” வடங்கெழுமலை மத்தாக வானவர் அசுரரொடு கடைந்த பொழுதெழுந்த நஞ்சங்கண்டு பல்தேவரஞ்சி அடைந்து நும் சரணமென்ன அருள் பெரிதுடையராகி தடங்கடல் நஞ்சமுண்டார் சாய்க்காடு மேவினாரே “ (திருநாவுக்கரசர்)
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் சிவபெருமானுக்கு உகந்த விரதங்களில் மிக முக்கியமானது பிரதோஷ விரதமாகும் .. அதிலும் சனிக்கிழமையன்று திரயோதசித் திதியும் கூடிவரும் இந்நாளே ‘ சனி மஹா பிரதோஷமாகும் “ உன்னதமான இந்நாளில் சர்வபாபவிமோசனம் பெற்று சகலநலன்களும் பெற்றுய்வீர்களாக !
ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹாதேவாய தீமஹி !
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !!
மஹாதேவாய தீமஹி !
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !!
சாதாரண பிரதோஷவேளையில் சிவாலயம் சென்று வழிபட்டால் 1 வருடம் ஆலயம் சென்று இறைவழிபாடு செய்த பலனும் .. சனிமஹா பிரதோஷத்தன்று அவ்வாறு வழிபடும்போது 5 வருடம் ஆலயவழிபாடு செய்த பலனும் கிடைக்கும் என்பது நம்பிக்கை ..
சித்திரை .. வைகாசி .. ஐப்பசி .. கார்த்திகை மாதங்களில் வரக்கூடிய சனிபிரதோஷங்கள் “சனிமஹாபிரதோஷங்கள் “ என்று அழைக்கப்படுகின்றன .. இன்று சனிமஹாபிரதோஷநாளில் சிவதரிசனம் செய்வது மிகுந்த நற்பலன்களைத் தரும் .. வறுமை விலகும் .. நோய்கள் நீங்கும் .. சகலகாரியங்களிலும் வெற்றி நிச்சயம் கிட்டும் .. சகலசௌபாக்கியங்களையும் தரக்கூடியது “சனிமஹாபிரதோஷ வழிபாடு “
இதனை “ சர்வபாபவிமோசனம் “ என்றும் அழைப்பார்கள் .. சனிக்கிழமையன்று வருகிற பிரதோஷத்தில் கலந்துகொண்டு சிவனாருக்கும் நந்திதேவருக்கும் நடைபெறும் பூஜையைக் கண்ணாரக்கண்டு தரிசித்தால் சகலபாபங்களும் விலகும் .. புண்ணியங்களும் அதன்பலாபலன்களும் பெருகும் என்று முன்னோர்கள் தெரிவித்துள்ளனர் ..
பிரதோஷ பூஜை மேற்கொள்ளும்போது அறிவு வளரும் .. நினைவாற்றல் பெருகும் .. எந்த பெரிய தோஷமென்றாலும் ஈசனை வழிபட நீங்குகிறது .. ஆகவே இன்று மாலைவேளையில் 4.30 - 6.00 மணிவரையிலான பிரதோஷவேளையில் சிவாலயங்களில் நடைபெறும் பிரதோஷ வழிபாடுகளில் கலந்துகொண்டு புண்ணியம் பெறுவீர்களாக !
“ ஓம் நமசிவாய “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .
No comments:
Post a Comment