இறைவனுக்கு நாம் பல வழிகளில் அலங்காரம் செய்து அழகு பார்கின்றோம்.அப்படி செய்த அலங்காரம் ஒருநாள் அகங்காரமடைந்து நம் அலங்காரத்தில்தான் இறைவன் ஜொலிக்கின்ரான் என்று எண்ண ஆரம்பித்தால்,சிறிது சிந்தித்துப் பாருங்கள். அந்த அலங்காரத்தில் நாம் வைத்திருக்கின்ற இறைவன் படத்தையோ, மூர்த்தியையோ அங்கிருந்து அகற்றிவிட்டால் அந்த அலங்காரத்தின் நிலை என்ன? இறைவன் இல்லையேல் அலங்காரம் இல்லை.அலங்காரம் இல்லா விட்டாலும் இறைவன் இருப்பார். ஜொலித்துக் கொண்டிருப்பார்.அதுபோல்தான், குரு சிஷ்ய பாவமும். சிஷ்யன் நாம் இல்லாவிட்டால் குரு இல்லை என்று எண்ண ஆரம்பித்தால் அவன் நிலையும் அந்த அலங்காரத்தின் நிலைதான்.நாம் ஒருவரை நமது குரு என்று ஏற்றுக்கொண்டுவிட்டால் இதுபோன்று தோன்றும் எண்ணங்களுக்கு அணைபோட்டு வைத்தால்தான் அவன் தன்னை உயர்த்திக் கொள்ளமுடியும்.மற்றவர்களைப் பற்றி ஆராய்ச்சி செய்யாமல், எவன் ஒருவன் தன்னை பற்றி ஆராய்கின்றானோ அவனே வாழ்க்கையில் முன்நிலை அடைய முடியும்.
--ஆசிர்வாதங்களுடன் குருசாமி
No comments:
Post a Comment