” கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி
நில்லாப் பிழையும் நினையாப்பிழையும்
ஐந்தெழுத்தைச் சொல்லாப்பிழையும் துதியாய்ப்பிழையும் எல்லாப்பிழையும் பொருத்தருள் கச்சி ஏகம்பனே “
நில்லாப் பிழையும் நினையாப்பிழையும்
ஐந்தெழுத்தைச் சொல்லாப்பிழையும் துதியாய்ப்பிழையும் எல்லாப்பிழையும் பொருத்தருள் கச்சி ஏகம்பனே “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் .. “ மஹா சிவராத்திரி “ நல்வாழ்த்துகளும் உரித்தாகுக ! சோமவாரத்தில் சிவராத்திரியும் கூடிவருவது மிகவும் சிறப்பே !
“ மாதமோ மாசி ! இதில் மகாதேவனைப் பூசி !
திருமுறைகளை வாசி !
கிடைக்கும் அவன் நல்லாசி “
இன்றையநாள் தங்களனைவருக்கும் ஓர் பக்திப்பூர்வமான நன்னாளாக அமைந்திட எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போமாக !
“ மாதமோ மாசி ! இதில் மகாதேவனைப் பூசி !
திருமுறைகளை வாசி !
கிடைக்கும் அவன் நல்லாசி “
இன்றையநாள் தங்களனைவருக்கும் ஓர் பக்திப்பூர்வமான நன்னாளாக அமைந்திட எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போமாக !
ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹாதேவாய தீமஹி !
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !!
மஹாதேவாய தீமஹி !
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !!
மாசிமாதம் வரும் தேய்பிறை சதுர்த்தசி நாளே ”மகாசிவராத்திரி ” சர்வ மங்களங்களையும் அருளும் அற்புதமான திருநாள் இது .. இந்நாளில் இரவு முழுவதும் கண்விழித்து .. சிவாலயங்களில் நடைபெறும் நான்குகால பூஜைகளில் கலந்துகொண்டு சிவவழிபாடு செய்ய அனைத்து நற்பலன்களும் வந்துசேரும் ! மாதாந்திர சிவராத்திரி நாட்களில் இந்த விரதத்தை மேற்கொள்ள முடியாதவர்கள்
மஹா சிவராத்திரியன்று வழிபட்டால் ஆண்டுதோறும் சிவபெருமானை வழிபட்ட புண்ணிய பலன் கிட்டும் ..
மஹா சிவராத்திரியன்று வழிபட்டால் ஆண்டுதோறும் சிவபெருமானை வழிபட்ட புண்ணிய பலன் கிட்டும் ..
சிவராத்திரி இம்முறை திங்கட்கிழமையில் அமைவது மிகவும் விசேஷம் .. இதனை “லோகசிவராத்திரி” என்பர் .. சிவராத்திரி என்பது ஒருவருடத்திற்கு ஒருமுறையேனும் ஆணவத்தினால் ஏற்படும் நம் அறியாமையை எண்ணிப் பார்க்கின்ற ஒருநாளாய் அமைகின்றது .. ஆணவத்தினால் நாம் செய்கின்ற அன்பில்லாச் செயல்களையும் .. வார்த்தைகளையும் .. எண்ணங்களையும் எண்ணிப்பார்த்து அவற்றைச் சரிப்படுத்துவதற்குரிய வழிவகைகளை ஆராயும் ஒருநாளாகவும் இந்நாள் அமையட்டும் ..
இறைவனை வழிபட்டு அவர் திருவருளை வேண்டி நின்று கண்விழிப்பதோடு மட்டுமல்லாமல் நம் உயிரினை விழிப்படையச் செய்யும் நாளாகவும் விளங்குகின்றது .. இவ்வளவு சிறப்புகளையும் உண்மைகளையும் உணர்த்தும் சிவராத்திரியை ஏற்றமுறையில் உணர்ந்து அனுசரிப்பது அவசியம் ..
பிரம்மனுக்கும் விஷ்ணுவுக்கும் தங்களில் யார் பெரியவர் என்று அகந்தை ஏற்பட்டபோது சிவபெருமான் தனது அடிமுடிகாண அவ்விருவருக்கும் கட்டளை இட்டார் .. ஆனால் அவர்களால் அதனைக் காணமுடியாமல் தோல்வியுறவே . அவர்களது அகந்தை அழிந்தது .. ஈசனும் நெருப்பு உருவமாய் அவர்களுக்கு காட்சியளித்து “ திருவண்ணாமலையாக “ மாறிய நாள்
“ சிவராத்திரி “
“ சிவராத்திரி “
இன்று ஈசனை சிவலிங்கத் திருமேனியனாகத் தரிசித்து .. தீங்கு இல்லா வாழ்வினைப் பெறுவோமாக!
“ ஓம் நமசிவாய “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
“ ஓம் நமசிவாய “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
No comments:
Post a Comment