அருள்மிகு நர்த்தன வல்லபேஸ்வரர் திருக்கோயில், #திருக்கூடலையாற்றூர்
தேவார பாடல் பெற்ற தொண்டை நாட்டு ஆலயங்களில் 3 வது ஆலயம். பிரம்மாவும் சரஸ்வதியும் தவம் செய்து சிவபெருமானின் . நடனகாட்சியை கண்டனர். ஆகையால் இறைவன் நர்த்தனவல்லபேஸ்வரர் என்றும் அழைக்கபடுகிறார். கும்பகோணத்தை அடுத்த திருப்புறம்பயத்தில் இருந்து சுந்தரமுர்த்தி நாயனார் விருத்தாசலம் செல்லும் வழியில், இங்குதான் சிவபெருமான் ஒரு அந்தணர் வடிவில் நின்றதை பார்த்தார் . அவரை விருத்தாசலம் செல்ல வழி வினவ அவர் திருகூடலையாற்றூர் வழியாகத்தான் செல்லவேண்டும் என்று வழி காட்டிக்கொண்டே வந்து கோயில் வந்தவுடன் மறைந்து விட்டார். சுந்தரரும் இறைவனின் திருவிளையாட்டை அறிந்து இங்கே தங்கி பதிகம் பாடி பின்பு விருத்தாசலம் சென்றார்.
இங்கு மணிமுத்தாறு வெள்ளாறு ஆகிய நதிகள் இங்கு கூடுவதால் கூடலையாற்றூர் என்று பெயர் வந்தது. இங்கு எமதர்மராஜாவின் உதவியாளர் சித்திரகுப்தருக்கு தனி சன்னதி உள்ளது. சுயம்பு லிங்கமாக இங்கு அருள் புரியும் சிவலிங்கத்தின் மேல் சித்திரை மாதம் முதல் மூன்று நாட்கள் சூரிய ஒளி பட்டு சூரிய பூஜை நடைபெறுகிறது. இங்கு நவகிரங்களுக்கு தனி சன்னதி இல்லை. சனீஸ்வரர் மட்டும் பொங்கு சனிஸ்வரராக அருள் புரிகிறார்.
No comments:
Post a Comment