திருமாலின் மருமகனே ! தெய்வானையை மணந்த வடிவேலனே ! மலர்ந்த தாமரைபோல எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பவனே ! சேவல்கொடியோனே மலமகள் பார்வதி பெற்ற பாலகனே மயில்வாகனனே கிரகதோஷம் எதுவும் எமைத் தாக்காமல் கத்தருள்வாயாக “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் கார்த்திகை மாதத்தில் வரும் செவ்வாய்க்கிழமையில் முருகனை வழிபடுவது மேலும் சிறப்பைத்தரும் .. தங்களனைவருக்கும் என்றும் வாழ்வில் நிம்மதி .. சந்தோஷம் .. உற்சாகம் நிலைத்திட எல்லாம் வல்ல முருகப்பெருமானைப் பிரார்த்திப்போமாக !
ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹேஷ்வர புத்ராய தீமஹி !
தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத் !!
மஹேஷ்வர புத்ராய தீமஹி !
தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத் !!
செவ்வாய்க்கிழமை என்றாலே முருகப்பெருமான் வழிபாட்டிற்குரிய தினம் என்பது அனைவரும் அறிந்ததே ! முடிந்தால் செவ்வரளி மலர்களை சார்த்துங்கள் .. வீட்டில் விளக்கேற்றி சர்க்கரைப்பொங்கல் அல்லது தயிர்சாதம் நைவேத்தியம் செய்து அந்தப் பிரசாதத்தை ஏழை எளியோர்க்கு வழங்குங்கள் .. எதிர்ப்புகள் தெறித்து ஓடும் !
இன்றைய தினத்தில் முருகனை வழிபட .. காரியங்களில் ஏற்படும் தடை தாமதங்கள் நீங்கும் .. செவ்வாய் கிரகதோஷங்கள் நீங்கும் .. எதிரிகள் தொல்லை ஒழியும் .. நீதிமன்ற வழக்குகள் .. பூர்வீக நிலம் சொத்து சம்பந்தமான விடயங்களில் உங்களுக்கு சாதகமான நிலை ஏற்படும் .. பலமும் வளமும் பெற்று வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
“ ஓம் சரவணபவாய நமஹ “
No comments:
Post a Comment