மேலானவற்றுக்கெல்லாம் மேலானவன் அரியதற்கும் மேலாக அரிதானவன் மிகுந்த சக்தி உள்ளவன் நிரந்தரமானவன் எவராலும் பக்தியால் அடையக்கூடியவன் ஒப்பற்றவன் முன்னைக்கும் முந்தையவன் ஒளிமயமானவன் ஞானிகளுக்கெல்லாம் முதன்மையான பரமஞானஸ்வரூபமான விஷ்ணுபகவானை நமஸ்கரிக்கின்றோம் “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. மங்களகரமான வெள்ளிக்கிழமையில் விஷ்ணுபகவானுக்கு உகந்த “ உத்பன்ன ஏகாதசி “ விரதமும் சேர்ந்து வருவது மேலும் சிறப்பைத் தருகின்றது .. பாபங்கள் அனைத்தும் அகன்று நல்வாழ்க்கை தேடிவர பகவானைப் பிரார்த்திப்போமாக !
ஓம் நாராயணாய வித்மஹே !
வாசுதேவாய தீமஹி !
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !!
இன்றைய ஏகாதசித் திதியை “ உத்பன்ன ஏகாதசி “ என்றும் .. “ உற்பத்தி ஏகாதசி “ என்றும் அழைப்பார்கள் .. இதுவே உலகில் தோன்றிய முதல் ஏகாதசி எனப் பெருமை பெறுகின்றது ..
புராணவரலாறு -
சத்யயுகத்தில் .. சந்திராவதி எனும் நகரத்தை தலைநகரமாகக் கொண்டு முரண் என்றொரு மகா பயங்கரமான ராட்சஸன் வாழ்ந்து வந்தான் .. இந்திரன் முதலிய தேவர்களை வென்று இந்திரப்பதவியை பறித்துக்கொண்டு தேவர்களை சுவர்க்கத்தைவிட்டு விரட்டியடித்து மக்களை மிகவும் துன்புறுத்தி வந்தான் ..
அவனது கொடுமைகளைத் தாங்கமுடியாத தேவர்கள் அனைவரும் பூமியில் மறைந்து வாழ்ந்து வந்தனர் .. பின்னர் இன்னும் எவ்வளவு காலம்தான் இவ்வாறு ஒளிந்து வாழ்வது இதற்கொரு முடிவுவேண்டி தங்களைக்காக்கும்படி அனைவரும் மகாதேவரை சரணடைந்தனர் ..
சிவபெருமானின் ஆணைப்படி தேவர்கள் விஷ்ணுபகவானிடம் முறையிட பகவானும் பல ஆண்டுகள்வரை போர்புரிந்தும் அரக்கனை வெல்ல இயலாமல் சோர்ந்து போகவே ஓய்வெடுக்கவேண்டி பத்ரிகாஸ்ரமத்தில் ஹேமவதி என்னும் பெயர்கொண்ட குகையில் சயனத்தில் ஆழ்ந்தார் ..
அச்சமயம் அக்குகைக்குள் நுழைந்த ராட்சஸன் விஷ்ணுபகவானைக் கொல்ல எத்தணிக்கையில் பகவானின் உடம்பிலிருந்து திவ்யவஸ்திரங்களுடன் சகல ஆயுதங்களோடும் ஒரு மங்கை தோன்றி அரக்கனை அழித்தாள் .. பகவானும் சயனத்திலிருந்து எழுந்து அனைத்தும் அறிந்து அரக்கனை வதைத்ததால் மூவுலகிலும் உள்ள தேவர்களுக்கு மகிழ்ச்சியையும் .. அவர்கள் இழந்ததையும் மீட்டு தந்தமைக்கும் “ ஏகாதசியில் பிறந்தாதாலும் “ ஏகாதசி “ என்றே அப்பெண்ணுக்கு பெயர்சூட்டி வாழ்த்தியருளினார்
மேலும் பகவானின் அங்கத்திலிருந்து தோன்றியதால் (உத்பன்னம்) புவியில் இனி “உத்பன்ன ஏகாதசி “ என்னும் பெயரால் அறியப்பெறுவாய் .. எவர் ஒருவர் இதனை அனுஷ்டிக்கின்றாரோ அவர் சகல பாபங்களும் அகன்று முடிவில் முக்தியைப் பெறுவார் .. என்று திருவாய் மலர்ந்தருளினார் ..
எவரொருவர் இந்நாளைப்பற்றி கேட்டோ படித்தோவரின் அவரும் இறுதியில் விஷ்ணுலோகத்தைச் சென்றடைவார் என்று பவிஷ்யோத்ர புராணம் விவரிக்கின்றது ..
“ ஓம் நமோ பகவதே வாசுதேவாய நமஹ “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .
No comments:
Post a Comment