PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMI SARANAM ...GURUVE SARANAM.....




அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. வியாழக்கிழமையாகிய இன்று சதுர்த்தி திதியும் சேர்ந்து வருவதால் ஆலயம் சென்று விநாயகப்பெருமானைத் தரிசிப்பது சாலச்சிறந்தது .. தங்களனைவருக்கும் இன்றையநாள் ஓர் இனிய நன்னாளாக மிளிரவும் .. அனைத்து செல்வங்களும் பெற்று மகிழ்வோடு வாழவும் வாழ்த்துகிறேன் கணபதியை வணங்குகின்றேன் .. 

விநாயகருக்கு வளர்பிறை சதுர்த்தி ... தேய்பிறை சதுர்த்தி இரண்டிற்கும் விரதமிருப்பர
் இரண்டிற்கும் வெவ்வேறான பலன்களும் உண்டு .. வளர்பிறையில் விரதமிருந்தால் விருப்பங்கள் நிறைவேறும் செல்வ வளம் பெருகும் ..

தேய்பிறையில் விரதமிருந்தால் சங்கடங்கள் நீங்கும் .. மனக்கவலை அகலும் .. முயற்சி வெற்றிபெறும் தேய்பிறை சதுர்த்தி விரதத்தையே சங்கடஹரசதுர்த்தி என்பர் .. வளர்பிறை சதுர்த்தி தினமாகிய இன்று அருகிலிருக்கும் விநாயகர் ஆலயத்திற்குச் சென்று அருகம்புல் மாலையிட்டு விநாயகரை வணங்கிவர எல்லாவிதமான நன்மைகளும் விளையும் ..

கணங்களுக்கெல்லாம் அதிபதியாவதால் அவரை “ கணபதி “ 
என்று சொல்கின்றோம் .. எனவே நாம் ” தேவகணத்தில் “ 
பிறந்தவராக இருந்தாலும் .. ” மனிதகணத்தில் “ பிறந்தவராக இருந்தாலும் .. “ அசுரகணத்தில் “ பிறந்தவராக இருந்தாலும் 
அனைவரும் வணங்கவேண்டிய தெய்வமாக விளங்குபவர் 
ஆனைமுகப்பெருமானாகும் .. அந்த ஆனைமுகனைப் போற்றுவோம் .. சகலவிருப்பங்களும் நிறைவேற அருள்புரிவாராக .. “ ஓம் விக்னேஷ்வராய நமஹ “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .. 

GOOD MORNING.. WISH YOU ALL A BLESSED THURSDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD GANESHA MAY YOU BE BLESSED WITH HAPPINESS ,, PROSPERITY AND GOOD FORTUNE .. " JAI GANESH "

No comments:

Post a Comment