PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

swamiye saranam iyyappa..guruve saranam saranam...panvel balagan namam potri potri..ஆனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. இன்று ஆவணி ஞாயிறு இறுதிவாரமுமாகும் .. பூமியில் சூரியாதிக்கம் நிறைந்த இந்நாளில் சூரியபகவானைத் துதித்து தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் சிறந்த நன்நாளாகவும் .. தேகாரோக்கியம் நன்கு அமைந்திடவும் பிரார்த்திக்கின்றேன் .. ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே ! பாஸ ஹஸ்தாய தீமஹி ! தந்நோ சூர்யஹ் ப்ரசோதயாத் !! பொருள் - குதிரைகள் பூட்டிய தேரை உடையவனை அறிவோமாக .. கரங்களில் பாஸத்தை ( கயிறு ) வைத்திருப்பவன் மீது தியானம் செய்கிறோம் .. சூரியதேவனாகிய அவன் நம்மைக்காத்து அருள்செய்வானாக .. அகத்தியர் ராமபிரானுக்கு அருளிய ஆதித்யஹ்ருதயம் என்ற அற்புதமான மந்திரத்தை தினமும் பாராயணம் செய்ததால் தான் ராமபிரான் எளிதில் ராவணனை வென்றார் என்கின்றன புராணங்கள் .. எனவே பகை .. அச்சம் விலக பகலவனை வணங்கவேண்டும் .. சரும நோய்களில் இருந்தும் குணம் பெறலாம் .. எல்லா பகைவர்களையும் அழிக்கக்கூடியதும் மிகுந்த புண்ணியத்தை அளிக்கக்கூடியதும் .. வெற்றியைத் தரக்கூடியதும் .. அளவற்ற உடல்வலிமையை தரக்கூடியதும் .. உத்தமமான .. மங்களகரமுமான ஆதியஹிருதயம் என்ற ஸ்தோத்திரத்தை அனுதினமும் ஜபிக்கவேண்டும் .. இந்த ஸ்தோத்திரம் சூரியனுடைய இதயத்தில் வசிக்கும் பகவானுடைய அனுக்கிரகத்தை அளிப்பதாகும் .. காலை எழுந்தவுடன் குளித்துவிட்டு கிழக்கு நோக்கி “ ஓம் நமோ ஆதித்யாய புத்திர் பலம் தேஹிமோ சதா “ என்று கூறி மூன்றுமுறை வணங்கினால் போதும் ஆயிரம் பலன்களை ஆதவன் அள்ளித்தருவான் .. உலகை தன் ஒளியைத்தந்து காக்கும் ஆதித்யனைப் போற்றுவோம் ! சகலமங்களங்களையும் பெறுவோமாக ! ஓம் ! அம் நமசிவாய ! சூரியதேவாய நமஹ ! வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SUNDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SURYA .. MAY HE SHOWER YOU WITH GOOD HEALTH .. STRENGTH .. AND GOOD FORTUNE .. " JAI SURYA DEV " ..

No comments:

Post a Comment