அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. சனிக்கிழமையாகிய இன்று புரட்டாதிச்சனி முதலாம் வாரமுமாகும் .. தங்களனைவருக்கும் சனியின் பிடியிலிருந்து நிவாரணம் கிடைத்து எல்லாம் நலமே அமைந்திட சனிபகவானைப் பிரார்த்திக்கின்றேன் ..
நீலாஞ்ஜன ஸமா பாஸம் !
ரவிபுத்ரம் ! யமாக்ரஜம் !
சாயா மார்த்தாண்ட ஸம்புஜம் !
தம் நமாமி ஸனைச்சரம் !!
பொருள் -
மைபோன்ற கருமைநிறம் கொண்டவனே ! சூரியனின் மைந்தனே ! எமதர்மனின் சகோதரனே ! சாயாதேவியின் வயிற்றில் பிறந்தவனே ! மெதுவாகச் சஞ்சாரம் செய்பவனே !
சனிபகவானே ! உன்னைப் போற்றுகின்றேன் !! ..
பாகுபாடு இல்லாத தர்மவான் .. நீதிமான் .. என்று சனீஸ்வர பகவானை சொல்லலாம் .. ஒருவருக்கு அவரவர் கர்மவினைப்படி பூர்வபுண்ணியபலத்திற்கேற்ப நன்மை .. தீமைகளை வழங்குவதில் சனிக்கு நிகர் சனியே !
சர்வமுட்டாள்களைக்கூட மிகப்பெரிய பட்டம் .. பதவி என்று அமரவைத்துவிடுவார் .. அதேநேரத்தில் அதிபுத்திசாலி .. பெரிய ராஜதந்திரியைக்கூட தெருவில் தூக்கிவீசிவிடுவார் ..
ஏழை .. பணக்காரன் .. படித்தவன் .. படிக்காதவன் .. பதவியிலிருப்பவன் .. பதவி இல்லாதவன் என்ற வித்தியாசம் எதுவும் சனிபகவானுக்குக் கிடையாது .. பலகாரியங்களை கண் இமைக்கும் நேரத்தில் நடத்திக்காட்டும் சர்வவல்லமைபடைத்த ஈஸ்வரன் பட்டம்பெற்ற ஒரேகிரகம் சனியாகும் ..
புரட்டாதிச்சனியில் விரதமிருந்து சனிக்கு அதிபதியாகிய விஷ்ணுபகவான் ஆலயத்தில் எள்ளை சிறுபொட்டலமாகக்கட்டி சிட்டிகையில் நல்லெண்ணை இட்டு நவக்கிரகங்களுக்கு முன்னால் எரிக்கவும் .. மதியம் எள்ளுசாதம் நிவேதனம் செய்து காகத்திற்கு வைத்துவிட்டு உண்ணவேண்டும் ..
சனிபகவானுக்கு நீலநிறமுள்ள சங்குபுஷ்பமும் .. வன்னி.. வில்வ இலைகளுமே விருப்பமானவைகளாகும் ..
பரிகாரம் - மாற்றுத்திறனாளிகள் .. நோயாளிகள் .. முதியோர்கள் .. ஆதரவற்றோர் .. கடின உழைப்பாளிகள் .. தொழிலாளிகள் ..போன்றவர்களுக்குச் செய்யும் உதவியும் .. தொண்டும் சனீஸ்வரருக்கு மிகவும் பிடித்தமானதாகும் .. இவற்றைச் செய்து சனிதோஷத்திலிருந்து நாம் நிவாரணம் பெறுவோமாக .. “ ஓம் சனீஸ்வரராய நமஹ “
வாழ்க வளமுடனும் .. நலமுடனும் ..
WISH YOU ALL A HAPPY MORNING AND A BLESSED SATURDAY WITH THE BLESSINGS OF SHANI DEV .. " JAI SHANIDEV "

No comments:
Post a Comment