முறையில், தானம் மற்றும் தர்மத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து மேற்கொள்ளப்படும் சடங்கு தான் சாலச்சிறப்புடையதாகும். திருமணம், வளைக்காப்பு, குழந்தைக்குப் பெயர்சூட்டுதல், தலைமுடி நீக்குதல், காது குத்துதல் மற்றும் இறுதிச்சடங்கு போன்ற ஐந்து சடங்குகளை தற்போது பெரும்பாலான இந்துக்கள் மேற்கொள்கின்றனர். “எவனொருவன் புற சடங்குகளை மட்டுமே மேற்கொண்டு இந்த எட்டு அக சடங்குகளையும் மேற்கொள்ளாமல் இருக்கிறானோ அவன் இறைவனோடு ஒன்றாகக் கலப்பதில்லை. அவன் மேற்கொண்ட புற சடங்குகள் அர்த்தமற்றுப் போகின்றன. ஆனால் ஒருசில புற சடங்குகள் மட்டுமே மேற்கொண்டிருந்தாலும், எட்டு அக சடங்குகளையும் மேற்கொண்டிருப்பவன் நிச்சயமாக இறைவனோடு சேர்கிறான்” என்று கௌதமர் தர்மசூத்திரம் (8:23) -இல் குறிப்பிடப்பட்டுள்ளது.

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM



 
 
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் ..
வியாழக்கிழமையாகிய இன்று நம் அனைவராலும் போற்றித்
துதிக்கப்படும் அருள்மிகு குருநாதர் ஷீரடிபாபாவிற்கும் உகந்த நாளாகும் .. தங்களனைவருக்கும் பாபாவின் அருட்கடாக்ஷ்ம் கிடைத்து வாழ்வில் சுபீட்சம்பெற பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் ஷிர்டிவாஸாய வித்மஹே ! 
சச்சிதானந்தாய தீமஹி !
தந்நோ சாய் ப்ரசோதயாத் !! 

சாய்கவசம் - 
ஓம் சாயி நமோ நமஹ !
ஸ்ரீ சாயி நமோ நமஹ !
ஜெய ஜெய சாயி நமோ நமஹ !
சுழலும் கோள்கள் செயலால் எம்மைச் சூழும் துயரம் நீக்கி அருள்க ! பழகும் காலம் எதுவோ ஆயினும் சாயி எம்மைக் காக்க!
கசிந்து உருகிக் கன்னித்தமிழில் கடவுள்மீது கவிகள் பாட ! 
இசைந்து சாயி தமிழாம் அமுதை இயல்பாய் எமக்கு என்றும் அருள்க ! பிறந்தகடனை முழுமை செய்யச் சிறந்த குரு 
உன்பாதம் பணிகின்றோம் ! காத்தருள்வாய் சாய்நதா !! 

” ஓம் சாய் ராம் “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED THURSDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF SHIRDI SAI .. 
MAY YOU BE BLESSED WITH POWER AND WISDOM .. 
" OM SAI RAM "

 

