PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

சுவாமியே சரணம் ஐயப்பா!! பன்வேல் பாலகன் நாமம் போற்றி!! குருவின் பாதார விந்தங்கள் போற்றி! போற்றி!! Swamiye Saranam Iyyappa!Panvel balagane saranam Iyyappa!! Guruve Saranam! Saranam



அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. ஆவணிமாதத்தில் செவ்வாய்க்கிழமையாகிய இன்று 
’ சங்கடஹர சதுர்த்தி ‘ வருவது மிகவும் விசேஷம் .. இதனை 
“ மஹா சங்கடஹர சதுர்த்தி “ என்பர் .. மாலையில் ஆலயம் சென்று விநாயகரை வழிபடுவது சாலச்சிறந்தது .. 
தங்களனைவரது சங்கடங்கள் யாவும் நீங்கி அனைத்து நலங்களும் பெற்றிட விக்கின விநாயகரைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே !
வக்ரதுண்டாய தீமஹி !
தந்நோ தந்தி ப்ரசோதயாத் !! 

சிராவணமாதம் பௌர்ணமிக்கு பிறகு வரும் தேய்பிறை சதுர்த்தி “ மஹா சங்கடஹர சதுர்த்தி “ எனப் போற்றப்படுகிறது 
இன்று ஒருநாள் விநாயகமூர்த்தியை வேண்டி விரதமிருக்க .. ஒருவருடம் சங்கடஹர சதுர்த்தி விரதமிருந்த பலன் கிட்டும் என்று கூறப்படுகிறது .. 

ஒருசமயம் விநாயகர் லோகசஞ்சாரம் செய்யும் வேளையில் 
தன் அழகைப்பற்றி கர்வம் கொண்டிருந்த சந்திரன் அவரைப் பார்த்து சிரிக்க .. கோபம் கொண்ட விநாயகர் சந்திரனை நோக்கி
“ நீ தேய்ந்து மறையக் கடவது “ என்று சபித்தார் .. பின் தன் தவறுக்கு வருந்திய சந்திரன் விநாயகரை நோக்கித்தவமிருக்க 
சந்திரனைத் தன் தலைமீது ஏற்று .. ‘ பாலசந்திரன் ‘ என்ற பெயருடன் அருள்பாலித்து சந்திரனுக்கு வளரும் தன்மையைத் தந்தார் .. அவ்வாறு சந்திரபகவான் வரம்பெற்ற நாள் தேய்பிறை சதுர்த்தியாகும் .. ஆகவே சதுர்த்தி திதி விநாயகருக்கு உகந்ததாயிற்று .. 

சங்கடஹர என்றால் சங்கடத்தை நீக்குதல் .. உலகவாழ்வில் 
நாம் செய்த கர்மவினையின் பயனாக வரும் எல்லாவிதமான இன்னல்களையும் போக்கி அளவில்லாத நன்மைகளை தருவதால் இந்த விரதம் ‘ சங்கடஹர சதுர்த்தி விரதம் ‘ என்று போற்றப்படுகிறது .. 

அதிகாலை நீராடி பால் அருந்தி .. உணவு உட்கொள்ளாமல் மாலைவரை கணநாதன் நினைவோடு உபவாசமிருந்து மாலையில் ஆலயத்திற்குச் சென்று விநாயகப்பெருமானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனையில் கலந்துக் கொள்ளவேண்டும் .. அனைத்து பூஜைகளும் முடிந்தவுடன் 
வீட்டிற்கு வந்து உபவாசத்தை முடித்துக் கொள்ளவேண்டும் ..
விரதமிருக்க முடியாதவர்கள் விநாயகருக்கு உகந்த 
“ காரியசித்திமாலை “ என்ற துதியை எட்டுமுறை படித்து விநாயகரின் அருளைப் பெறவும் .. 

விநாயகரைப் போற்றுவோம் ! சங்கடங்கள் அனைத்தும் நீங்கி அளவில்லாத நன்மைகளைப் பெறுவோமாக ! 
” ஓம் விக்னேஷ்வராய நமஹ “ .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED 
' MAHAA CHATHURTHI DAY ' .. MAY THE DIVINE BLESSINGS OF LORD GANESH BRING YOU ETERNAL BLISS .. AND FULFILL ALL YOUR WISHES .. ' JAI GANESH '

No comments:

Post a Comment