PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMIYE SARANAM IYYAPPA




அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. ஞாயிற்றுக்கிழமையாகிய இன்று மதியம் 1.30 முதல் சதுர்த்தித் திதி ஆரம்பமாவதால் மாலையில் விநாயகர் ஆலயம் சென்று விநாயகரைத் தரிசிப்பது சாலச் சிறந்தது .. இன்றைய நாள் தங்களனைவருக்கும் எல்லா வளங்களும் .. நலங்களும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன் .. வணங்குகின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
வக்ரதுண்டாய தீமஹி !
தந்நோ தந்தி ப்ரசோதயாத் ! 

உயிர்களின் மீது கொண்ட கருணையின் காரணமாக சிவம் எனும் பரம்பொருள் விநாயகராக வடிவம் தாங்கித் தோன்றிய நாளே ‘ விநாயகர் சதுர்த்தி .. 
வி - என்றால் உலகம் .. 
நாயகர் - என்றால் தலைவர் ..
விநாயகர் என்றால் உலகத் தலைவர் என்று பொருள்படும் .. 

கஜானனம் பூதகணாதி ஸேவிதம் ..
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷிதம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஷ்வர பாதபங்கஜம் .. 

பொருள் -
யானை முகம் படைத்தவரும் .. பூதகணங்களால் ஸேவிக்கப்படுபவரும் .. பழுத்த ஜம்பூ பழத்தின் ரசத்தை சாப்பிடுபவரும் .. உமாவின் குமாரரும் ..நம்முடைய துக்கத்தைப்போக்குவதற்குக் காரணபூதராக விளங்குபவரும் .. விக்னங்களுக்கே ( தடங்களுக்கே ) ஈஸ்வரரும் .. (அதிபதி)
ஆகிய கணபதி பகவானின் பாதக் கமலங்களில் தண்டனிடுகிறேன் .. 

விநாயகரைப் போற்றுவோம் ! அனைத்து நன்மைகளையும் 
பெற்றிடுவோம் .. “ ஓம் விக்னேஷ்வராய நமஹ “ 
வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SUNDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD GANESH .. 
MAY HE CLEAR ALL THE OBSTACLES ON YOUR PATH AND SHOWER YOU WITH HAPPINESS AND PROSPERITY .. " JAI GANESH "

No comments:

Post a Comment