#வடஸ்ரீரங்கம் ரங்கநாதர், ஸ்ரீரங்கத்தில் இருப்பவரை விட அரை அடி நீளம் அதிகமானவர். ஆகிருதியாக, சேஷன் மேல் சுகமாக யார் தொந்தரவும் இல்லாமல் படுத்துக் கொண்டிருக்கிறாரே.
எந்த ஜருகண்டியும் இல்லை காசு கேட்டு க்யூவில் நிற்க வைப்பவர்களும் இல்லையே. இயற்கைச் சூழலில் நெல் அளக்கும் மரக்காலை (படி போன்ற ஒரு பெரிய அளவு) தலைக்கு உயரமாக வைத்துக் கொண்டு ஆனந்தமாக சயனித்திருக்கிறார்.
தேவதானம் பெருமாள் ஆயிரம் வருஷங்களுக்கு மேலானவர்.
பெருமாள் மேல் அவர் செய்த சேவைக்கு நன்றியாக தேவர்கள் சேர்ந்து அளித்த தானம், இந்த வயல் சூழ்ந்த இடம். தேவதானம்.
சிறிய கோவில் என்றாலும் சாளுக்கிய ராஜாவால் கட்டப்பட்ட ஆலயம். ஆலயம் வயல்கள் நடுவே ஒரு மணல் திட்டில் அமைந்திருக்கிறது. வளைந்து, வளைந்து வண்டியில் செல்லப் பாதை அமைத்திருக்கிறார்கள். யாரும் தன்னைத் தொந்தரவு செய்யக்கூடாது என்ற நோக்கத்தோடுதானே ரங்கநாதர் இந்த இடத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார்.
No comments:
Post a Comment