ஹர நம பார்வதி பதயே
ஹர ஹர மஹாதேவா  

 சூரிய கிரகணம். நாம் செய்ய கூடியவை? செய்ய கூடாதவை? சூரிய கிரகணம் 9.3.2016 விடியற்காலை 4.50 மணி முதல் 10.05 மணி வரை நீடிக்கிறது. மந்திர சாஸ்திரத்தில் ஜபம் செய்யும் காலத்தின் தன்மை எப்படி பலன் கொடுக்கிறது என்பதை கூறுகிறது. எல்லா நேரத்திலும் ஜபம் செய்தால் ஒருமடங்கு பலன், அதை சந்தியாகாலத்தில் செய்தால் பத்துமடங்கும். பிரம்ம முஹூர்த்தத்தில் செய்தால் நூறுமடங்கும், பெளர்ணமி அமாவாசை நாளில் செய்தால் ஆயிரம் மடங்கும், கிரஹண நாட்களில் செய்தால் லட்சம் மடங்கும் பலன் ஏற்படும் என கூறுகிறது. ஒரு முறை மந்திரத்தை உட்சரித்தால் கிரஹணத்தன்று லட்சம் முறை சொல்லுவதற்கு சமம். அன்றே லட்சம் முறை உச்சரித்தால் ? யோசிக்க வேண்டும். மந்திர சித்தி பெறுபவர்கள் இந்த நாளை பயன்படுத்தி தங்களின் மந்திரத்தில் சித்தியடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் கிரஹணத்தன்று வெளியுலக விஷயங்களை செய்யக்கூடாது. உங்கள் ஆன்மீக விஷயங்களுக்கு மட்டும் பயன்படுத்தலாம். முக்கியமாக கிரஹண நேரத்தில் செய்ய கூடாதது என சொன்னால் உணவருந்துவது, உணவை சமைப்பது, உடலுறவு மற்றும் உடலைவருத்தும் அனேக செயல்கள். செய்ய வேண்டியது பூஜை, தியானம், ஜபம் மற்றும் பித்ரு தர்ப்பணம்.
கிரஹண சமயத்தில் கடைபிடிக்க வேண்டியவை.
• கிரஹண நேரம் ஆரம்பிக்கும் பொழுதும் முடிந்த பிறகும் குளிக்கவும்.
• கிரஹண நேரத்திற்கு குறைந்த பட்சம் ஒரு மணி நேரம் முன்பு அல்லது பின்பு மட்டுமே உணவருந்த வேண்டும்.
• ஜீரண சக்திக்கு வேலை கொடுப்பதை தவிர்க்கவும்.
• தர்ப்பை வீட்டில் இருக்கும் நீர், தயிர் பொருட்கள், ஊறுகாய் போன்று கெட்டுப்போகும் பொருட்களில் இடவேண்டும்
• சூரிய கிரஹணம் என்பதால் கிரஹணம் ஆரம்பிக்கும் சமயம் பித்ரு தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.
• சூரிய கிரஹணத்தை கண்களால் பார்க்க கூடாது. நீரில் பிம்மம் விழுகவைத்து பார்க்கலாம். கண் கண்ணாடி அணிந்து பார்ப்பதையும் தவிர்க்கவும்.
• கிரஹண காலத்தில் தொடர்ந்து ஜபம் மற்றும் பாராயணம் செய்ய வேண்டும். வீண் பேச்சுக்கள் மற்றும் பொழுது போக்கு விஷயங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.
பிரபஞ்சத்தில் நிகழும் எந்த ஒரு நிகழ்வுக்கும் ஒரு காரணம் இருக்கும். எந்த ஒரு விஷயமும் காரண காரியம் இல்லாமல் நடைபெறாது. அது போல சூரிய கிரஹணம் என்பது எதிர்காலத்தில் உலகில் நடக்க இருக்கும் சில சம்பவங்களை முன் கூறும் ஒரு நிகழ்வாக இருக்கிறது. உலகின் எந்த பகுதியில் கிரஹணம் ஏற்படுகிறதோ அதற்கு நேர் எதிர்பகுதியில் இயற்கை சிற்றங்கள் நிகழும் என்கிறது சாஸ்த்திரம்.

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM...




அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் ..
புதன்கிழமையாகிய இன்று இப்பிரபஞ்சத்தைக் காக்கும் கடவுளாகிய ஸ்ரீமஹாவிஷ்ணுவைத் துதித்து தங்களனைவருக்கும் சகலசௌபாக்கியங்களும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன் .. வணங்குகின்றேன் .. 

ஓம் நாராயணாய வித்மஹே !
வாசுதேவாய தீமஹி ! 
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !! 

“ ஓம் நமோ நாராயணாய “ என்ற மந்திரத்தை உச்சரிக்கும்போது 
மனிதனின் ஆணவம் அழிகிறது .. ஆண்மை பிறக்கிறது .. ஆன்மநேய ஒருமைப்பாடு ஏற்படுகிறது .. இதனால்தான் 
பெரியாழ்வார் -

“ மூலம் ஆகிய ஒற்றை எழுத்தை மூன்று மாத்திரை உள் எழ வாங்கி .. மேலை வண்ணனை மேவுதிர் ஆகில் விண்ணகத்தில்
மேவலும் ஆமே “ என்று சொல்கிறார் .. 

