PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMIYE SARANAM IYYAPPPA......GURUVAYURAPPAN MAGANE SARANAM IYYAPPA.....

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் ..
“ கோகுலாஷ்டமி “ நல்வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் .. 
இன்றையநாளில் தங்களனைவருக்கும் ஸ்ரீகிருஷ்ணரின் அருட்கடாக்ஷ்ம் கிடைத்து இன்புற்றுவாழ பகவானைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் தாமோதராய வித்மஹே !
ருக்மணி வல்லபாய தீமஹி !
தந்நோ கிருஷ்ண ப்ரசோதயாத் !! 

சனிக்கிழமையாகிய இன்று ‘ கோகுலாஷ்டமி ‘ .. அஷ்டமி திதியில் அவதரித்தவர் ஸ்ரீகிருஷ்ணர் .. இதனால் இந்த திதியானது கோகுலாஷ்டமி என்று போற்றப்படுகிறது .. 
அஷ்டமி .. நவமி திதியில் சுபகாரியங்கள் செய்யக்கூடாது என்பார்கள் .. காரணம் இந்த திதிகளில் தான் கிருஷ்ணரும் .. இராமரும் பிறந்து அதிக கஷ்டங்களைச் சந்தித்துவிட்டர்கள் என்ற காரணம் சொல்லப்படுகிறது .. இந்த இருவருமே பிறகு சாதனையும் .. சக்தியும்படைத்தவராக திகழ்ந்தார்கள் .. பிறந்த திதி .. நட்சத்திரங்களை மிக நல்ல சக்திபடைத்த நாட்களாக மாற்றினார்கள் .. அஷ்டமி .. நவமி என்பது புனிதமான திதிகள் ..
அவை தோஷ பரிகாரங்களுக்கு ஏற்ற நாட்கள் .. அத்தனை சிறப்புமிக்கது ..

தனக்காக இல்லை என்றாலும் .. பிறருக்காக வாழ்ந்தவர் .. 
அதனால் தான் இவரை “ கண்ணா “ என்கின்றோம் .. அதாவது கண்ணைப்போல் காப்பவன் .. “ முகுந்தா “ - 
மு - என்றால் முக்தியை அருள்வது என்று பொருள் .. 
கு - என்றால் இவ்வுலகில் வாழ்வதற்கும் .. முக்தியைப் பெறுவதற்கும் கிருஷ்ணரே மூலவர் என்ற பொருளின் அடிப்படையில் தான் “ முகுந்தா “ என்று அழைக்கின்றோம் .. 

“ நீ எனக்கு ஒரு இலையைக் கொடு .. அல்லது பூவைக்கொடு .. இல்லை ஒருபழத்தைக் கொடு .. அதுவும் இல்லையென்றால் கொஞ்சம் தண்ணீர்கொடு .. எதைக்கொடுத்தாலும் பக்தியோடு கொடு .. சுத்தமான மனம் உள்ளவன் பக்தியோடு கொடுப்பதை நான் சாப்பிடுவேன் “ என்கிறார் கீதையில் கண்ணன் .. 

பாகுபாடு பாராமல் குழந்தை உள்ளம்படைத்த கண்ணனை 
வணங்கினால் வாழ்நாள் முழுவதும் கிருஷ்ண பரமாத்மா தம் பக்தர்களை தன் கண்ணைப்போல் காப்பார் .. கண்ணனின் 
அருளாசியால் சகலநலங்களும் பெற்று .. வளமோடும் .. நலமோடும் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்வோமாக .. 
“ ஜெய் கிருஷ்ணா “ .. 

GOOD MORNING DEAR FRIENDS .. MAY YOUR SOUL BRIGHTEN UP WITH JOY .. AND YOUR HOME LIGHTEN UP WITH DIVINE BLESSINGS OF LORD KRISHNA ON " GOKULASHTAMI " AND ALWAYS .. 
' JAI KRISHNA ' ..

No comments:

Post a Comment