சுவாமியே சரணம் ஐயப்பா ! பன்வேல் பாலகரே சரணம் ஐயப்பா... குருவின் பாதாரவிந்தங்களே சரணம் ஐயப்பா!!!
கார்த்திகை மாதம் பிறந்து விட்டது. அகஸ்திய நட்சத்திரம் உதயமாகி தன் பாவன சக்தியால் நீர்நிலைகளை சுத்திபடுத்துகிறது.
சபரிகிரவாசன் ஐயப்பன் தினமும் சந்தியாவந்தனம் செய்து பூஜித்த பம்பா நதி அமிர்த நதியாக விளங்குகிறது.
இன்று முதல் அனைத்து பக்தர்களும் பிரம்மச்சார்ய விரதமிருந்து மண்டல தரிசனத்திற்கோ அல்லது பெருவழி பாதை வழியாக இருமுடி தாங்கி 18 படி ஏறி அய்யப்பனை நெய் அபிஷேகம் செய்து வழிபட விரதம் ஆரம்பிக்கும் ஆரம்பதினம் இன்று.
எரிமேலை என்ற முதல் கோட்டையில் வாபுரர் என்ற ருத்ர கணத்தை தரிசித்து பூஜித்து
சாகம்பரி எனும் துர்க்கா தேவியை காய்கனிகளால் பூஜித்து மலை யாத்ரை துடங்கி, காளைகட்டி எனும் கோட்டையில் நந்தி பகவானையும், உடும்பாறையில் வியாக்ரபாதரையும், கரிமலையில் சபரிதுர்க்கையையும், சபரிபீடத்தில் சபரிதுர்க்கையையும் பூஜித்து, வனவிலங்குகளுக்கு பலிகொடுத்துவிட்டு , சரங்கொத்தி ஆலில் அஸ்திர பைரவரரை வணங்கி கருடபர்யயபதம் எனப்படும் கருடமலையில், சபரிகிரி கோட்டையில் நுழையவேண்டும்.
வெறிக்கல் யக்ஷி, கறுப்பன் என்ற மாடன், செல்லப்பிள்ளை, பனைமூட்டுமாடன், பாதாள பூதம், வீரபத்ரர் போன்ற பரிவாரதேவதைகளையும் பூஜித்து 18 ஆம் படியில் உள்ள சக்திகளையும் பூஜித்து
ஆகாச பைரவர், சரபர், சூலினி, ப்ரத்யங்கராதேவி ஆகிய தெய்வ சக்திகளையும் பூஜித்து அய்யனை தரிசிக்கவேண்டும்.
கன்னி மூலை கணபதி பகவானையும் தரிசனம் செய்ய வேண்டும்
ஸ்கந்த புராணம் கோடிருத்ர ஸம்ஹிதையில் சிவபெருமான், ஸாஸ்தா அவதரித்தவுடன் அருளுகிறார் 'குழந்தாய் நானும் விஷ்ணுவும் ப்ரம்மாவும் உன் உருவாய் அவதரித்துள்ளோம்'
சபரிமலை ஆலயம் பரசுராமர் ப்ரதிஷ்டை என்பதல் பரசுராமரையும் முதலில் வணங்கிய பின்னரே ஆலயத்திற்குள் நுழையவேண்டும்
ப்ரம்ம க்ஷத்ராய க்ஷத்ரியாந்தகாய ப்ரேரக அஸ்மத் ஸித்தி பிரத பரசுராமாய நம என்று வணங்கி அவர் அருளையும் பெறவேண்டும்.
18 ஆம் படி வாசலில் ஓம் அங்கரக்ஷகாய மகா சாஸ்த்ரு பரிவாராய வாபுராய ஸ்வாகா என்ற மந்திரத்தல் வாபுரரை வணங்கவேண்டும்.
கறுப்புசாமி, கடுத்தசாமி, கொச்சுகடுத்தசாமி என்ற 18 ஆம் படி காவல் தெய்வங்களையும் பூஜித்து பின் 18 ஆம் படி ஏற வேண்டும். அய்யனை தரிசித்தபின், தவம் இருக்கும் மாளிகைப்புறத்தாளையும் தரிசித்து அருள் பெற வேண்டும்.
கிரந்தத்தில் 'அய்யப்ப மஹா மந்திர சக்கரத்தையும் பதிவிட்டுள்ளேன்.
சுவாமியே சரணம் அய்யப்பா
No comments:
Post a Comment