விளக்கே திருவிளக்கே ! வேந்தன் உடன்பிறப்பே ஜோதிமணிவிளக்கே ! சீதேவி பொன்மணியே ! அந்தி விளக்கே அலங்காரநாயகியே ! காந்தி விளக்கே ! காமாட்சித்தாயாரே ! பசும்பொன் விளக்கு வைத்துப் பஞ்சுத்திரிபோட்டு கோலமுடன் ஏற்றிவைத்தோம் அன்னையே ! உந்தன் மலரடியில் நாம் பணிந்தோம் வந்தவினை அகற்றி மகாபாக்கியம் தாரும் அம்மா “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் இருள்போக்கும் கார்த்திகஒ மாதத்தில் நம் மன இருளைப்போக்கி ஒளிமயமான எதிர்காலத்திற்கு நம் இல்லத்திலும் .. ஆலயத்திலும் தீபமேற்றி தீபஜோதியை பிரார்த்திப்போமாக ! தங்களனைவருக்கும் வளமோடு நல்வாழ்க்கையினை தந்தருள்வாளாக !
தீபலக்ஷ்மி துதி -
தீபோ ஜோதி பரப் ப்ரம்ஹ
தீபோ ஜோதி ஜனார்த்தன
தீபோ ஹ்ரது மே பாபம் ஸந்த்யா
தீபோ நமோஸ்துதே !!
தீபோ ஜோதி பரப் ப்ரம்ஹ
தீபோ ஜோதி ஜனார்த்தன
தீபோ ஹ்ரது மே பாபம் ஸந்த்யா
தீபோ நமோஸ்துதே !!
பொருள் - ஜோதிவடிவான தீபமே பிரம்மா ! அதுவே விஷ்ணு .. ஈசனும் அதுவே ! காலை மாலை இருவேளையும் எவர் வீட்டில் விளக்கு ஏற்றப்படுகிறதோ அந்த வீட்டில் உள்ளவர்களின் பாவங்கள் நீங்குகின்றன .. அப்படிப்பட்ட அருள் நிரம்பிய தீபலக்ஷ்மியை வணங்குகின்றோம் !!
” ஸுவர்ண வ்ருத்திம் குருமே குஹே ஸ்ரீ ஸுதானய வ்ருத்திம் குருமே க்ரு ஹே ஸ்ரீ கல்யாண வ்ருத்திம் குருமே க்ருஹே ஸ்ரீ ”
பொருள் - தினமும் தீபம் ஏற்றப்படும் இல்லத்தில் பொன் .. பொருள் சேரும் .. தானியங்கள் குறைவிலாது பெருகும் .. அன்னப்பஞ்சம் இருக்காது எல்லா மங்களகாரியங்களும் தடைநீங்கிச் சிறப்பாக நடைபெறும் .. சகல செல்வங்களும் வந்துசேரும் ..
(விபூதி - என்பதற்கு ஐஸ்வர்யம் என்ற அர்த்தமும் உண்டு ) வீட்டில் திருமகள் நீங்காது இருப்பாள் ..
(விபூதி - என்பதற்கு ஐஸ்வர்யம் என்ற அர்த்தமும் உண்டு ) வீட்டில் திருமகள் நீங்காது இருப்பாள் ..
கார்த்திகை மாதம் முழுவதும் தினமும் காலை மாலையில் வீடுகளிலும் .. ஆலயங்களிலும் விளக்கேற்றி வழிபடுவது அக்னியின் வாயிலாக ஆண்டவனுக்கு அவிர்பாகம் அளிக்கும் பெரும் யாகத்திற்கு நிகரான பலன் தரக்கூடியது ..
விளக்கேற்றும் நேரம் -
” ஊருக்குமுன் விளக்கேற்றினால் உயர்ந்த குடியாகும்” என்று ஒருபழமொழியே உள்ளது ..
” ஊருக்குமுன் விளக்கேற்றினால் உயர்ந்த குடியாகும்” என்று ஒருபழமொழியே உள்ளது ..
சூரியோதயத்திற்கு முன்னதான பிரம்மமுகூர்த்தவேளையில் (அதிகாலை 4.30 - 6.00) விளக்கேற்றினால் பெரும் புண்ணியம் கிட்டும் .. முன்வினைப்பாவம் நீங்கும் ..
மாலை 4.30 - 6.00 மணிக்கு இடையே உள்ள பிரதோஷவேளை சிவபெருமானுக்கும் நரசிம்மமூர்த்திக்கும் மிகவும் உகந்தவை .. இவ்வேளையில் தீபமேற்றினால் திருமணத்தடை .. கல்வித்தடை நீங்கும் ..
தீபத்தின் சுடரில் - மஹாலக்ஷ்மியும் ..
ஒளியில் - சரஸ்வதியும்
வெப்பத்தில் - பார்வதிதேவியும் எழுந்தருள்வதாக ஐதீகம் .. எனவே வடக்கு .. கிழக்கு .. மேற்கு நோக்கி தீபம் ஏற்றி இறைவழிபாடு செய்வதன்மூலம் முப்பெரும் தேவியரின் த்ருவருளையும் ஒருங்கே பெறலாம் ..
ஒளியில் - சரஸ்வதியும்
வெப்பத்தில் - பார்வதிதேவியும் எழுந்தருள்வதாக ஐதீகம் .. எனவே வடக்கு .. கிழக்கு .. மேற்கு நோக்கி தீபம் ஏற்றி இறைவழிபாடு செய்வதன்மூலம் முப்பெரும் தேவியரின் த்ருவருளையும் ஒருங்கே பெறலாம் ..
நம் இல்லத்திலும் திருவிளக்கேற்றுவோம் ! தீபம்போல் தங்கள் வாழ்வும் சிறப்பாக பிரகாசிக்கும் .. என்றும் தீபலக்ஷ்மி காத்தருள்வாளாக !
“ ஓம் ஸ்ரீதீபலக்ஷ்மியே போற்றி ! போற்றி “
No comments:
Post a Comment