திவ்யதேசம் என்றால் என்ன? எங்கெங்கு உள்ளது?
தமிழ் நாட்டு வைணவ சம்பிரதாயத்தில், பகவான் மகாவிஷ்ணு குடிகொண்டுள்ள 108 புனிதத் தலங்கள் அதாவது, பெரும்பாலும் பகவான் நாராயணனின் பல்வேறு அர்ச்சாவதார (பூசிக்கும் வடிவிலான) மூர்த்திகள் (சிலை ரூபங்கள்) எழுந்தருளியுள்ள குறிப்பிட்ட சில கோவில்கள் திவ்ய தேசங்கள் எனச் சிறப்புப் பெற்றவை ஆகும்.
இந்தியாவிலுள்ளவைகளில், 85 கோவில்கள் தமிழ் நாட்டிலும், 11 கேரளத்திலும், 2 ஆந்திராவிலும் உள்ளன. மற்றவை மற்ற இந்திய மாநிலங்களில்.
இவற்றில் பல கோயில்களும் பரவலாக அறியப்பட்டவை. ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்து, மணிக்கணக்கில் வரிசையில் நின்று தரிசிக்கும் திருப்பதி, திருவரங்கம், திருவனந்தபுரம், பத்ரினாத் போன்ற கோவில்கள் அடக்கம். பரவலாக அறியப்பட்ட கும்பகோணம் சாரங்கபாணி, அடுத்துள்ள ஒப்பிலியப்பன் கோயில், சென்னையில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, மதுரையில் அழகர் கோவில், காஞ்சீபுரம் வரதர் இப்படிப்பட்ட கோவில்களும் அடக்கம்.
ஊருக்குள் போய் அர்ச்சகரைத் தேடிப்பிடித்துக் கூட்டிவந்து கோவிலைத் திறக்கச் செய்து கும்பிடவேண்டிய "ஏழைக் கோவில்கள்" (திருவாலி, திரு நகரி போன்ற) கோவில்களும் அடக்கம்!
107 ஆவது திவ்யதேசமாகச் சொல்லப்படும் திருப்பாற்கடலும், 108 ஆவது திவ்யதேசமாகச் சொல்லப்படும்
திருவைகுண்டமும் மேலுலகைச் சார்ந்தவை.
No comments:
Post a Comment