PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் நடை பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு, இன்று (சனிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. கோவில் தலைமை பூசாரி நாராயணன் நம்பூதிரி நடையை திறந்து குத்துவிளக்கு ஏற்றுகிறார். அதைத் தொடர்ந்து கோவில் சுற்றுப்புற பகுதிகளில் சுத்தப்படுத்தும் பணி நடைபெறும்.

நாளை அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், பிரதிஷ்டை தின பூஜை– வழிபாடுகள், நெய் அபிஷேகம், உஷபூஜை, உச்சபூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை ஆகியவை நடைபெறுகிறது. பிறகு இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.

இதன் பின்னர் ஆனி மாத பூஜைக்காக வருகிற 14–ந் தேதி (சனிக்கிழமை) மாலை கோவில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜை–வழிபாடுகள் நடைபெறும். 19–ந் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது.

No comments:

Post a Comment