அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் ..
திங்கட்கிழமையாகிய இன்று புரட்டாதிமாதத்தில் வரும்
“ மஹாளய அமாவாசையாகும் “ நம்முன்னோர்கள் புண்ணியகாலமாகிய இன்று பூலோகம் வரும் மகிமைமிக்க நாளாகக் கருதப்படுகிறது .. அத்தோடு மஹாளயபக்ஷ்ம் இன்றோடு முடிவடைகின்றது
திங்கட்கிழமையாகிய இன்று புரட்டாதிமாதத்தில் வரும்
“ மஹாளய அமாவாசையாகும் “ நம்முன்னோர்கள் புண்ணியகாலமாகிய இன்று பூலோகம் வரும் மகிமைமிக்க நாளாகக் கருதப்படுகிறது .. அத்தோடு மஹாளயபக்ஷ்ம் இன்றோடு முடிவடைகின்றது
நமது மூதாதையர்களான பித்ருக்கள் தாம் நினைத்தபோதெல்லாம் பூலோகத்திற்கு வர இயலாது .. அமாவாசை .. மாதப்பிறப்பு .. இறந்த அவர்களது திதி .. மற்றும் மஹாளயபக்ஷ் தினங்களில்தான் அவர்கள் பூலோகத்திற்கு வர அனுமதிக்கப்படுகிறார்கள் .. எனவே அவர்கள் சூட்சும தேகத்துடன் பூலோகத்திற்கு வருகின்ற நாட்களில் நாம் பித்ருதர்ப்பண பூஜைகளை நிறைவேற்றிட அவர்களும் அதை இங்கு நேரடியாகப் பெற்று ஆசியளிக்கின்றனர் ..
பித்ருக்களின் உலகிற்குத் தலைவரான எமதர்மனின் சம்யமினீ என்ற அரசாங்கம் தெற்கில் உள்ளதால் பித்ருபூஜை தென்முகமாகச் செய்யப்படுகிறது ..
கங்கே ! தங்கேதி யோப் ரூயாத் யோஜநாநம் சாதரபி முச்யதே!
ஸர்வ பர்பேப்யோ விஷ்ணு லோகம் ஸகச்சதி !
ஸர்வ பர்பேப்யோ விஷ்ணு லோகம் ஸகச்சதி !
பொருள் - கங்கை ! கங்கை ! என்று நூறுமைல்களுக்கு அப்பால் இருந்து சொல்பவன் எல்லா பாவங்களிலிருந்தும் விடுபட்டு விஷ்ணு அருளை அடைகிறான் என்று விஷ்ணுபுராணம் சொல்கிறது ..
நமதுமுன்னோர்களான மூன்றுதலைமுறைக்கும் சேர்த்து சிரார்த்தம் செய்யும்பொழுது பித்ருதேவதைகளின் பரிபூரண ஆசிகளும் .. சகலவிதமான சௌபாக்கியங்களும் கிட்டுவதோடு துன்பம் அணுகாமல் இன்பமாக வாழ அருள்வார்கள் ..
அவர்களது பரிபூரண ஆசியைப்பெற்று .. பாவதோஷங்கள் .. தடை .. தடங்கல்கள் நீங்கப்பெற்று சுபீட்சமான வாழ்வு வாழ்வோமாக .. “ பித்ரு தேவோ பவ “ ..
GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED MONDAY .. TODAY IS THE ' MAHALAYA AMAVASYA DAY ' .. IT'S THE RIGHT TIME AS CONSIDERED BY MANY TO RESPECT THE DEPARTED SOULS .. IT SOLVES THE PROBLEMS RELATED TO HEALTH .. MONEY AND RELATIONSHIPS ..
EVEN IF THE ANCESTORS HAVE CURSES .. WE CAN RELIEVE THEM FROM BY OFFERING TO THE POOR .. IT PURIFIES THE MIND OF UNWANTED DEIRES AND BRINGS PROSPERITY AND LONFLIFE TO THE FAMILY .. " PITHRU DEVO BAVA " ..
No comments:
Post a Comment