அதாவது - எட்டெழுத்து மந்திரத்தை மூன்று மாத்திரை அளவு மூச்சுக்காற்றுடன் உள்ளுக்குள் இழுத்து தியானம் செய்தால் இறைவனாகிய திருமாலின் பரமபதம் கிடைக்கும் என்பது ஆழ்வாரின் அமுதமொழியாகும் .. 

வைஷ்ணவம் வெறுமனே வாழும்நெறியாக மட்டுமல்லாது இறைவனோடு பக்தனை கொண்டு சேர்க்கும் நெறியாகவும் 
இருக்கிறது என்று பலபெரியவர்கள் சத்தியவாக்காக சொல்வது
இதனால்தான் .. எனவே நாமும் ஓம் நமோ நாராயணாய !
ஓம் நமோ நாராயணாய ! ஓம் நமோ நாராயணாய ! என்று மீண்டும் .. மீண்டும் சொல்லி அடியவரின் துன்பங்களை களைந்து
பாவங்களைபோக்கி .. குழந்தைபோல் அரவணைத்துக் கொள்ளும் திருமாலின் திவ்வியபாதக் கமலங்களில் 
சரணடைவோமாக ! வாழ்க வளமுடனும் ! என்றும் நலமுடனும்!

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A SUCCESSFUL DAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD VISHNU .. MAY YOU BE BLESSED WITH GOOD HEALTH .. WEALTH AND HAPPINESS .. 
" OM NAMO NAARAAYANAAYA "

SWAMI SARANAM ..GURUVE SARANAM



அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் .. மகளீர்தின நல்வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் .. செவ்வாய்க்கிழமையாகிய இன்று அங்காள பரமேஷ்வரிக்கு உகந்த மாசிமாத அமாவாசை தினமுமாகும் .. இன்றையநாளில் 
அன்னையின் அருட்கடாக்ஷ்ம் பெற்று செய்யும் அனைத்து காரியங்களிலும் வெற்றிபெற வாழ்த்துகிறேன் .. அன்னையை வணங்குகின்றேன் .. 

ஓங்கார உருவினளே ! ஓம் சக்தி ஆனவளே !
ஓமென்ற பிரணவத்தின் உள்ளே ஒளிர்பவளே ! 
பரசித்சொரூபமாக பரவியே நின்றவளே ! 
அருளிடும் அம்பிகையே ! அங்காள ஈஸ்வரியே !
எமை காத்திடுவாயாக !!

அங்காள பரமேஷ்வரிக்கு விசேஷ விழாவாக
“ மயானக்கொள்ளை “ எனும் விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது .. நம்பியவர்களைக்காத்து .. இரட்சித்து ..
அனைத்து உயிர்களுக்கும் அல்லல் தருவோரை அழிப்பதைக் காட்டும் தத்துவ விழா என்றாலும் மிகையில்லை .. 

இன்றையநாளில் அனைத்து அங்காள பரமேஷ்வரி ஆலயங்களிலும் “ மயானக்கொள்ளை விழா “ நடைபெறும் .. 
இவ்விழாவின் அடிப்படைக் காரணம் சிவபெருமான் பிரம்மதேவனின் சிரம் கொய்த நிகழ்வுதான் ..

பிரம்மதேவனுக்கும் ஈசனைப்போன்றே ஐந்துதலைகள் இருந்தன .. எனவே சிவனை நாம் ஏன் வணங்கவேண்டும் என்று
ஆணவம் கொண்டார் பிரம்மா .. அவரது ஆணவத்தை அழிக்க பிரம்மனின் ஒருதலையைக் கொய்தார் சிவன் .. அதன் காரணமாக சிவனை “ பிரம்மஹத்தி தோஷம் “ பற்றிக் கொண்டதுடன் கொய்யப்பட்ட பிரம்மனின் தலை சிவபெருமானின் கரத்தில் வந்து அமர்ந்தது .. அதை அவர் கீழேபோட்டாலும் மீண்டும் .. மீண்டும் அவர் கரத்துக்கே வந்தது .. 

