சுகத்தைக் கொடுக்கும் சூரியா போற்றி !
செல்வம் வழங்கும் செங்கதிர் போற்றி !
நலங்களை வழங்கும் ஞாயிறு போற்றி !
நவகிரகத்தின் நாயகா போற்றி “
செல்வம் வழங்கும் செங்கதிர் போற்றி !
நலங்களை வழங்கும் ஞாயிறு போற்றி !
நவகிரகத்தின் நாயகா போற்றி “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் .. “ இனிய தைப்பொங்கல் “ நல்வாழ்த்துகளும் உரித்தாகுக ! தைமாதம் முதல் நாளாகிய இன்று தங்கள் உள்ளங்களில் உவகை பொங்க .. இல்லங்களில் இனிய பொங்கல் பொங்கிட .. தைபிறந்ததால் நல்வழியும் பிறந்திட .. எல்லாம் வல்ல இறைவனையும் .. சூரியபகவானையும் பிரார்த்திப்போமாக !
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே !
பாஸஹஸ்தாய தீமஹி !
தந்நோ சூர்ய ப்ரசோதயாத் !!
பாஸஹஸ்தாய தீமஹி !
தந்நோ சூர்ய ப்ரசோதயாத் !!
தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் என்று அழைக்கப்படும் “ பொங்கல் பண்டிகை ” தைத் திங்கள் முதல்நாள் கொண்டாடப்படுகிறது .. இதனை மகரசங்கராந்தி என்றும் அழைப்பர் .. கோடைக்காலம் தரும் சூரியனின் வடதிசைப் பயணம் அதாவது உத்தராயணம் தேவர்களின் பகல்பொழுது .. அதன் தொடக்கம் இந்த மகரசங்கராந்தி என்பதால் புலரும் சூரியனை இன்று வணங்குவது மிகவும் புண்ணியம் தரக்கூடியது ..
மற்ற தெய்வங்களை நாம் சிலைவடிவிலேயே பார்க்கின்றோம் .. ஆனால் சூரியபகவானை கண்கண்டதெய்வமாக தினமும் நம் கண்முன் தெரிகிறார் .. “ அதிகாலையில் சூரியபகவானைப் பார்க்காத கண்கள் வீணே “ என்கின்றனர் மகான்கள் ..
உழவர்கள் நெல் அறுவடை செய்து மகிழ்ந்திருக்கும் வேளையில் .. விவசாயத்திற்கு துணைபுரிந்த சூரியன் .. பணியாட்கள் .. மற்றும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதத்தில் அமைந்த விழா பொங்கல்விழா !
“ தைபிறந்தால் வழிபிறக்கும் “ என்ற கூற்றுக்கிணங்க தங்களனைவர் வாழ்விலும் நல்வழி பிறக்க சூரியபகவானைப் போற்றுவோம் !
“ ஓம் சூர்யாய நமஹ “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும்
“ ஓம் சூர்யாய நமஹ “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும்
No comments:
Post a Comment