PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022
தை அமாவாசை சிறப்பைப் பற்றி தெரிந்து கொள்வோமா !
அமாவாசைகளில் மிக விசேஷமானது தை அமாவாசையாகும்.
அன்று பித்ருக்கள் பூலோகம் செல்ல யமதர்மராஜர், அனுமதி தருவார்.
அதனால் யம காவலர்கள், பித்ருக்களை அழைத்துக்கொண்டு சூரியன்
இருக்கும் இடத்திற்கு வருவார்கள்.
அங்கிருந்து சூரியனின் வாகனத்தில் பூலோகத்திற்கு பித்ருக்களை
அழைத்துவருவார்கள்.
பித்ருக்களை அவரவர் இல்லத்திற்கு செல்ல அனுமதிப்பார்கள்
யமதர்மராஜாவின் காவலர்கள்.
அப்போது பித்ருக்கள், தங்கள் பிள்ளைகளையும் உறவினர்களையும்
பார்க்க மிகுந்த பாசத்துடனும்,பசியோடும் வருவார்கள்.
நம் வம்சத்தினர் நமக்கு உணவு தருவார்களா என்று காத்திருக்கும்
பித்ருக்களின் ஆத்மா.
அதனால், தை அமாவாசை அன்று பித்ருக்களுக்கு நிச்சயம் தர்பணம் தர
வேண்டும்.
நாம் தரும் பிண்டமும், தண்ணீரும்தான் அவர்களுக்கு
உணவு.
பிண்டம்தான் ஆத்ம ரூபமாக உள்ள முன்னோர்களின் பசியை தீர்க்கும்
உணவாகும்...
தை அமாவாசை அன்றுபித்ருகளுக்கு தர்ப்பணம்
கொடுத்தால்,ஸ்ரீ மகாவிஷ்ணு, சிவபெருமான் மற்றும்
பித்ருக்களின் அருளாசிகளுடன் எண்ணற்ற நன்மைகள்
கிடைக்கும்.
தை அமாவாசை நேரம் முடிந்த உடனே, யம தேவரின் காவலர்கள்
மீண்டும் பித்ருக்களை அழைத்துக்கொண்டு யமலோகம் செல்ல, சூரிய
பகவானின் வாகனம் இருக்கும் இடத்திற்கு செல்வார்கள்.
பித்ரு கடனை சரியாக நிறைவேற்றினால் பல
நன்மைகள் உண்டாகும்
கடன் பட்ட நெஞ்சம் கலங்கும் என்பார்கள்.
அதுபோல பல வருடங்கள் பாடுபட்டுகுழந்தைகளை வளர்த்த பெற்றோர்,
அவர்களின் காலம் முடிந்து இறைவனடி சென்றபிறகு,
அவர்களுக்கு திதி தருவது, பிண்டம் தருவது, வழிபாடு
செய்து வருவது போன்றஅவர்களுக்குரிய மரியாதையை
சரியாக தந்தாக வேண்டும்.
அதைதான் பித்ரு கடன் என்கிறது சாஸ்திரம்.இவ்வாறு, இந்த கடனை அடைக்காத பிள்ளைகளின்
வாழ்க்கை கலங்கும்.
இதனால்பித்ரு கடன் பட்ட பிள்ளைகளின் நெஞ்சமும் ஏதாவது ஒரு விஷயத்தில் கலங்கும்படிஆகும்.
அதனால் கண்டிப்பாக பித்ரு கடனை நிறைவேற்ற வேண்டும்.
அப்படி செய்தால்தான்நன்மைகள் வரும் என்று
சிவபெருமானே ஸ்ரீஇராமரிடம் கூறி இருக்கிறார்.
ஸ்ரீஇராமசந்திர மூர்த்தி, தசரத சக்கரவர்த்திக்கும்,
ஜடாயுவுக்கும் எள் தர்ப்பணம்செய்து பிதுர் பூஜை செய்தார்.
அப்போது, சிவபெருமான் ஸ்ரீஇராமரின் முன்தோன்றி,
“முன்னோருக்கு பிதுர் கடன் செய்து தர்பணம்
செய்ததால்அனைத்துபாவங்களும் நீங்கி, எல்லா நன்மைகளும் உன்னை
தேடி வரும்.” என்றார்.
இரவு- பகல் பாராமல், பசியோடும் பாசத்தோடும் தன்
வம்சத்தை காண வரும்பித்ருக்கள்
அமாவாசைகளில் மிக விசேஷமானது தை
அமாவாசையாகும்.
அன்று பித்ருக்கள்பூலோகம் செல்ல
யமதர்மராஜர், அனுமதி தருவார்.
அதனால் யம காவலர்கள்,பித்ருக்களை அழைத்துக்கொண்டு சூரியன்
இருக்கும் இடத்திற்கு வருவார்கள்.அங்கிருந்து சூரியனின்
வாகனத்தில் பூலோகத்திற்கு பித்ருக்களை
அழைத்துவருவார்கள்.
பித்ருக்களை அவரவர் இல்லத்திற்கு செல்ல
அனுமதிப்பார்கள் யமதர்மராஜாவின்காவலர்கள்.
அப்போது பித்ருக்கள், தங்கள் பிள்ளைகளையும்
உறவினர்களையும்பார்க்க மிகுந்த பாசத்துடனும்,
பசியோடும் வருவார்கள்.
