PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

ஸ்வாமி சரணம்....குருவே சரணம்...இந்த வருட யாத்ரா பற்றி என் சிற்றறிவுக்கு எட்டிய சில விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் ..




இந்த வருடம் நவம்பர் 1 அன்று நமது குருசுவாமி ஆசியுடன் மாலை அணிந்து நமது விரதத்தை தொடங்கினோம். மும்பையில் மாலா தாரணா நடந்த அதே நவம்பர் ஒன்று அன்று குருவின் ஆசியுடன் எனது இல்லத்தில் நடந்தது.குருவின் சென்னை வருகை தொடங்கி யாத்ரா நிறைவு வரை எனது மனதில் பட்ட சில நிகழ்வுகளை உங்கள் முன் சமர்பிக்கிறேன்.



குருவின் சென்னை விஜயம் 

பவனி வருகிறார் 
பாலகன் பவனி வருகிறார்
குருசுவாமி கூட இங்கே 
பவனி வருகிறார்!

சென்னையில் உள்ள சாமிமார்
 மகிழும் வண்ணமே
விண் வழியாகவே பவனி வருகிறார்!

அடியவர் அனைவருக்கும்
அருள் மழை பொழியவே
பெய்யும் மழை நிறுத்தி
இங்கே பவனி வருகிறார்!


அனுகிரஹத்தைஅள்ளி அள்ளி 
தரவே பவனி வருகிறார் !

அய்யன் பவனி வருகிறார் 
சென்னைக்குபவனி வருகிறார்!

குருசுவாமி பாலகருடன் சென்னை 11-12-2015 மதியம் 1230 வந்தார். சூரியனை கண்ட பனிபோல சென்னையில் ருத்ர தாண்டவம் ஆடிய புயல் மழை முற்றிலுமாக ஓய்ந்தது. சென்னை விமான நிலையத்திலிருந்து நேரே பம்மல் சேதுராமன் சுவாமி இல்லம் அடைந்தோம். அங்கு பாலகர் அழகாக அமர்ந்தார். மதிய வேளையிலே குருவின் கைவண்ணத்தில்

அழகாக அலங்கரிக்கப்பட்ட பாலகருக்கு பூஜை
 இனிதே நடந்தது










மதியம் பாலகருக்கு அளிக்கப்பட்ட நைவேத்யம் மதிய உணவாக அனைவருக்கும் அமைந்தது. சிறிது நேர இடைவேளை உடன் பாலகருடன் பெருங்களத்தூர் நோக்கி பயணப்பட்டோம். திரு.வரதன் மற்றும் சரஸ்வதி இல்லத்தில் சிறிது ஆசுவாசப் படுத்திக்கொண்டு கருமமே கண்ணாயினர் என்ற வகையில் குருவின் பயணம் கே.கே.நகர் நோக்கி நகர்ந்தது. 

கே.கே.நகர் பகவதி சுவாமி இல்லத்தில் பாலகனை எதிர் நோக்கி அவரது குடும்பத்தினரும் சென்னை சுவாமிமார்களும் காத்திருந்தனர். வளமைபோல் குருசுவாமி பூரண கும்ப மரியாதையுடன் சரண கோஷம் முழங்க பகவதி  இல்லத்தில் பாலகருடன் பிரவேசித்தார். 

பவித்ரமான பகவதி இல்ல பூஜை

மாலை சுமார் ஆறு மணிக்கு தொடங்கிய அய்யனின் அலங்காரம் அசராமல் இரண்டு மணிநேரம் நடந்தது. இரவு எட்டு மணிக்கு தொடங்கிய பூஜை பத்தரைக்கு நிறைவுற்றது. சென்னை ஐயப்பமார்கள் அனைவருக்கும் அணுக்ரகாம் செய்யப்பட்டு இருமுடிபைகள் பூஜையில் வைக்கப்பட்டது. கைப்பை, பாலகனின் வண்ண காலண்டர், சோப்பு, இருமுடி வைத்துக்கொள்ளத சரண கோஷம் மின்னும் துண்டுஅனைவருக்கும் அனுக்ரகாம் செய்து குருச்வாமியால் கொடுக்கப்பட்டது பெரும் பாக்கியம். கன்னி சாமி மணிகண்டனுக்கு இத்துடன் தட்டு டம்ளர் கொடுக்கப்பட்டது. குருசுவாமி பகவதி எவ்வாறு தம்மை தன்னுடன் இணைத்துக்கொண்டார் என்பதை நெகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தினார். தனக்கும் பகவதி குடும்பத்திற்கும் உள்ள நெடுநாள் நட்பினை வெளிப்படுத்தினார். இங்கு இருப்பது தனக்கு தந்த சொந்த ஊரில் இருக்கும் இன்பத்தை தருவதாக சொன்னார். பூஜையின் முத்தாய்ப்பாக நான்  பாலகரை பற்றி எழுதிய பாட்டினை அரங்கேற்றம் செய்து எனக்கு பெரும் கெளரவம் அளித்தது அவரது பெருந்தன்மையை, தாயிற்சிறந்த அன்பினை வெளிப்படுத்தியது. 