இவ்வாறு 99வது முறை நடந்தநிலையில் அதைக்கீழே போடாமல் சிறிது கையிலேயே வைத்திருங்கள் என்று பார்வதிதேவி சிவனிடம் கூறினாள் .. அவரும் அவ்வாறே செய்ய
பிரம்மாவின் தலை கபாலமாக மாறி அவரது கரத்திலேயே ஒட்டிக்கொண்டது .. அதையே பிச்சைப்பாத்திரமாக ஏந்தி ஈசன் 
பிச்சையெடுக்கும் நிலை ஏற்பட்டது .. அப்பாத்திரத்தில் போடப்படும் உணவெல்லாம் கபாலமே விழுங்கிவிடுவதால் 
உலகுக்கே படியளக்கும் ஈசனுக்கே உணவு கிட்டவில்லை .. 

இந்நிலையில் பிரம்மாவின் தலைகொய்யப்பட்ட வேதனையில் இருந்த சரஸ்வதிதேவி அது கபாலமாகமாறி சிவன்கையில் ஒட்டிக்கொள்ளுமாறு உபாயம் கூறிய பார்வதிமீது சினம்கொண்டு
“ கொடிய உருவத்துடன் பூவுலகில் திரிக “ என சாபமிட்டாள் .. அதன்படி பார்வதிதேவி பூவுலகில் பலதலங்களில் அலைந்து 
முடிவில் “ மலையனூர்” வந்தாள் .. அங்கே அங்காள பரமேஷ்வரியாக கோவில் கொண்டாள் .. 

அப்பொழுது ஈஸ்வரனும் மலையனூர் வர அங்காள பரமேஷ்வரி
சிவன் கையிலிருந்த கபாலத்தில் சுவையான உணவை இட்டாள்
எல்லாவற்றையும் கபாலம் விழுங்கிவிட அங்குவந்த மஹாலக்ஷ்மி பரமேஷ்வரிக்கு ஒரு உபாயம் கூறினாள் .. அதன்படி பரமேஷ்வரி இரண்டு கவளம் உணவை கபாலத்தில் இட்டாள் .. அதை கபாலம் உண்டுவிட்டது .. மூன்றாவது கவளத்தைக் கைதவறியதுபோல கீழேபோட்டாள் .. உணவின் 
சுவையால் கவரப்பட்ட கபாலம் அதை உண்ண சிவனின் கரத்தைவிட்டு நீங்கி கீழேபோனது .. 

அப்போது அங்காள பரமேஷ்வரி விஸ்வரூபமெடுத்து பிரம்ம கபாலம் மீண்டும் ஈசனின் கரத்தை அடையமுடியாதபடி 
அதைத் தன்காலால் மிதித்து பூமியினுள் ஆழ்த்திவிட்டாள் ..
ஈசனைப்பற்றிய பிரம்மஹத்தி தோஷமும் அகன்றது .. 

அன்னையைப் போற்றுவோம் ! சகல நன்மைகளையும் பெறுவோமாக ! ஓம் சக்தி ஓம் ! வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. MAY " MAA SHAKTHI " BRING YOU 
COUNTLESS BLESSINGS AND ILLUMINATE YOUR LIFE WITH 
HAPPINESS .. AND PROSPERITY .. " JAI MAA SHAKTHI " 
OM SHAKTHI OM ..

