அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா ! நிகர் இல் புகழாய் உலகம் மூன்றுடையாய் என்னை ஆள்வானே !
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே ! புகல் ஒன்று இல்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே “
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே ! புகல் ஒன்று இல்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் பிறவித்துன்பத்தினை துடைக்கவல்ல பரந்தாமனை அருள்மழைபொழியும் ”வைகுண்ட ஏகாதசியாகிய “ இன்று துதித்து .. தங்கள் இல்லறம் சிறக்கவும் .. துன்பமற்ற நல்வாழ்வு அமைந்திடவும் ப்கவானைப் பிரார்த்திப்போமாக !
ஓம் தத்புருஷாய வித்மஹே !
வாசுதேவாய தீமஹி !
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !!
வாசுதேவாய தீமஹி !
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !!
மார்கழிமாதம் வந்த உடனே திருமாலின் உன்னத கருணையைப்போல் நம் மனதைக் குளிரவைக்க வரும் விரதம் “ வைகுண்ட ஏகாதசி “ விரதமாகும் .. உஷக்காலம் எனும் அதிகாலைப் பொழுது
4.00 மணிமுதல்6.00 மணி பிரம்ம முகூர்த்தத்தில் உள்ள கால அளவில் வைகுந்தவாசல் திறக்கப்படுகின்றது .. இறைவனைத் தொழும் ஜீவாத்மா வைகுண்ட வாசல் வழியாக பரமாத்மாவைப் போய்ச்சேருகிறது என்ற ஐதீகத்தின் அடிப்படையில் இந்த சொர்க்கவாசல் திறப்புவிழா நடைபெறுகிறது ..

வைகுண்ட ஏகாதசி அமைந்த புராணக்கதை ஒன்று -
ஒருசமயம் பிரளயத்தில் மூழ்கிய உலகத்தை மறுபடியும் உண்டாக்க விரும்பிய திருமால் நான்முகனைப் படைத்தார் .. அந்த நான்முகனை அழிக்க மது .. கைடபன் என்னும் இரண்டு அசுரர்கள் தோன்றினர் .. அவர்களைத் தடுத்த திருமாலையே அவர்கள் எதிர்த்தனர் .. அதனால் அவர்களை திருமால் அழித்தார் .. நல்லறிவு பெற்ற அவர்கள் திருமாலிடம்
“ நாங்கள் உம் அருளால் சித்தியடைந்து ஸ்ரீவைகுண்டத்தில் வாஸம் செய்யவேண்டும் “ என்று வேண்ட .. அவர்களின் வேண்டுகோளை ஏற்று மார்கழி சுக்லபக்ஷ் ஏகாதசியன்று விண்ணகத்தின் வடக்கு நுழைவாயிலைத் திறந்தார் .. அதன்வழியாக சத்யலோகத்திற்கு மேலுள்ள பரமபதத்திற்கு அனுப்பினார் ..

அப்போது அந்த அசுரர்கள் மார்கழி சுக்லபக்ஷ் ஏகாதசியன்று எங்களுக்கு அருளிய சுவர்க்க வாசல் திருநாளை பூவுலகில் சிறந்த திருவிழாவாக அனைவரும் அனுஷ்டிக்கவேண்டும் .. அன்று திருக்கோவில்களில் சுவர்க்கவாசல் வழியே எழுந்தருளும் அர்ச்சாவதாரப் பெருமாளை (விக்ரஹம்) தரிசிப்பவர்கள் அனைவரும் மோக்ஷ்ம் பெறவேண்டும் என்றும் வேண்டிக்கொண்டனர் .. அதன்படியே நடக்கும் எனத் திருமாலும் அசுரர்களுக்கு ஆசி வழங்கினார் ..
அந்த நன்னாளே வைகுண்ட ஏகாதசித் திருநாளாக திருமால் உறையும் திருத்தலங்களில் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது ...
அந்த நன்னாளே வைகுண்ட ஏகாதசித் திருநாளாக திருமால் உறையும் திருத்தலங்களில் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது ...
நாமும் வைகுண்ட ஏகாதசியில் நம்மிடம் உள்ள கர்வம் சிற்றின்பம் .. செயலற்ற தன்மை .. கட்டுக்கடந்தாத உணர்ச்சி ஆகியவற்றைத் துறந்து .. மனதினால் இறைவனிடம் நம்மை ஒப்படைப்புச் செய்வோமாக !
“ ஓம் நமோ நாராயணாய “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
“ ஓம் நமோ நாராயணாய “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
No comments:
Post a Comment