” வருக குமரா அருகெனவே ! மகிழ்ந்தே இறைவன் கரமேந்த பெருகும் சக்தி மடியிருந்தே பெம்மான் சிவனின் கரம் தாவும் முருகா !
பரமன் மகிழ்ந்தணைக்கும் முத்தே !
இளமை வடிவுடைய ஒரு சேவகனே கந்தா !
நின் உபய மலர்த்தாள் தொழுகின்றோம் “
பரமன் மகிழ்ந்தணைக்கும் முத்தே !
இளமை வடிவுடைய ஒரு சேவகனே கந்தா !
நின் உபய மலர்த்தாள் தொழுகின்றோம் “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் சனிக்கிழமையும்.. சஷ்டித் திதியும் கூடிவரும் இந்நாளில் எம்துயர் துடைக்கும் கந்தவேலனைத் துதித்து வாழ்வில் ஏற்றத்தைக் காண்போமாக !
ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹேஷ்வர புத்ராய தீமஹி !
தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத் !!
மஹேஷ்வர புத்ராய தீமஹி !
தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத் !!
அறியாமை என்னும் அஞ்ஞான இருள் அகற்றி .. மெய்ஞானமாகி மிளிர்கின்ற பரம்பொருளின் முக்திப் பேரருளை அடைவதற்காக சைவப்பெருமக்களால் அனுஷ்டிக்கப்படும் விரதங்களுள் தலையாயது கந்தசஷ்டி விரதமாகும் ..
சஷ்டித் திதியாகிய இன்று கந்தசஷ்டி கவசம் .. கந்தகுருகவசம் .. ஷண்முக கவசம் முதலான கவச நூல்களைப் பாராயணம் செய்வது சிறப்பாகும் ..
” வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா “ என்றால் -
வெற்றிவேலைக் கொண்ட முருகனே ! எங்கள் வாழ்வில் இருக்கும் துன்பங்களைப் போக்கி நற்கதியை அருள்வாயாக ! என்று உரிமையோடு முறையிடுவதாகும் ..
வெற்றிவேலைக் கொண்ட முருகனே ! எங்கள் வாழ்வில் இருக்கும் துன்பங்களைப் போக்கி நற்கதியை அருள்வாயாக ! என்று உரிமையோடு முறையிடுவதாகும் ..
முருகனே முழுமுதல் இறைவன் என்ற நம்பிக்கையைக் கொண்டவர்கள் இனி ..
“ வெற்றிவேல் இறைவனுக்கு அரோஹரா “ என்று உற்சாகமாகச் சொல்லலாமே !
“ ஓம் சரவணபவாய நமஹ “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
“ வெற்றிவேல் இறைவனுக்கு அரோஹரா “ என்று உற்சாகமாகச் சொல்லலாமே !
“ ஓம் சரவணபவாய நமஹ “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
No comments:
Post a Comment