விழுப்புரத்திலிருந்து மேற்கில் சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவிலுள்ளது அரகண்டநல்லூர்,தென்பெண்ணையாற்றின் வடக்கரையில் அமைந்த ஊரிது,இவ்வாற்றின் தென்கரையில்தான் திருக்கோவிலூர் அமைந்துள்ளது, திருக்கோவிலூர், வட்டத்தின் தலைநகர்.அறம்கண்டநல்லூர் எனும் பெயர் மறுவி அரகண்டநல்லூர் ஆனதாக வரலாறு,இவ்வூருக்கு வரலாற்று பெருமை சேர்ப்பதாக அமைந்தது "அதுல்ய நாதேஸ்வரர் ஆலயம்"தென்பெண்ணை ஆற்றையொட்டி மலைப்பாறையின் மீது அமைந்துள்ளது இந்த சிவாலயம்,பஞ்சபாண்டவர்கள் இங்கு தங்கி வழிபட்டதாக வரலாறும் உண்டு,இவ்வாலயத்தின் ஒரு பகுதியில் பஞ்சபாண்டவர் தங்கியிருந்தாக சொல்லப்படும் பஞ்சப்பாண்டவர் குகை,பாறையின் மீது அழகிய நீரூற்று,இங்குள்ள குகை ஒன்றிலிருந்து திருவண்ணமலைக்கு செல்ல குகைப்பாதை உள்ளதாக ஊர் பெரியவர்கள் சொல்லக்கேட்டு இருக்கிறேன் ஆனாலும் தற்போது அக்குகை மூடப்பட்டுவிட்டது, மேலும் பெண்ணையாற்றை நோக்கி கம்பீரமாக உயர்ந்து நிற்கும் இராஜகோபுரம்,இந்த படர்ந்த மலைப்பாறையின் நடுவே சுமார் ஒரு ஏக்கர் பரப்பில் விரிந்துகிடக்கும் பிரமாண்டமான குளமும் இவ்வாலயத்தின் சிறப்பாகும்,நானும் இவ்வூரை சேர்ந்தவன் என்பதால் இக்கோவிலின் அனைத்து பகுதிகளும் எனக்கு அத்துப்படி, இராஜகோபுரத்திலும்,இவ்வாலய வளாகத்திலும் அமைந்துள்ள கலைநுட்பம் மிகுந்த சிற்ப்பங்களை நண்பர்களோடு சேர்ந்து ரசித்து வியந்து போவோம்...



SWAMI SARANAM ..GURUVE SARANAM

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் .. சிவராத்திரி தின நல்வாழ்த்துக்களும் உரித்தாகுக .. மாசிமாதம் 
அமாவாசைக்கு முதல்நாள் வரும் சிவராத்திரியே 
“ மஹாசிவராத்திரியாகும் “ இன்று விரதமிருந்து வழிபாடு செய்பவர்கள் சிவபெருமானின் பூரணதிருவருளையும் .. அருட்கடாக்ஷ்த்தையும் பெற்றிடுவர் .. சிவாலயங்கள் இரவுமுழுவதும் திறந்திருக்கும் .. விடிய விடிய நான்குகால 
அபிஷேக ஆராதனைகள் நடக்கும் .. 

முதல்காலத்தில் - பால் ..
இரண்டாம் காலத்தில் - தயிர் ..
மூன்றாம் காலத்தில் - நெய் ..
நான்காம் காலத்தில் - தேன் .. ஆகியவற்றால் அபிஷேகம் நடைபெறும் ..

மஹாசிவராத்திரி சிவபெருமான் எழுந்தருளும் ராத்திரி ..
சிவனை அர்ச்சிக்கவேண்டிய ராத்திரி ..
சிவனோடு ஐக்கியமாகவேண்டிய ராத்திரி ..
தேவர்களும் .. முனிவர்களும் வணங்கிநிற்கும் ஒப்பற்ற ராத்திரியுமாகும் ..

பிரளயகாலத்தின்போது பிரம்மனும் ..அவரால் சிருஷ்டிக்கப்பட்ட
அனைத்து ஜீவராசிகளும் அழிந்துவிட்டநிலையில் இரவுப்பொழுதில் அம்பிகை உமாதேவி பரமேஸ்வரனை நினைத்து பூஜைசெய்தாள் .. பூஜையின்முடிவில் அம்பிகை
ஈஸ்வரனை வணங்கி அடியேன் தங்களைப் பூஜித்த இந்த இரவை தேவர்களும் .. மனிதர்களும் தங்கள் திருநாமத்தாலேயே
அதாவது “ சிவராத்திரி “ என்றே கொண்டாடவேண்டும் என்று வேண்டினாள் ..

