PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

PANVEL BALAGANE SARANAM IYYAPPA.....GURUVE SARANAM SARANAM......

அனைவருக்கும் எனது அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. ஐப்பசி பௌர்ணமித் தினமாகிய இன்று கல்லுக்குள்ள தேரைக்கும் .. கருப்பை உயிர்க்கும் உள்ளுணர்வைத் தரும் தயாபரன் சிவன் .. அந்த லிங்கத்திருமேனிக்கு ஆண்டுதோறும் 
அன்னாபிஷேகம் உலகமெங்கும் நடைபெறும் தினமுமாகும் ..
சிவலிங்கத்தை அன்னத்தினால் முழுமையாக மூடி ஆராதனைகள் செய்வதையே அன்னாபிஷேகம் என்கிறோம் .. 
அதை ஏன் ஐப்பசி மாத பௌர்ணமியில் செய்யவேண்டும் ..? 
மற்றமாதங்களில் செய்யலாமே என்று கேட்போரும் உண்டு ..
ஐப்பசிமாத பௌர்ணமிக்கு ஒருசிறப்பு உண்டு .. அன்றுதான் சந்திரன் தனது சாபம் முழுமையாக நீங்கப்பெற்று பதினாறு கலைகளுடன் முழுப்பொலிவுடன் திகழ்கிறான் ..
அக்டோபர் ( ஐப்பசி) மாதத்தில் தான் நிலவு பூமிக்கு அருகில்வந்து தனது முழு ஒளியையும் பூமியைநோக்கி வீசுகிறது .. என்கிறது வானவியல் ..
நவக்கிரகங்களில் சந்திரனுக்கு உரிய தானியம் அரிசி .. இதனை
உணர்ந்த ரிஷிகள் ஐப்பசியில் அன்னாபிஷேகம் செய்வது சிறப்பு என்று கண்டறிந்து அதனை நடைமுறைப்படுத்தினர் ..
ஆகாயத்தில் பிறந்த காற்றின் துணையோடு தீ எரிகிறது ..
தீயில் நீரும் .. நீரில் நிலமும் பிறக்கின்றன .. நிலத்தில் விளைந்த அரிசி நீரில் மூழ்கி .. தீயால்வெந்து .. அன்னமாகிறது 
எனவே அன்னம் என்பது ஐம்பெரும்பூதங்களின் சேர்க்கை..
அன்னம் அபிஷேகத்தின் போது ஆண்டவனை முழுவதுமாக அணைத்துக்கொள்கிறது .. அவனிடமே அடைக்கலமாகிறது ..
இதன்மூலம் ஐம்பெரும் பூதங்களும் ஆண்டவனிடம் அடைக்கலம் என்பதும் .. அவற்றின் உள்ளிருந்து இயங்கும் ஆண்டவனே ! பரம்பொருள் ! என்பதும் தெள்ளத்தெளிவாகிறது
இந்த அன்னத்தை தீபாராதனை செய்தபின் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்படுகிறது .. அன்னத்துடன் தனித்தனியாக 
சாம்பார் .. தயிர் .. மோர் என பக்தர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் 
மீதியை நீர்நிலைகளில் கரைக்கப்பட்டு மீன்போன்ற நீர்வாழ் 
உயிரினங்களுக்கு உணவாக்கப்படும் ..
சிவனைப்போற்றி அன்னாபிஷேக சிவனைத்தரிசித்து கோடி சிவதரிசனம் செய்தபலனை அடைவோமாக ! ஓம் நமசிவாய !
வாழ்க வளமுடனும் .. நலமுடனும் ..
GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED DAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SHIVA ..
ANNABISHEKAM IS HELD ONLY ONCE A YEAR ON THE FULLMOON DAY OF OCTOBER .. THIS FESTIVAL GIVES AN OPPORTUNITY TO THE PEOPLE WHO BELIEVE THAT GOD IS THE CREATOR OF FOOD AND LIFE .. TO SHOW GRATITITUDE FOR THE BOUNTY THEY HAVE RECIEVED .. " JAI BHOLE NATH " ..
 

No comments:

Post a Comment