மாமரமாய் நின்ற சூரனை இருகூறாகப் பிளந்த வெற்றிவீரனே !
கற்றவர்கள் புகழ்ந்து போற்றும் ஞானபண்டிதனே !
செவ்வானம்போல் சிவந்த மேனியனே !
கதம்பம் முல்லை மலர்களை விரும்பி அணிபவனே
அறிவுக் கண்களைத் திறந்து ஞானத்தைத் தந்தருள்வாயாக “
கற்றவர்கள் புகழ்ந்து போற்றும் ஞானபண்டிதனே !
செவ்வானம்போல் சிவந்த மேனியனே !
கதம்பம் முல்லை மலர்களை விரும்பி அணிபவனே
அறிவுக் கண்களைத் திறந்து ஞானத்தைத் தந்தருள்வாயாக “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. மஹாகந்தசஷ்டி ஆறாம் நாளாகிய இன்று முருகப்பெருமான் சூரனை சூரசம்ஹாரம் செய்த் தேவர்களைக் காத்த நாளாகும் .. தங்களனைவரும் கந்தனின் அருட்கடாக்ஷ்ம் பெற்று வாழ்வில் அனைத்திலும் வெற்றிமேல் வெற்றி காண்பீர்களாக !
ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹாஸேநாய தீமஹி !
தந்நோ ஷண்முக ப்ரசோதயாத் !!
மஹாஸேநாய தீமஹி !
தந்நோ ஷண்முக ப்ரசோதயாத் !!
அசுரமங்கை “மாயை” என்பவளுக்கும் காசியப்பமுனிவருக்கும் பிறந்தவர்கள் தான் சூரபத்மன் .. சிங்கமுகன் .. தாரகாசுரன் எனும் அரக்கர்கள் மற்றும் அஜமுகி என்னும் மகள் .. இம்மூவரும் சிவனை நோக்கி கடும்தவம் புரிந்து பற்பல வரங்கள் பெற்றனர் .. அதாவது சிவனின் சக்தியால் மட்டுமே அழிவு வரவேண்டும் எனவும் கர்ப்பத்தில் பிறக்காத ஓர் ஆண்மகனால் மட்டுமே இறக்கவேண்டும் என்பதுதான் ..
சூரபத்மனின் ஒருபாதி - ‘நான்’ என்கின்ற அகங்காரம்
மற்றொருபாதி - ‘எனது’ என்கின்ற மமகாரமாகவும் அமையப்பெற்றவன் .. சூரபத்மன் தான் பெற்ற வரத்தின் வலிமையால் ஆண்வம் மிகுந்து இந்திரன் மகனான சயந்தன் மற்றும் தேவர்களையும் சிறையிலிட்டு சித்திரவதை செய்தான் .. இறைவனும் அவர்களைக் காப்பாற்ற திருவுளம் கொண்டு சூரபத்மன் முதலான அசுரர்களை அழிக்கும் சக்தி படைத்த “ஆறுமுகனை” தன்நெற்றிக்கண்ணில் இருந்து வந்த தீப்பொறிகள் மூலம் அவதரிக்கச்செய்தார் .. அதன்படிதான் முருகன் திருச்செந்தூரில் எழுந்தருளினார் ..

சூரபத்மன் - ஆணவமலம் கொண்டவன்
தாராகாசுரன் - மாயாமலம் உடையவன்
சிங்கமுகன் கன்ம மலத்தின் வடிவம் கொண்டவன்
இவர்களை “ஞானம் “ என்கின்ற முருகனது ‘வேல்’ வெல்கிறது .. அதாவது எம்மைப்பீடித்துள்ள ஆணவம் .. கன்மம் .. மாயை என்ற மும்மலங்களில் இருந்து ‘வீடுபேறடைய’ .. ‘ஞானம்’ என்ற இறைசக்தி ஒன்றால் மட்டுமே முடியும் என்பதையே எமக்கு அறிவுறுத்துகின்றன ..

