அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் ..
புரட்டாதிச் சனி இரண்டாம் வாரமாகிய இன்று சாயாபுத்திரனாகிய சனீஸ்வரனைத் துதித்து சகலருக்கும்
சகலதோஷங்களும் நீங்கி .. நீண்ட ஆயுளும் துன்பமில்லாத வாழ்வும் கிடைக்கப் பிரார்த்திக்கின்றேன் ..
ஒம் காகத்வஜாய வித்மஹே !
கட்க ஹஸ்தாய தீமஹி !
தந்நோ சனி ப்ரசோதயாத் !!
நவக்கிரகங்கள் எனப்படும் ஒன்பது கிரகங்களில் மூன்று கிரகங்கள் தீயபலன்கள் அளிப்பதில் வலிமை வாய்ந்தவை ..
அவை .. ராகு .. கேது .. சனி .. என்பனவாகும் .. இவைகளின் முதன்மையானது சனி என்ற சனீஸ்வரபகவான் தான் .. இவரின் பிடியிலிருந்து யாரும் தப்பமுடியாது என்பர் .. இறைவனாகிய சிவபெருமானையே ஒருகணம் மிடித்ததால்தான் சனிக்கு ‘ ஈஸ்வரப்பட்டம் ‘ கிடைத்து சனீஸ்வரன் ஆனார் ..
பன்னிரெண்டு ராசிகளில் உள்ள ராசிக்காரர்களுக்கு சுமார் ஏழுராசிகளின் அமைப்பு உள்ளவர்களுக்கு ஏதாவது வகையில்
ஏழரைச்சனி .. கண்டச்சனி .. அஷ்டமத்துச்சனி .. போன்ற பாதிப்பு இருந்துகொண்டே இருக்கும் .. இதனால் அவர்களுக்கு வாழ்வில் எடுத்தகாரியங்களில் தோல்வி .. பணமுடக்கம் ..
வம்பு .. சண்டை .. விரக்தி .. தொழில் முன்னேற்றமின்மை ..
எதிர்காலமே சூன்யமானது போன்ற இன்னல்களுக்கு ஆட்பட்ட
வாழ்க்கையை மிகவும் சிரமமாக அனுபவித்துக் கொண்டிருப்பார்கள் ..
அவரவர் வினைக்கேற்ப பலன்களை வழங்குவதில் நீதிதவறாதவர் சனீஸ்வரர் .. இவரது தினமான இன்று விரதமிருந்து எள்ளைப் பொட்டலமாகக் கட்டி மண்சிட்டிகையில் நவக்கிரகத்திற்கு முன்னால் வைத்து நல்லெண்ணை விட்டு எரிக்கவேண்டும் .. காகத்திற்கு எள் அல்லது நல்லெண்ணை இட்ட சாதம் படைத்து அதன்பின்பே நாம் உணவு உண்ணல் வேண்டும் .. விஷ்ணுசகஸ்ரநாமம் பாராயணம் செய்வது நன்மையைத்தரும் ..
” ஓம் சனீஸ்வரராய நமஹ “ ..
வாழ்க வளமுடனும் .. நலமுடனும் ..
GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SATURDAY AND MAY ALL YOUR PROBLEMS BE OUT OF THEIR WAY ON THIS BRIGHT MORNING THAT STARTS THIS NEW DAY ..
" JAI SHANIDEV "
No comments:
Post a Comment