TODAY OUR 11TH DAY VIRADHAM....SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM....

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. ஐப்பசிமாத அமாவாசையாகிய இன்று வீடுகளில் 
லக்ஷ்மி குபேரபூஜைகள் செய்வது விசேஷம் .. தங்கள் வாழ்வில் ஏற்படும் சங்கடங்கள் யாவும் அகலவும் .. காரியத்தடைகள் நீங்கவும் .. அனைத்து பிரச்சினைகளிலிருந்தும் மீளவும் அருள்புரிவாராக ..
ஓம் ஸ்ரீ யக்ஷாய குபேராய !
வைச்ரவணாய தநதாந்யாதிபதயே !
தநதாந்ய ஸ்ம்ருத்திம்மே தேஹி !
தாபாஸ ஸ்வாஹா !!
பொருள் - யட்சராஜனே ! குபேரனே ! விச்ரவசின் புதல்வனே!
செல்வங்களின் அதிபதியே ! நம் அவசியமான தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள தேவையான செல்வத்தை எமக்கு அருளச்செய்வீராக !
குபேரனுக்கு ‘ ராஜாஜி ராஜன் ‘ என்ற பெயரும் உண்டு .. பாற்கடலை தேவர்கள் கடைந்தபோது குபேரன் உருவானான் ..
லக்ஷ்மிதேவியின் அருளைப்பெற்றவன் .. பணக்கஷ்டத்தால் துன்பப்படுபவர்கள் இதுவரையில் கொடியபாவங்கள் செய்யாமலிருந்தால் அவர்களை ஒரேநாளில் கோடீஸ்வரன் ஆக்குவது இவரது பணி .. வலதுபுறத்தில் சங்கநிதியும் .. இடதுபுறத்தில் பத்மநிதியும் இருப்பார்கள் ..
சங்கநிதி கையில் சங்குவைத்திருப்பான் .. இவன் குபேரனிடம் செல்வம்பெற அனுமதி கொடுப்பவன் .. இவனது கை வர முத்திரைதாங்கி இருக்கும் .. 
பதுமநிதியின் கையில் தாமரை இருக்கும் .. தாமரையும் சங்கும் செல்வத்தின் அடையாலங்கள் ..
குபேரனின் இடப்புறம் அவரது தர்மப்பத்தினி இடக்கையில் கருநெய்தல் மலர்கள் ஏந்திய நிலையில் வீற்றிருக்கிறாள் ..
இரத்தினங்களை வாயிலிருந்து உதிரும் கீரிப்பிள்ளையை வைத்திருக்கிறான் .. கீரிப்பிள்ளை பேராசை மற்றும் பகைமையின் சின்னமான பாம்பின் எதிரியாகும் .. இரத்தினங்கள் உதிரும்செயல் தானத்தைக் குறிக்கின்றது ..
குபேரனைப் போற்றுவோம் ! அவரை வணங்குவோருக்கு குசேலருக்கு நிதிகிடைத்ததுபோல் .. அயாசகன் என்ற ஏழைபிராமணருக்கு ஆதிகூகரர் அருளால் தங்கநெல்லிக்காய் மழையாக அவர் வீட்டில் பெய்ததுபோன்ற பெரும் செல்வம் தங்கள் இல்லம் தேடிவரும் .. இழந்த செல்வங்கள் யாவும் திரும்பப்பெற்று மகிழ்ச்சியுடன் வாழ லக்ஷ்மி குபேரன் அருள்புரிவாராக ..
“ ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் லக்ஷ்மிகுபேராய நமஹ “ .. 
வாழ்க வளமுடனும் .. நலமுடனும் ..
GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED WEDNESDAY WITH THE BLESSINGS OF LORD LAKSHMI KUBERA ..
MAY HE SAVEGUARD YOU FROM ALL THE EVIL SPIRITS .. AND SHOWER YOU WITH HEALTH ..WEALTH .. & PROSPERITY ..
" JAI KUBERAAYA NAMAHA " ..

No comments:

Post a Comment