நெமிலி பாலா என்ற தெய்வம் பற்றி தெரியுமா?
நெமிலியில் குடிகொண்டுள்ள பாலா திரிபுரசுந்தரி இல்லம் உள்ளது.
இது தனிநபர் பராமரிப்பில் உள்ளது .வேலூரில் இராமசாமி ஐயர் தங்கி கிராமத்தில் வசித்து வந்தார்.மிகவும் சிரமமாக இருந்ததால் ஊரைவிட்டு கிளம்பி கால்நடையாக வந்து நெமிலியில் ஒரு சத்திரத்தின் திண்ணை யில் தங்கினார்.அவர் வேத விற்பன்னர் .ஊரில் உள்ளவர்கள் அந்த இடத்தில் பிசாசு இருப்பதாக கூறியும் வேதம் சொல்லிக்கொண்டே இரவு முழுவதும் தூங்காமல் இருந்தார்.
மறுநாள் ஊர் மக்கள் வந்து பார்த்து விட்டு எல்லோரும் நலமாக இருப்பதை தெரிந்து அவர்களிடம் ஏதோ சக்தி இருக்கிறது.எனவே அவர்களை அங்கேயே தங்கச் செய்து உதவிகள் செய்தனர்.
ஒருநாள் இரவு அவரின் மகன் கனவில் பாலா சிறுமியாக தோன்றி தான் அருகே உள்ள கொசஸ்தலை ஆற்றில் இருப்பதாகவும் எடுத்து வந்து பூஜை செய்ய சொல்லி மறைந்தாள்.
மறுநாள் ஆற்றில் எல்லோரும் தேடினார்கள் மூன்றாம் நாள் ராமசாமி அவர்கள் தண்ணீரில் மூழ்கிய தேடும்போது ஒரு விரல் அளவில் கையில் வந்து அமர்ந்தாள்.
அது நவராத்திரி சமயத்தில் நடந்ததால் விமரிசையாக பூஜை நடைபெற்றது.
நாம் விரும்பினாலும் தரிசனம் கிடைக்காது அவளே கூப்பிட்டால் தான் தரிசனம் கிட்டும்.
சாக்லேட் , பிஸ்கட் நிவேதனம் செய்யப்படுகிறது.
No comments:
Post a Comment