கண்டோம் கண்டோம் கணுக்கினியன கண்டோம் ! தொண்டீர் எல்லீரும் வாரீர் தொழுது தொழுது நின்றார்த்தும் வண்டார் தண்ணந் துழாயான் மாதவன் பூதங்கள் மண்மேல் பண் தான்பாடி நின்றாடிப் பரந்து திரிகின்றனவே “ (திவ்ய ப்ரபாந்தம்)
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. கார்த்திகைமாத புதன்கிழமையாகிய இன்று ஈரேழு உலகங்களையும் காத்தருளும் ஸ்ரீமஹாவிஷ்ணுவைத் துதித்து தங்களனைவரது வேண்டுதல்கள் யாவும் வேண்டியபடியே நிறைவேறிடவும் .. மாணவர்கள் கல்வி வேள்விகளில் சிறந்து விளங்கிடவும் பகவானைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் நாராயணாய வித்மஹே !
வாசுதேவாய தீமஹி !
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !!
கார்த்திகை மாதம் முழுவதும் துளசித் தளங்களால் மஹாவிஷ்ணுவை அர்ச்சித்து வழிபட்டு வந்தால் ஒவ்வொரு துளசித் தளத்துக்கும் ஒவ்வொரு அச்வமேதயாகம் செய்தபலன் உண்டு என்பர் .. துளசிமாலை அணிபவர்களிடம் அன்னை மஹாலக்ஷ்மி எப்போதும் வாஸம் செய்வாள் என்று சாஸ்திரம் அறிவுறுத்துகிறது ..
பக்தியுடன் துளசியை பூஜை செய்வதால் மனமகிழ்ச்சி .. ஒற்றுமை .. குடும்பத்தில் அமைதி லக்ஷ்மிகடாக்ஷ்ம் .. வம்சம் தழைக்கும் .. உடல்வலிமை .. மனோதைர்யம் உண்டாகும் .. நீண்ட ஆயுள் .. ஆரோக்யம் கிட்டும் ..
துளசி காயத்ரி -
ஓம் ஸ்ரீத்ரிபுராய வித்மஹே !
துளஸீபத்ராய தீமஹி !
தந்நஸ் துளஸீ ப்ரசோதயாத் !!
கீழ்கண்ட நாமாவளிகளைக் கூறி குங்குமத்தால் அர்ச்சனை செய்யவேண்டும் ..
ஓம் ஸ்ரீம் பிருந்தா தேவ்யை நமஹ !
ஓம் விஸ்வ பூஜிதாயை நமஹ !
ஓம் விஷ்ணுப்ரியாயை நமஹ !
ஓம் தேவ மூலிகாயை நமஹ !
ஓம் கிருஷ்ண ப்ரியாய நமஹ !
ஓம் சவுபாக்ய நிலயாயை நமஹ !
ஓம் விஷ்ணு கேசின்யை நமஹ !
ஓம் புஷ்ப சாராயை நமஹ !
ஓம் நந்தவன நாயகாயை நமஹ !
ஓம் விஸ்வ பாவணாயை நமஹ !
ஓம் யாகபூஜிதாயை நமஹ !
ஓம் தானப்ராயின்யை நமஹ !
ஓம் மஹாலக்ஷ்மி வாசாயை நமஹ !
ஓம் சகலமாட கலாலங்கார்யை நமஹ !
ஓம் ஸ்ரீராமப்ரியாயை நமஹ !
ஸ்ரீ துளசி தேவ்யை நமோநமஹ !!
பக்தியுடன் துளசிபூஜை செய்து வழிபடுவதால் மேலான பலன்கள் கைகூடும் .. சர்வமங்களங்களும் ஸித்திக்கும் !
“ ஓம் நமோ நாராயணாய ! ஓம் ஸ்ரீதுளசிதேவியே நமஹ “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
No comments:
Post a Comment