அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் ! அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே “ (திருமூலர்)
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. கார்த்திகை மாதத்தில் வரும் பிரதோஷத்தில் எம்பெருமானை வழிபடுவது சாலச்சிறந்தது .. அனைத்து தோஷங்களும் நீங்கி .. சந்தோஷம் ஒன்றே தங்கள் வாழ்வில் என்றும் நிறைந்திட எல்லாம் வல்ல ஈசனைப் பிரார்த்திப்போமாக !
ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹாதேவாய தீமஹி !
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !!
பொதுவாக பிரதோஷ தினத்தில் சிவனை அனைவரும் வணங்குகின்றனர் .. இதில் “அனைவரும் “ என்பது மனிதர்களை மட்டும் குறிப்பிடவில்லை .. முப்பத்து முக்கோடி தேவர்களும் .. பிரம்மா .. விஷ்ணு ஆகியோரையும் குறிக்கும் .. அந்தநேரத்தில் சிவனும் ஷேமநலத்திற்காக வழிபாட்டில் ஈடுபடுவார் என்பது ஐதீகம் !
எனவே அனைத்து தரப்பினரும் வழிபாடு செய்யும் நேரத்தில் நாமும் பிரார்த்தனை செய்தால் இதயம் கனிந்து ஈசன் நமக்கு அதிகமான நலன்களை நல்குவார் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன ..
பிரதோஷபூஜை மேற்கொள்ளும்போது அறிவு வளரும் .. எவ்வளவு பெரிய தோஷமாக இருந்தாலும் பிரதோஷ காலத்தில் (மாலை 4.30 - 6.00 ) “ ஓம் நமசிவாய “ எனச்சொல்லி நம் சிறுமனதை சிதறாமல் கட்டி .. சிவனருளே எல்லாமென சிந்தையில் வைத்து .. சிவனே உன் அருளுக்காக தவமிருப்போம் ! சிவ சிவா ! நம்முள்ளே வந்தெம்மை கலந்தருள்வாயாக ! என நந்தீஸ்வரரின் இருகொம்புகளுக்கூடாக சிவனுக்கு நடக்கும் அபிஷேகத்தைக் கண்ணாரக் கண்டு வேண்டிக்கொண்டால் .. அனைத்து பாவவினைகள் களையப்பெற்று .. புத்துணர்வும் மனநிம்மதியும் பெறுவீர்கள் !
“ஓம் நமசிவாய ! ஓம் ஸ்ரீ நந்தீஸ்வரராய நமஹ “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
No comments:
Post a Comment