பொன்னார் மேனியனே ! புலித்தோலை அரைக்கசைத்து மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை அணிந்தவனே ! மன்னே மாமணியே !
மழ பாடியுள் மாணிக்கமே ! அன்னே உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே “
மழ பாடியுள் மாணிக்கமே ! அன்னே உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் “ திருவாதிரைத் திருநாள் “ நல்வாழ்த்துகளும் உரித்தாகுக .. திருவாதிரை நன்னாளில் அபிஷேகம் காண்பவரும் .. அழகிய உருவம் கொண்டவரும் .. சந்தனம் .. திரவிய அபிஷேகத்தால் மனம் மகிழ்பவரும் .. ஒருபாதத்தை மேலே தூக்கி நின்று ஆடுபவரும் .. அன்பர்களின் மனக்கவலைகளைப் போக்கி அருள்பவருமாகிய ஆடல்வல்லானைப் போற்றித் துதிப்போமாக !
ஓம் சித்ஸபேசாய வித்மஹே !
சிதாகாசாய தீமஹி !
தந்நோ சபேச ப்ரசோதயாத் !!
சிதாகாசாய தீமஹி !
தந்நோ சபேச ப்ரசோதயாத் !!
திருவாதிரை நட்சத்திரத்தின் அதிதேவதை ருத்ரனாகும் .. அதனால் இதற்கு மேலும் சிறப்பு ஓங்குகிறது .. திருவாதிரையை சமஸ்கிருதத்தில் “ஆருத்ரா” என்பார்கள் .. அதனால் சிவபிரானை ஆதிரை முதல்வன் என்றும் .. ஆதிரையான் என்னும் சிறப்புப் பெயர்களால் போற்றுகிறோம் !
படைத்தல் .. காத்தல் .. அருளல் .. மறைத்தல் .. அழித்தல் என்பவை சிவத்தின் ஐந்து வகையான தொழில்களாகும் .. பஞ்சகிருத்தியம் என்ற ஐந்தொழில்களையும் உணர்த்தும் வகையில் அமைந்தவைதான் ஈசனின் திருநடனங்களாகும் ..
மாயாமலத்தை ஓட்டி .. கன்ம மலத்தை சுட்டு ஆணவமலத்தை அதன் வலிகெடுமாறு அழுத்தி ஆன்மாக்களை அருளாலே மேலேதூக்கி ஆனந்தக்கடலிலே மூழ்கியிருக்கச் செய்வதே இறைவன் ஆடும் தாண்டவத்தின் கருத்தாகும் ..
பத்துநாட்கள் நோன்பான “திருவெம்பாவை” மார்கழித் திருவாதிரையுடனேயே முடிவுறுவது வழமையாகும்
இந்நாளில் ஆடல்வல்லானுக்கு திருமுழுக்காட்டுதல் இடம்பெறும் .. இதனை தரிசிப்பது மிகுந்த புண்ணியம் தரக்கூடிய ஒன்றாகக் கருதப்படுகிறது ..
இந்நாளில் ஆடல்வல்லானுக்கு திருமுழுக்காட்டுதல் இடம்பெறும் .. இதனை தரிசிப்பது மிகுந்த புண்ணியம் தரக்கூடிய ஒன்றாகக் கருதப்படுகிறது ..
இந்நன்னாளில் அவனே ! அவனே ! என்று கூறாமல் சிவனே ! சிவனே என்று வாழ்த்தி வணங்கி எல்லா நலமும் பெறுவோமாக ! “ ஓம் நமசிவாய “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
No comments:
Post a Comment