தேடுவாய் உலகத்தையாளும் தேவனின் ஒளிமயமான ஒளி உருவை ! பாடுவாய் ஹரிநாமம் ஓதுவாய் கண்ணனின் கீதை ! இடைவிடா பாவனையால் நல்லோர்மட்டிலே மனதை நிறுத்து ! செல்வம் உண்டேல் ஏழைக்குதவு ! புலனும் மனமும் ஒழுங்குபட்டாலே காண்பாய் உள்ளத்தினுள்ளேயே “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் ஐப்பசிமாத 4ம் வெள்ளியில் வீட்டின் தரித்திர நிலையை மாற்றி சுபீட்சம் தந்தருளும் விஷ்ணுபகவானுக்கு உகந்த “ தேவ உத்தான “ ஏகாதசித் திதியில் பகவானை வழிபடுவது மென்மேலும் மேன்மையத் தந்தருளும் ..
ஓம் நாராயணாய வித்மஹே !
வாசுதேவாய தீமஹி !
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !!
வாசுதேவாய தீமஹி !
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !!
இன்றைய சுக்லபட்ச ஏகாதசித் திதியை (வளர்பிறை) தேவோத்தானி .. ஹரிபோதினி .. உத்தான ஏகாதசி என்னும் பெயர்களாலும் அழைப்பார்கள் .. உத்தான ஏகாதசியில் விரதமிருந்து மஹாவிஷ்ணுவை வழிபடுவோர்கள் மகத்தான பலன்களைப் பெற்று மகோன்னதமாக வாழ்வார்கள் என்பது ஐதீகம் !
உத்தான ஏகாதசியில் கூடுமானவரை விரதத்தை முறையாக அனுஷ்டிப்பது உத்தமம் .. இயலாதவர்கள் வயதானவர்கள் பால் .. பழம் .. மிதமான உணவுகள் எடுத்துக்கொள்ளலாம் .. மாலையில் அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று துளசிமாலை சார்த்தி வழிபடுங்கள் எல்லா சத்விஷயங்களும் உங்களைத் தேடிவரும் ..
இன்றைய தினத்தில் யாரொருவர் பக்தி சிரத்தையுடன் சிறிதளவேனும் புண்ணியம் செய்வார்களேயானால் அது மலையளவுக்கு ஈடாகிறது ..
“ ஓம் நமோ பகவதே வாசுதேவாய நமஹ “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
No comments:
Post a Comment