” குலந்தரும் செல்வம் தந்திடும் அடியார் படுதுயர் ஆயின எல்லாம் நிலந்தரம் செய்யும் நீள்விசும்பருளும் அருளொடு பெருநிலம் அளிக்கும்
வலந்தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினும் ஆயின செய்யும் நலந்தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன் “ நாராயணா “ எனும் நாமமே “
வலந்தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினும் ஆயின செய்யும் நலந்தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன் “ நாராயணா “ எனும் நாமமே “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளும் உரித்தாகுக .. எங்கும் நிறைந்திருக்கும் பாலகர் ஐயப்பன் தங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும் .. நிம்மதியும் மற்றும் தங்கள் குறிக்கோளில் வெற்றியும் தந்தருள்வாராக !
ஓம் தத்புருஷாய வித்மஹே !
பன்வேல் பாலகன் தீமஹி !
தந்நோ அய்யப்ப ப்ரசோதயாத் !!
பன்வேல் பாலகன் தீமஹி !
தந்நோ அய்யப்ப ப்ரசோதயாத் !!
இன்றைய தேய்பிறை ஏகாதசித் திதியை “ ஷட்திலா ஏகாதசி “ என்றழைப்பார்கள் .. இதனை அனுஷ்டிப்போருக்கும் .. விரத மஹாத்மியத்தின் உன்னதக் கதைகளை படிப்போரது மனதிற்கும் மிகவும் ஆனந்தத்தையும் .. மகிழ்ச்சியையும் அளிக்கும் ..
ஷட் என்பது - 6 என்றும்
திலம் என்பது - எள் என்றும் பொருள்படும் .. இப்படி 6 வகையான எள் பயன்பாடு ஷட்திலா என்று அழைக்கப்படுகிறது ..
திலம் என்பது - எள் என்றும் பொருள்படும் .. இப்படி 6 வகையான எள் பயன்பாடு ஷட்திலா என்று அழைக்கப்படுகிறது ..
1 - எள்ளை அரைத்து உடலில் பூசிக்கொள்வது
2 - எள் தானம் செய்வது
3 - எள்ளால் ஹோமம் செய்வது
4 - எள்ளுடன் நீரும் சேர்த்து தானம் செய்வது
5 - எள் அன்னம் உண்பது
6 - எள் நிரம்பிய நீர் ஸ்நானம் ..
இவ்விரதம் அனுஷ்டிப்பவரின் இல்லத்தில் என்றும் உணவுப் பஞ்சமே வராது என்று பவிஷ்யோத்ர புராணம் குறிப்பிடுகிறது .. நமக்கு சரீர சுத்தி .. ஆரோக்கியம் மட்டுமல்லாமல் அன்னம் .. எள் முதலியவற்றை தானம் செய்வதால் தனம் .. தான்யவிருத்தியும் கிட்டுகிறது ..நாம் இங்கு எந்த பொருட்களை தானம் செய்கிறோமோ அவையாவும் நமக்கு மேலுலகத்திலும் கிட்டுகிறது என்பது புலனாகிறது .. இதன் அர்த்தம் என்னவென்றால் -
தார்மீக கார்யங்களை அவற்றின் விதிப்படி செய்யும்பொழுது கூடவே தானங்களையும் அவசியம் செய்யவேண்டும் .. தான தர்மங்கள் இல்லாமல் எந்தவொரு தார்மீக கார்யங்களும் பூரணமடைவதில்லை என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன ..
பகவானைப் போற்றுவோம் அவரது அருட்கடாக்ஷ்த்தைப் பெறுவோமாக !
“ ஓம் நமோ பகவதே வாசுதேவாய நமஹ “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
“ ஓம் நமோ பகவதே வாசுதேவாய நமஹ “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
சென்ற 2018 வருடத்தில் சபரிமலையில் இரண்டு முறை அய்யப்பனை தரிசிக்கும் பாக்கியத்தினை நாம் பெற்றோம். குறிப்பாக 2018 மகர ஜோதி நம் மனதினை விட்டு அகலாது. சென்றமாதம் நமக்கு கிடைத்த தரிசனம் மிக மிக அற்புதமானது. ஆயிரம் பிரச்சனைகள் இடையில் நமக்கு மிக அருமையான தரிசனத்தை நம் குருசுவாமி செய்து வைத்தார்.
குருசுவாமி எர்ணாகுளத்தில் செப்பிய உரையை நினைவு கூர்வோம். இந்த வருடம் கணபதிக்கானது. அவரை நாளும் வணங்குவோம். குரு தினம் செய்யும் பூஜையில் நாம் கலந்து கொள்ள முடியவில்லை எனினும் அந்த பூஜையின் அய்யனை தினம் தரிசிக்கும் பாக்யத்தினை நமது குரு தந்துள்ளார். அதனை தினமும் தரிசித்து நமஸ்கரித்து குருவின் ஆசியை வாங்குவது நமக்கு பெரும் நன்மை அளிக்கக் கூடியது.
பன்வேல் பாலகனின் அருள் அனைவருக்கும் கிடைக்க பிரார்த்திக்கிறேன். அத்துடன் குரு ஆசி பரிபூர்ணமாய் அனைவரும் பெற வேண்டுகிறேன்.
No comments:
Post a Comment