பார்வதிதேவி தந்த சக்திவேலாயுதம் மற்றும் சிவன் உருவாக்கித்தந்த வீரபாகு தலைமையிலான படையுடன் போர்புரிய முருகன் சென்றான் .. 5 நாள் போரில் சிங்கமுகன் .. தாரகாசுரன் அவன் மகன் அத்தனைபேரையும் பாலமுருகன் அழித்தான் .. 6ம்நாள் எஞ்சியவன் சூரபத்மன் மட்டும்தான் ..
சூரசம்ஹாரத்தில் சூரனை வதம் செய்ய போரிடும்போது சூரபத்மன் இந்தச் சிறுவனையா கொல்வது என எண்ணினான் .. இதையறிந்த கந்தன் ஒருநொடி தன் விஸ்வரூபத் தரிசனத்தைக் காட்டி மறைத்தான் .. அந்த ஒருநொடியில் ஆஹா இவன் தன் பேரனல்லவா ! என எண்ணும்போதே மறுநொடி மாயை அதை மறைத்துவிட .. மீண்டும் போர் செய்ய ஆரம்பித்தான் ..
சூரன் மாமரமாகி கடலில் தலைகீழாக நின்றான் .. (அந்த இடம் “மாம்பாடு” எனப்படுகிறது .. இதன்பின் இங்கு மாமரம் தழைப்பதில்லை) முருகன் அந்த மாமரத்தை தன் சக்தியாகிய வேலினால் இருகூறாகப் பிளக்கவும் .. சூரன் மனம் திருந்தி தன்னை மன்னிக்கும்படி வேண்ட ..
ஒருபகுதியை மயிலாகவும் .. அதனை தன் வாகனமாக்கி ..
மறுபகுதியை சேவலாக மாற்றி அதனை தன் கொடியாக ஏற்று சூரனுக்கு பெருவாழ்வு தந்தருளினார் ..
ஒருபகுதியை மயிலாகவும் .. அதனை தன் வாகனமாக்கி ..
மறுபகுதியை சேவலாக மாற்றி அதனை தன் கொடியாக ஏற்று சூரனுக்கு பெருவாழ்வு தந்தருளினார் ..
“ எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை அடியேன் எத்தனை செய்யினும்
பெற்றவன் நீ குரு பொறுப்பது உன் கடன்
பெற்றவள் குறமகள் பெற்றவளாமே !
பிள்ளை என்று அன்பாய் பிரியம் அளித்து “
என்று அன்னையாய் எமை மன்னித்து காத்தருள்பவனே கந்தப்பெருமான் !
அவனை உளமாறத் துதித்தால் அபயகரம் நீட்டி எம்மைக்காத்தருள்வான் !

“ ஓம் சரணம் சரணம் சரவணபவஓம் ! சரணம் சரணம் ஷண்முகா சரணம் “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
உச்சரித்துன் நாமம் நாளும்
நடத்துகிறேன் செயல்கள்
நித்தியமும் குரு பூஜை
நடத்தும் உந்தன் வரங்கள்
எச்சரிக்கை தந்து விடு -பிறர்
பொச்சரிப்பில் காவல் கொடு
சத்தியமும் நீயே உன்
தோளில் நீயும் ஏற்றிச் செல்லு
சுற்றி ஒரு பந்தலிட்டு -எனக்கு
காப்பாய் நீயே அமைந்து விடு
நடத்துகிறேன் செயல்கள்
நித்தியமும் குரு பூஜை
நடத்தும் உந்தன் வரங்கள்
எச்சரிக்கை தந்து விடு -பிறர்
பொச்சரிப்பில் காவல் கொடு
சத்தியமும் நீயே உன்
தோளில் நீயும் ஏற்றிச் செல்லு
சுற்றி ஒரு பந்தலிட்டு -எனக்கு
காப்பாய் நீயே அமைந்து விடு
No comments:
Post a Comment