சிவராத்திரியன்று சூரியன்மறைந்ததுமுதல் .. மறுநாள்காலை
சூரியன் உதயமாகும்வரை தங்களை ( சிவனை ) பூஜைசெய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எல்லாவிதமான பாக்கியங்களையும் தந்து முடிவில் மோட்சத்தையும் அருளவேண்டும் .. அருள்புரியுங்கள் என்று அன்னையானவள் வேண்டிக்கொண்டாள் .. சிவபெருமானும்
அப்படியே ஆகட்டும் என்று கூறி அருள்புரிந்த இரவே
“ சிவராத்திரியாகும் “

பகல்பொழுது பரமேஸ்வரனுக்கும் .. இரவுப்பொழுது அம்பிகையான உமாதேவிக்கும் உரியது என்பது நியமம் .. ஆனால் சிவராத்திரி என்பது அம்பாளின் வேண்டுதலின்படி
கொண்டாடப்படுவதால் அது சிவனுக்கே உரியதாயிற்று..

பிருங்கி முனுவர் சக்தியைவணங்காது சிவபெருமானை மட்டுமே வணங்கிவந்ததால் கோபம்கொண்ட சிவகாமி அம்மை
எம்பெருமானைவிட்டு விலகி பூலோகம்சென்று .. மீண்டும் எம்பெருமானை நோக்கித்தவமிருந்து அத்தவத்தின்மூலம் அம்மையை தன்னில் ஒருபாதியாக்கி “ அர்த்தநாதீஸ்வராக” காட்சியளித்த இனியநாளும் இந்நாளே !

” ஓம் நமசிவாய “ என்று சொல்வோமே ! நன்மைகள் ஆயிரமாயிரம் பெறுவோமே ! வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

GOOD MORNING DEAR FRIENDS .. MAY LORD SHIVA SHOWER HIS BENIGN BLESSINGS ON YOU AND YOUR FAMILY ON THIS SHIVRATRI DAY
AND MAY HAPPINESS AND PEACE SURROUND YOU WITH HIS ETERNAL LOVE AND STRENGTH .. " HAPPY SHIVRATRI "

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM..

 
 
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. சனிக்கிழமையாகிய இன்று ஏகாதசித் திதியும் சேர்ந்துவருவதால் ஆலயம் சென்று மஹாவிஷ்ணுவைத் தரிசிப்பது சாலச்சிறந்தது .. தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் மகிழ்ச்சிகரமான நன்னாளாக அமைந்திட பகவானைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் நமோ நாராயணாய வித்மஹே ! 
வாசுதேவாய தீமஹி ! 
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !! 

ஏகாதசி விரதம் சகலபாவங்களையும் போக்கும் வல்லமைகொண்டது என்றும் .. அசுவமேதயாகம் செய்தபலனுக்கு சற்றும் குறையாதளவு பலன் தரும் விரதம் என்றும் சான்றோர் கூறுவர் .. மஹாவிஷ்ணுவுக்குப் பிடித்த திதி ஏகாதசித் திதியுமாகும் ..

இன்றைய ஏகாதசியை “ ஜயா ஏகாதசி “ என்பர் .. இது எல்லா 
பாவங்களையும் போக்கவல்லது .. அகாலமரணமடைந்த மூதாதையினரும் மோட்சம் அடைவர் .. மன உளைச்சலும் அகலும் .. வாழ்க்கையில் ஏற்பட்ட விரக்தி நிலைகளும் நம்மை விட்டு நீங்கும் .. 

பகவானைப் போற்றுவோம் ! அனைத்து துன்பங்களிலிருந்தும் விடுதலை பெறுவோமாக ! ஓம் நமோ நாராயணாய ! 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED 
" EKADASI DAY " AND MAY LORD VISHNU FREE YOU FROM ALL SINS AND GIVE YOU PEACE .. AND HAPPINESS .. 
" OM NAMO RAARAAYANAAYA

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM...





அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. 
வெள்ளிக்கிழமையாகிய இன்று சர்வமங்களங்ளையும் அள்ளித்தரும் அன்னை மஹாலக்ஷ்மியைத் துதித்து .. நலங்களும் .. வளங்களும் தங்களனைவரும் பெற்றிட பிரார்த்திக்கின்றேன் .. 

