PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

swamiye saranam iyyappa....Panvel balagane saranam iyyappa....Guruve saranam saranamn

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. நவராத்திரி ஏழாம்நாளாகிய இன்று அன்னை சரஸ்வதிதேவிக்கு உரிய நாளாகும் .. சண்ட முண்டர்களை வதைத்தபின் பொன்பீடத்தில் அம்பிகை அமர்ந்து வீணைவாசிக்கும் கோலமாகும் .. சாம்பவி என்பர் .. 

வெண்தாமரையில் அமர்ந்து வெள்ளையுடை அணிந்து திருக்கரங்களில் அங்குசம் .. வில் .. வஜ்ரம் .. கமண்டலம் .. சுவடி .. வீணை .. ஸ்படிகமாலை ஆகியவற்றுடன் பளிங்குமேனியளாய்த் திகழ்கிறாள் அன்னைசரஸ்வதி .. 

கிருஷ்ணரின் முகத்திலிருந்து தோன்றியவள் ..என பிரம்ம வைவர்தம் நூலும் .. சிவசக்தி என்று கூர்மபுராணமும் கூறுகின்றன .. அறியும் திறனுக்கு அரணாய் இருந்து .. அருள்பாலித்து .. ஈடு இணையற்ற கல்விச்செல்வத்தை அளித்துக்காக்கும் சக்தியாய் உலவும் அன்னை சரஸ்வதிதேவி மென்மையின் இருப்பிடம் .. 

மென்மை உள்ள இடத்தில் தான் அறிதல் இருக்கும் .. 
வாய்மை உள்ள இடத்தில் மட்டுமே நிலைக்கும் .. 
ஆணவம் கொண்டோருக்கு அன்னையின் அருள் கிட்டுவதில்லை .. கல்விக்கும் .. ஆயகலைகள் 64க்கும் அதிபதி 
சமயோசிதம் .. புத்திக்கூர்மை .. நாவன்மை ஆகியவைகளுக்கும் அதிபதி கலைவாணியே ! 

அன்னையைப் போற்றுவோம் ! மனத்தூய்மை .. சாந்தம் .. மெய்ஞானம் .. ஆகிய உயர்குணங்களையும் பெற்றிடுவோமாக! ஓம் சக்தி ஓம் ! வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. TODAY IS THE DAY FOR 
' MAA SARASWATI DEVI ' ..WHO BRINGS BEAUTY .. WISDOM .. CREATIVITY .. AND CLARITY .. 

MAY THE DIVINE GRACE OF GODDESS SARASWATI BE WITH YOU TODAY AND ALWAYS .. AND MAY SHE ALWAYS BLESS YOU WITH ETRNAL LIGHT OF KNOWLEDGE .. AND WISDOM .. JAI MATA DI ..

No comments:

Post a Comment