PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMY SARANAM,,,GURUVE SARANAM


 வருவாய் அருவாய் உளதாய் இலதாய் 
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க் 
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க் 
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. எல்லாம் வல்ல முருகப்பெருமானுக்கு உகந்த கந்தசஷ்டி விரதம் 3ம்நாளாகிய இன்று கந்தனை உளமாறத் துதித்து குறைவற்ற பொருட்செல்வத்தைப் பெறுவீர்களாக !
ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹேஷ்வரபுத்ராய தீமஹி ! 
தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத் !!
உலகத்தின் புற இருளைப்போக்க நீலக்கடல்மீது சூரியன் உதிப்பது போல .. நம் அக இருளைப்போக்க மயில்வாகனன் நீலமயில்மீதமர்ந்து எமைக்காத்தருள்கின்றான் ..
பகைவனை வெல்வது சஷ்டிவிரதம் அல்ல .. பகைமையை மாற்றி ஞானம் பெறுவதே இந்த விரதத்தின் சிறப்பு .. சகல செல்வங்களையும் .. சுகபோகங்களையும் தரவல்ல இந்த விரதம் புத்திரலாபத்துக்குரிய சிறப்பான விரதமுமாகும் ..
” சட்டியிலே இருந்தால் அகப்பையில் வரும் “ என்பதற்கேற்ப .. கந்தசஷ்டியில் விரதமிருந்தால் அகப் பையாகிய கருப்பையில் கரூண்டாகும் என்பதும் .. கந்தசஷ்டி விரதத்தை முறையாகக் கைக்கொள்வதால் அகப்பை எனும் உள்ளத்தில் நல்ல எண்ணங்களும் .. பக்தி எனும் பாதையால் எழுந்த அமைதியும் அமையும் என்பதும் மறைபொருள்களாகும் ..
தினந்தோறும் கந்தசஷ்டி கவசத்தினைப் பாராயணம் செய்து முருகனின் பேரருளைப் பெற்று .. 
செய்யும் அனைத்து காரியங்களிலும் வெற்றி பெறுவீர்களாக ! 
“ ஓம் சரணம் சரணம் சரவணபவஓம் ! சரணம் சரணம் ஷண்முகா சரணம் “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
Image may contain: one or more people 



 

No comments:

Post a Comment