ஆதியந்த்ரஹிதே தேவி ! 
ஆதிசக்தி மஹேஷ்வரி !

யோக ஜே ! யோக ஸம்பூதே ! 
மஹாலக்ஷ்மி ! நமோஸ்துதே ! 

பொருள் -
முதலும் .. முடிவும் அற்ற தேவியானவள் ! பிரபஞ்சத்தின் முதல்சக்தியான மஹேஷ்வரியாக விளங்குபவள் ! யோகநிலையில் தோன்றியவளும் .. யோகவடிவாகத் திகழ்பவளுமாகிய அன்னையே ! மஹாலக்ஷ்மியே ! 
உன்னை வணங்குகின்றோம் ! என்றும் எம்மை காத்தருள்வாயாக !! 

மஹாலக்ஷ்மியை யாரெல்லாம் நித்தம் வழிபடுகிறார்களோ 
அவர்களுக்கு மற்றவர்களிடம் கருணையும் .. கொடுக்கும் எண்ணமும் ( ஈதல் ) சகலசம்பத்துக்களும் என்றும் கிடைக்கும் 
“ ஓம் சக்தி ஓம் “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED FRIDAY 
WITH THE BLESSINGS AND GUIDANCE OF GODDESS LAKSHMI ..
MAY MAA LAKSHMI SHOWER YOU HER DIVINE BLESSINGS WITH 
GOOD HEALTH .. HAPPINESS AND GOOD FORTUNE .. 

" JAI MAA LAKSHMI

SWSAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. வியாழக்கிழமையாகிய இன்று நம் அனைவராலும் போற்றித் துதிக்கப்படும் அருள்மிகு குருநாதர் ஷீரடி பாபாவிற்கும் உகந்த தினமுமாகும் .. குருவருளும் .. திருவருளும் தங்களனைவருக்கும் கிட்டிட பிரார்த்திக்கின்றேன் ..

ஓம் ஷீரடிவாஸாய வித்மஹே !
சச்சிதானந்தாய தீமஹி !
தந்நோ சாய் ப்ரசோதயாத் !! 

சாய் கவசம் -
நிறைந்த வாழ்வு யாது ஆயின்
நிறைவு செய்யும் கடமை ஆகும் !
செய்யவேண்டிய கடமையாவும்
செம்மையாகச் செய்ய அருள்வீர்
மங்கள நலன்கள் யாவும் தந்து
மனையறம் விளங்க மாயி அருள்வீர் !
உங்கள் அருளால் கவசம் பாடி
உங்கள் அருளை யாசிக்கின்றோம் !
உற்ற வழிகள் யாவும் அருளிச்
சத்திய சாயி எம்மைக் காப்பீராக !!

அணையா தீபம் ஆன்ம சொரூபம் !
அருளை வழங்கும் லெண்டி தீபம் !
பூட்டி மந்திர புண்ணிய வாசம் !
புத்தொளி அருளும் சத்திய நேசம் !
தாணு மாலயன் சேர்ந்த கோலம் !
தத்தர் என்னும் சித்தர் வடிவம் !
குருவே அன்னை ! குருவே தந்தை !
குருவே ஒளியாம் ! குருவே வழியாம் !
குருவைப் பணிவோம் ! அருளைப் பெறுவோம் !!

ஷீரடிவாசனைப் போற்றுவோமாக !வாழ்வில் அனைத்து நலன்களையும் பெறுவோமாக !!
” ஓம் சாய் ராம் ” ..வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .

GOOD MORNING .. MAY ALL YOUR PRAYERS BE
ANSWERED ON THIS DAY AND MAY SHIRDI SAI BLESS YOU WITH PEACE .. HAPPINESS AND GOOD FORTUNE .. ' OM SAI RAM '



இன்று அகமதாபாத்  சிவா இல்லத்தில் பாலகரின் முன்னிலையில் குருசுவாமி  ஆசியுடன்  பாலகன்  ஸ்ரேஷ்ட் அப்த பூர்த்தி சிறப்புடன் நடைபெற்றது. பாலகனின் குடும்பத்தில் இருந்து நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.