அன்னையும் அரனும் இணைந்த திருக்காட்சி
ஆண் பெண் சமமென உணர்த்தும் நற்சாட்சி
அம்மையும் அப்பனுமாய் துதித்திடும் அடியவர்க்கு அருள்தரும் அர்த்தநாரீஸ்வரடி பணிந்திடுவோம் “
ஆண் பெண் சமமென உணர்த்தும் நற்சாட்சி
அம்மையும் அப்பனுமாய் துதித்திடும் அடியவர்க்கு அருள்தரும் அர்த்தநாரீஸ்வரடி பணிந்திடுவோம் “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் சிவாலயங்களில் ஒளிரும் விளக்கொளியில் மின்னும் ஆன்மீக அதிர்வலைகளால் நம் அகத்தினுள் உள்ள அழுக்கினை அகற்றி .. மனதிற்கு மகிழ்ச்சியைத் தந்தருளும் “ கார்த்திகைமாதத்தின் “ முதல்நாளாகிய இன்று .. அம்மையப்பனைத் துதித்து தங்களனைவரது வாழ்வும் தீபத்தின் ஒளிபோல் என்றும் பிரகாசமாகத் திகழ்ந்திட பிரார்த்திப்போமாக !
ஓம் தபஸ்ய ச வாமபாக மாய வித்மஹே !
சிவசக்த்யாய தீமஹி !
தந்நோ அர்த்தநாரீஸ்வர ப்ரசோதயாத் !!
சிவசக்த்யாய தீமஹி !
தந்நோ அர்த்தநாரீஸ்வர ப்ரசோதயாத் !!
கார்த்திகை முதலாம் நாள் “ முடவன் முழுக்கு “ என்பார்கள் .. ஐப்பசி மாதம் முழுவதும் ஒருநாள்கூட ஸ்ரீரங்கம் மற்றும் காவிரியில் நீராட முடியாதவர்கள் இன்று அவசியம் காவேரியில் நீராடவேண்டும் இதனை ”துலாஸ்நானம் ” என்பார்கள் ..
கார்த்திகை ஞாயிறு மிகவும் போற்றப்படுகிறது .. இதனால் யமவாதனை .. யமபயம் நீங்கும் .. ஆண்டுதோறும் கார்த்திகைமாத ஞாயிற்றுக் கிழமைகளில் அதிகாலை 5.. மணிமுதல் 6 மணிக்குள் சிவபெருமானும் .. பார்வதிதேவியும் அஸ்திர தேவரோடு பிரகாரவலம் வந்து குப்தகங்கையின் கிழக்குக் கரையில் ஆசி வழங்கி அருளுகின்றனர் .. கார்த்திகை மாதத்தின் ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த குப்தகங்கையில் நீராடினால் பிரம்மஹத்தி தோஷங்கள் - உண்டபாவம் .. திருடுவதால் வரும்பாவம் மற்றும் மனச்சஞ்சலத்தால் ஏற்பட்ட பாவங்கள் ஆகியவை நீங்கிவிடும் .. என்று “பிரம்மாண்ட புராணம் “ கூறுகிறது ..
கார்த்திகையில் நம்முடைய உடல் மற்றும் உள்ளத்தின் இயக்கம் சீராக இருக்கும் .. ந்னவே இம்மாத்தின் முதன்நாளாகிய இன்று தர்மசாஸ்தாவாகிய ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் மேற்கொள்ளப்படுகிறது .. இன்றுமுதல் ஐயப்ப பக்தர்களின் பஜனைப் பாடல்களுடன்கூடிய சரணகோஷங்களும் கேட்கும் ..
கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பதும் .. இல்லங்களில் இருவேளைகளில் விளக்கேற்றுவதும் எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும் ..
“ ஓம் ஸ்ரீ அர்த்தநாரீஸ்வராய நமஹ “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
“ ஓம் ஸ்ரீ அர்த்தநாரீஸ்வராய நமஹ “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
No comments:
Post a Comment