"அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் ஐப்பசி பௌர்ணமித் திதியாகிய இன்று கல்லுக்குள்ள தேரைக்கும் .. கருப்பைக்குள்ள உயிர்க்கும் உள்ளுணர்வைத் தருபவன் தயாபரன் சிவனே ! அந்த லிங்கத்திருமேனிக்கு அண்ண்டு தோறும் இந்நாளில் அன்னாபிஷேகம் அனைத்து சிவாலயங்களிலும் நடைபெறும் .. தங்களனைவரும் சிவாலயம் சென்று சிவதரிசனம் செய்து கோடி சிவதரிசனம் செய்த பலனையும் .. நீண்டாயுளும் நினைத்தகாரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்களாக !
ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹாதேவாய தீமஹி !
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !!
மஹாதேவாய தீமஹி !
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !!
சாமவேதத்தில் ஒரு இடத்தில் “ அஹமன்னம் .. அஹமன்னம் .. அஹமன்னதோ “ என்று கூறப்பட்டுள்ளது .. அதாவது எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னத்தின் வடிவில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது .. அமுது படைக்கும் அந்த ஆண்டவனுக்கே அமுதுபடைக்கும் விழாதான் அன்னாபிஷேகம் !
ஐப்பசி மாதத்தில்தான் சந்திரன் பூமிக்கு மிக அருகில் வந்து தனது முழுஒளியையும் பூமியை நோக்கி வீசுவதாக கூறுகிறது வானவியல் .. நவக்கிரகங்களில் சந்திரனுக்கு உரிய தானியம் அரிசி என்பதால் ஐப்பசி மாதத்தில் அன்னாபிஷேகம் செய்வது சிறப்பாகும் ..
அன்னத்தின் சிறப்பு - ஆகாயத்தில் பிறந்த காற்றின் துணையுடன் தீ எரிகின்றது ..
நிலத்தில் விளைந்த நெல் அரிசியாகின்றது ..
அரிசி நீரில் மூழ்கி .. தீயில்வெந்து அன்னமாகின்றது .. எனவே அன்னமும் பஞ்சபூதங்களின் சேர்க்கை .. இந்த அன்னம் அபிஷேகநிலையில் ஆண்டவன்மேனி முழுவதும் தழுவி அவனை அடைக்கலமாகின்றது .. அதன்மூலம் ஐம்பூதங்களும் அவனுள் அடக்கமென்பது புலனாகின்றது .. எனவே அவனே பரம்பொருள் என்பது தெள்ளத்தெளிவாகிறது ..

எல்லா உயிரினங்களும் வாழவேண்டும் .. அவ்வாறு வாழ்ந்தால்தான் மனிதனுக்கு தேவையான உணவு தடையின்றி கிடைக்கும் என்பதை அன்னாபிஷேக பிரசாதத்தை நீரில் வாழும் புழு .. பூச்சிகள் .. மீன்கள் .. மற்ற நீர்வாழ் உயிரினங்கள் எல்லாமும் பெறவேண்டுமென்ற உயரிய நோக்கத்தில் நீரில் கரைக்கப்படுகிறது ..
” அன்னபூர்ணே சதாபூர்ணே சங்கரபிராண வல்லபே
ஞான வைராக்ய சித்யர்த்தம் பிக்ஷாம் தேஹி ச பார்வதி “
தெள்ளத்தெளிந்தார்க்கு ஜீவனே சிவலிங்கம் என்பார் திருமூலர் .. அன்னத்தை வீணாக்கக்கூடாது அது தெய்வசொரூபமானது !
ஞான வைராக்ய சித்யர்த்தம் பிக்ஷாம் தேஹி ச பார்வதி “
தெள்ளத்தெளிந்தார்க்கு ஜீவனே சிவலிங்கம் என்பார் திருமூலர் .. அன்னத்தை வீணாக்கக்கூடாது அது தெய்வசொரூபமானது !
இறைபிரசாதத்தை உண்டு .. சிறந்தமுறையில் வியாபாரம் நடைபெறவும் .. குழந்தைகள் ஆரோக்கியம் .. கல்வியில் முன்னேற்றம் அடையவும் ஞாபகசக்தி பெருகவும் ஈஸ்வரனைப் பிரார்த்திப்போமாக !
“ ஓம் நமசிவாய “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
“ ஓம் நமசிவாய “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
No comments:
Post a Comment