எமக்கு வேண்டும் வரங்களை இசைப்போம் கேளாய் கணபதி ! மனதில் சலனம் இல்லாமல் மதியில் இருளே தோன்றாமல் நினைக்கும் பொழுது நின் மௌனநிலை வந்திட நின்செயல்வேண்டும் ! கனக்கும் செல்வம் நூறு வயது இவையும் தர நீ கடவாயே “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் விநாயகப்பெருமானுக்கு உகந்த ” சங்கடஹர சதுர்த்தி ” விரதம் நேற்றிரவே ஆரம்பமாகி .. இன்றிரவு சந்திரதரிசனத்துடன் நிறைவு பெறுகிறது .. தாங்கள் எடுத்த செயல்கள் யாவும் தங்குதடையின்றி நடைபெறவும் .. அறிவு .. ஆற்றல் .. தெளிந்த ஞானம் பெற்றிடவும் விக்ன விநாயகரைப் பிரார்த்திப்போமாக !
ஓம் தத்புருஷாய வித்மஹே !
வக்ரதுண்டாய தீமஹி !
தந்நோ தந்தி ப்ரசோதயாத் !!
வக்ரதுண்டாய தீமஹி !
தந்நோ தந்தி ப்ரசோதயாத் !!
ஜோதிட சாஸ்திரப்படி விநாயகர் கேதுவின் அம்சம் கேதுவால் ஏற்படும் களத்திரதோஷம் .. மாங்கல்ய தோஷம் .. புத்திரதோஷம் ஆகியவற்றை நிவர்த்தி செய்யக்கூடியவர் ..
சந்திரனால் ஏற்படக்கூடிய தடைகள் .. தோஷங்களை போக்கக்கூடியவர் .. சந்திரபகவானும் தனது தோஷங்கள் நீங்கவும் .. தனது தேய்மானம் நீங்கவும் தேய்பிறை சதுர்த்தி தினத்தன்று ஸ்ரீவிநாயகப் பெருமானை நினைத்து கடும் தவம்செய்திட சந்திரனின் கலைகள் எனும் பிறைகள் வளர அருள்பாலித்தார் ..
“ சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தேயே”
பொருள் - வெள்ளை உடை அணிந்தவரும் .. மகிழ்ச்சிகரமான முகத்தைக் கொண்டவருமான அந்த விக்னவிநாயகரைத் தொழுகின்றேன் ! என்று பிள்ளையாரை வணங்கி நெற்றியில் குட்டிக்கொண்டு எந்த ஒரு காரியத்தையும் ஆரம்பித்தால் வெற்றி நிச்சயம் !
“ ஓம் விக்னேஷ்வராய நமஹ “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
No comments:
Post a Comment