நம் வம்சத்தினர் நமக்கு உணவு தருவார்களா என்று
காத்திருக்கும் பித்ருக்களின்ஆத்மா.
அதனால், தை அமாவாசை அன்று பித்ருக்களுக்கு
நிச்சயம் தரப்பணம் தர வேண்டும்.நாம் தரும் பிண்டமும்,
தண்ணீரும்தான் அவர்களுக்கு உணவு.
தை அமாவாசை நேரம்முடிந்த உடனே, யம தேவரின்
காவலர்கள் மீண்டும் பித்ருக்களை
அழைத்துக்கொண்டுயமலோகம் செல்ல,
சூரிய பகவானின் வாகனம் இருக்கும் இடத்திற்கு
செல்வார்கள்.அதற்காக அவர்கள் அதிக தூரம் நடந்து செல்வார்கள்.
சூரியனின் வாகனம் நிறுத்தப்பட்டிருக்கும் இடத்திற்கு
செல்ல பித்ருக்களும்,யமதர்மரின் காவலர்களும் நாள்
ஒன்றுக்கு இருநூற்று நாற்பத்தேழு காதவழி தூரம்இரவும்
பகலும் நடந்து செல்ல வேண்டும்.
அவர்கள் போகும் பாதையில் கூர்மையான ஈட்டியை
போல் இலைகள் கொண்ட காடுஇருக்கும். இத்தனை
தூரம் அவர்கள் நடக்க இருப்பதால்தான் பித்ருக்களுக்கு,
பிண்டம்தர வேண்டும். இல்லை என்றால் அவர்கள்
பசியோடும், தாகத்துடனும் யமதூதர்களுடன்
நடக்கும்போது சோர்வு அடைந்து, மயங்கி விழுவார்கள்.
அந்தசமயத்தில், தங்களுக்கு உரிய மரியாதை தராத தன்
வம்சத்தை சபிப்பார்கள்.
பித்ருக்களின் சாபம்பட்ட குடும்பத்தில்தான் துர்
சம்பவங்கள் நடக்கும்.
தெய்வம் கூடகருனை காட்டாது - உதவி செய்யாது
என்கிறது கருட புராணம்.
கோடி புண்ணியம் தரும் எள் தானம்
எள், ஸ்ரீவிஷ்ணு பகவானின்வியர்வையில் இருந்து
உருவானது.அதனால், எள் தானம் செய்தால்
பலபுண்ணியங்கள் கிட்டும்.
அதனால்தான்,பித்ருக்களுக்கு
பிண்டம்கொடுக்கும்போது எள்ளையும்
கலந்தே தருகிறோம்.
தர்பைப் புல் ஆதியில்ஆகாயத்தில் உருவானது
என்கிறது கருட புராணம்.
மறவாதீர்கள்.
அதனால், பல தேவர்களின்அருளாசியும்,
தெய்வங்களின்அருளாசியும் தர்பைக்கு
இருக்கிறது.
ரேடியோ அலைகளை பெற ஆண்டனாஉதவுவதை போல,
நாம் சொல்லும் மந்திரங்கள், மிக வேகமாக அந்தந்த
தெய்வங்களைசென்றடைய தர்ப்பை உதவுகிறது.
இப்படி சக்தி வாய்ந்த தர்ப்பையை கையில்
வைத்துக்கொண்டு பித்ருக்களுக்கு பிண்டம்படைத்தால்
அவை பித்ருகளை எளிதாக சென்றடைந்து அதன்
பலனாக பலதோஷங்கள் நீங்கும்.பூஜை முறைகள்
கோயிலில் தர்பணம் மற்றும் பித்ரு வழிபாடு முடித்த
பிறகு வீட்டிற்கு திரும்பி வந்து,பித்ருக்களின் படங்கள்
இருந்தால், அதில் துளசி மாலையோ அல்லது
துளசிஇலையோ சமர்ப்பிக்க வேண்டும்.
அத்துடன், முன்னோர்களுக்கு பிடித்த உணவை படைத்து
வணங்க வேண்டும். அந்தஉணவை காக்கைக்கு வைத்த
பிறகே நாம் சாப்பிட வேண்டும்.
முதியவர்களுக்குஅன்னதானம் செய்வது நல்லது. அப்படி
செய்வதாலும் முன்னோர்களின் ஆத்மாசாந்தியாகும்.
தோஷத்தையும் சாபத்தையும், அதனால் ஏற்படும் சுப
தடைகளை நீக்கி நன்மைகளைஅள்ளி தர பித்ருக்கள்
காத்திருக்கிறார்கள். அதனால் பித்ருக்களுக்கு மரியாதை
தந்து,அவர்களின் பசியை போக்க தை அமாவாசை அன்று
பிண்டம் படைத்து பூஜை செய்யவேண்டும்.
மறவாதீர்கள். நாம் தரும் பிண்டம்தான் ஆத்ம ரூபமாக
உள்ள முன்னோர்களின்பசியை தீர்க்கும் உணவாகும்.
விசேஷமான தை அமாவாசையில், பித்ருக்களின்
பசியை போக்கி அவர்களின்ஆசியையும், இறைவனின்
அருளையும் பெற்று சுபிக்ஷங்களை
தடையின்றிபெறுவோம்.!

No comments:

Post a Comment