PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

Swamy Saranam.....Guruve Saranam....Panvel Balagan patham Potri Potri.....அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் .. இனிய ” விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்களும் உரித்தாகுக “ .. வியாழக்கிழமையாகிய இன்று தங்களனைவருக்கும் ஓர் மகிழ்ச்சிகரமான நன்னாளாக அமைந்திட பிரார்த்திக்கின்றேன்.. ஓம் தத்புருஷாய வித்மஹே ! வக்ரதுண்டாய தீமஹி ! தந்நோ தந்தி ப்ரசோதயாத் !! விநாயகருக்குரிய வழிபாடுகளில் முதன்மையானது “ விநாயக சதுர்த்தி “ ஆகும் .. ஆவணிமாதம் சதுர்த்தியில் கொண்டாடப்படும் இது “ ஆத்ம வைபவம் “ என்று புகழப்படுகிறது .. இது நம் ஆத்மாவுக்கு நாமே செய்துகொள்ளும் ஆராதனை .. அதாவது நம் அனைவருக்குள்ளும் ஆத்மஸ்வரூபமாகிய விநாயகரே உறைகிறார் .. ஆகவே அவரைப் பூஜிப்பது நம்முடைய ஆத்மாவுக்கு நாமே நிகழ்த்திக் கொள்ளும் பூஜையாகும் .. விநாயகசதுர்த்தி விநாயகப்பெருமானின் திரு அவதாரமாகக் கருதப்படுகிறது .. முதலும் .. முடிவும் இல்லா முழுமுதல் கடவுளுக்கு அவதாரத் தினமென்று நாம் கொண்டாடுவது நமது நன்மையையும் .. உலகநன்மைக்கும் வேண்டியே .. இறைவழிபாடுகளில் மிகவும் இயல்பானதும் .. இலகுவானதும் விநாயகவழிபாடே ! ஓம்காரம் எனும் பிரணவமந்திரத்தின் சாரமாகவும் .. சாயலாகவும் விநாயகருடைய உருவம் போற்றப்படுகிறது .. அனைத்து நாதங்களுக்கும் முன்னோடியாகத் திகழ்வது ஓம்கார ஒலி என்றால் அந்த ஓம்காரமாய் திகழ்வது ஓம்கார நாயகர் விநாயகரே ! விநாயகர் சதுர்த்தியன்று மனம் .. வாக்கு .. காயத்தால் தூய்மையாய் இருந்து இறைவனை இடைவிடாது நினைத்திருந்து வீட்டிலும் ஆலயங்களிலும் வழிபாடுகள் செய்யலாம் .. ஆலயங்களிலே நடைபெறும் சிறப்பு பூஜைகளில் கலந்துகொள்வதோடு இறைவனை இடைவிடாது நினைப்பதற்குத் துணைபுரியும் சமய நிகழ்வுகளில் பங்கேற்று இறைவனைச் சிந்திக்கலாம் .. விநாயக சதுர்த்தியன்று புற்றுமண்ணால் விநாயக திருவுருவத்தினைச் செய்து அதில் விநாயகரை மந்திரம் .. பாவனை .. (முத்திரைகள்) வழிபாட்டுக் கிரியைகளால் எழுந்தருளச்செய்து நீராட்டி .. அலங்காரங்கள் செய்து திருவமுது அளித்துப் போற்றி வழிபட்டு .. மறுநாள் அவ்வுருவத்தைத் திருக்குளத்திலோ .. புண்ணிய ஆறுகளிலோ அல்லது கடலிலோ கரைத்துவிடுவது வழக்கம் .. விநாயகரைப் போற்றுவோம் ! அவரருளால் நம்வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து இடர்பாடுகள் .. வினைகள் .. சோகங்கள் அனைத்தும் களைந்து நிம்மதி பெறுவோமாக ! “ ஓம் விக்னேஷ்வராய நமஹ “ .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. GOOD MORNING DEAR FRIENDS .. MAY LORD GANESHA SHOWER ABUNDANT GOOD LUCK ON YOU AND MAY HE ALWAYS BESTOW YOU WITH HIS BLESSINGS .. " HAPPY GANESH CHATHURTHI " ' JAI GANESHA ' ..

No comments:

Post a Comment