அந்த பாடல் 

 
 
 

மோகன அவதார மைந்தன் மோகன் இல்லத்தில்
இரவு பகவதி சுவாமி இல்லத்திலிருந்து சுமார் இரவு இரண்டு மணிக்கு புறப்பட்டு நங்கநல்லூர் மோகன் இல்லம் அடைந்தோம். சுமார் இரண்டு மணி நேரமே ஓய்வு எடுத்த குருசுவாமி காலை ஐயனை அலங்கரிக்க தொடங்கினார். அய்யனின் அலங்காரம் மெய்சிலிர்க்க செய்தது.
“மலர்களை அவரிடம்  கொடுத்துவிடு
மயக்கிடும் அலங்காரம் கிடைத்துவிடும்
மனதை அவனிடம் கொடுத்துவிடு
மதி மயங்கி நீ நின்றுடுவாய் “


என்று  பாட தோன்றுகிறது
மோகன் வீட்டில் பாலகர் பட்டொளி வீசி அருள் மழையினை பொழிந்தார்.
 



  
 
 



சிறிய ஓய்விற்கு பிறகு பாலகர் பயணப்பட்டார் பெருங்களத்தூர் திசை நோக்கி   

  
என் வீட்டில் எழுந்தருளுய என் அய்யன்

மாலை பொழுதின் மஞ்சள் வெயில் மாலையிலே மஞ்சள் காரில் மயக்கும் மன்னன் மாயனின்  மகன் என் இல்லத்திற்கு வருகை ,

காலை முதல் இடைவிடாது பயணம்...பூஜை..சிறிது ஒய்வு.. சிறிதும் சோர்வின்றி  குருசுவாமி என் வீட்டில் பூஜைக்கான ஏற்பாடுகளை உடனடி தொடங்கினர்.



 
 
 
 
 

அள்ளி அள்ளி கொடுத்தாலும்
வற்றாத அருள் மழை
அளித்தார் அய்யன்
மாலை ஏழு மணிக்கு தொடங்கி பதினோரு மணிவரை
அர்ச்சனைகள் ...சளைக்காமல் சரண கோஷம்
குருவின் பாடல்கள் ..... இரவு என் இல்லத்திலே
பாலகர் பரிமளித்தார்.. குருவின் கருணை அது..
காலை பாலகர் மனமில்லாமல் என் இல்லத்திலிருந்து 
புறப்பட்டது போன்ற பிரமை எனக்கு ஏற்பட்டது.
அனால், அவன் அனைவருக்கும் பொதுவன்றோ? 



மாளிகைபுரம் சகுந்தலா வீட்டில் பாலகர்  

புதிதாக கட்டிய வீட்டில்

புகுந்தான் பாலகன்

புதுமை அதுவல்ல

புதுமை அது பூஜை

புதுமை படைத்திட்டார் குரு

புஷ்பாஞ்சலி அல்லவோ !!!!

மஞ்சளிலே தொடங்கி
மனதெல்லாம் மயங்க
மலைபோல் கீழ் இறங்கி
மலர்ந்து மலராமல்
மா (பூ) மலை அமைத்திட்டார்
மகிமை படைத்திட்ட குருவல்லவோ
மாட்சிமை பொருந்திய மகானுபாவன் 

 
 
 
 
 
 
 
நெல்லை நோக்கி  பயணம்....

அதிகாலை ஐந்து மணிக்கு திங்கள் காலை நெல்லை அடைந்தோம். பாம்பே ஐயப்பமார்கள் அதிகாலை வேலையிலே சிறிதும் சோர்வில்லாமல் முகமலர்ச்சியோடு முகமன் கூறி வரவேற்றனர். பாலகர் பாலு சுவாமி கரத்திலே பவ்யமாக போய் அமர்ந்தார். "சூரியனை கண்ட தாமரை போல" முகமலர்ந்து பூ போல ஏந்தி பாலகரை தனதாக்கி கொண்டார் பாலு சாமி. சென்னை சாமிமார் கரத்திலிருந்து சுமைகளை தங்கள் கரத்திற்கு மாற்றி கொண்டு சாமிமார்கள் அவரவர்  நலம் கேட்டபடி குழிவேலி அடைந்தோம். குருசுவாமி தலை அசைக்க ஸ்ரீராம் சுவாமி சரண கோஷத்துடன் பயணம் பாபநாசம் சென்று அடைந்தது.

குருபதம் தொடர்ந்து குருபாலா அடைந்து
கும்பிட்டு வந்தோம் ஐயப்பா!!
காலை தாமிரவரணி நீராடி
 பாபனாசனை தரிசித்து
பாவ விமோசனம் பெற்றோம்.ஐயப்பா...


மாலை கட்டுநிறை தொடங்கியது. மண்டபம் போன்ற அமைப்பில் பாலகர் புஷ்ப அலங்காரம் பொன் ஆபரணம் ஜொலிக்க  காட்சி அளித்தார். காண கண் கோடி வேண்டும் அவன் உருவம் காண. பார்க்க பார்க்க பரவசம் அடைந்தோம் அனைவரும்.

குருவிற்கு உதவியாக சிவா சாமி, பாலு சாமி, மோகன் சாமி, கண்ணன் சாமி அருகே அமர்ந்து அவரது கண் அசைவிலே கட்டுநிரை காரியம் ஆற்றினர். அதனை பார்பதற்கே ஆயிரம் கண்கள் வேண்டும் அல்லவோ !!

இரவு கட்டு பத்தரைக்கு முடித்து மறுநாள் காலை தொடங்கியது.










இரண்டாம் பகுதி தொடரும்.........


No comments:

Post a Comment