என் குருநாதா ..சரணம்
அன்பின் வடிவம் நீ..அருளின் உருவம் நீ
அறியாத மாந்தருக்கு அருளை நீ தந்திடுவாய்
அகந்தையெல்லாம் அழித்து அன்பினை ஊட்டிடுவாய்
அன்பு மயமாக்கி ஆட்கொண்டிடுவாய்
அன்பை என் உள்ளத்தில் அசைவின்றி நிறுத்திடுவாய்
அன்பையே கண்ணாக ஆக்கிக் காத்திடுவாய் ......
உள்ளும் புறமும் உன்னருளாம் அன்பையே
உறுதியாக நானும் பற்றிட உவந்திடுவாய்
எல்லை இல்லாத அன்பே இறைவெளி என்றாய் நீ
அங்கிங்கெனாதபடி எங்கும் அன்பென்றாய்
அன்பே சிவமும் அன்பே சக்தியும் ......
அன்பே ஹரியும் அன்பே ப்ரமனும்
அன்பே தேவரும் அன்பே மனிதரும்
அன்பே நீயும் அன்பே நானும்
அன்பே சத்தியம் அன்பே நித்தியம்
அன்பே சாந்தம் அன்பே ஆனந்தம்
அன்பே பன்வேலில் அருள் அளிக்கும் பாலகனும்.....
அன்பே மெளனம் அன்பே மோக்ஷம்
அன்பே ப்ரம்மமும் அன்பே அனைத்தும் என்றாய்
அன்பிலாத இடம் அங்குமிங்கு மில்லை என்றாய்
எங்கும் நிறைந்த அன்பே என் குருநாதனப்பா
அன்பில் உறையும் அருட்குரு நாதரே தான் .
---நான் படித்த கவிதை சில மாறுதல்களுடன்...ராம்கி
No comments:
Post a Comment