PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

உடுப்பி கிருஷ்ணரை ஜன்னல் வழியே ஆனந்த தரிசனம்

உடுப்பி கிருஷ்ணரை ஜன்னல் வழியே ஆனந்த தரிசனம்
ஏன்? ஜன்னல் வழியே!.... விளக்கம் இதோ!...
கன்னட பக்தர் கனகதாசர் ஒரு முறை பெருமாளை தரிசிக்க உடுப்பி வந்த போது பிராமணர்கள் மட்டுமே கோயிலுக்குள் செல்ல அனுமதி என்ற காரணத்தால் அவர் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
எனவே கிருஷ்ணனை சிறிய துவாரத்தின் மூலம் காண முயன்றார், ஆனால் அவருக்கு கிருஷ்ணனின் பின் பக்கம் தான் தெரிந்தது. மனமுருகிப் பாட ஆரம்பிக்க, கிருஷ்ணர் முகத்தை துவாரத்தை நோக்கி திருப்பினார். இதுவே இன்று 'கனகணகிண்டி' என்றழைக்கப்படுகிறது.
இன்று நாமும் இந்த குட்டி கிருஷ்ணனை அந்த ஜன்னல் வழியாக தான் பார்க்க வேண்டும். எல்லா கோயில்களிலும் பெருமாளின் முகம் கோயிலின் வாசற்பக்கம் நோக்கியிருக்கும் ஆனால் உடுப்பியில் இது மாறி இருப்பதற்கு இதுவே காரணம்.
கோயில் குளத்துக்கு பக்கம் விறகுகளை தேர் போல அடுக்கி வைத்திருக்கிறார்கள்.....
ரொம்ப அழகாக இருக்கு ....ஆன இதை பற்றிய காரணம் தெரியவில்லை ..
Image may contain: 1 person, outdoor
Image may contain: sky, outdoor and water
Image may contain: 1 person

No comments:

Post a Comment