PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

Swamy saranam...guruve saranam.....today pooja at sannidhanam 21=3=22

 

Cuddalore,& vridhachalam In & Around   padal petra Sivasthalam  & Other Temples 1.Thirunelvayil arathurai2.Pennagadam3.Thirukkudalaiyatrur4.Thiru erukathampuliyur5.Thiruthinai Nagar 6Thiruchopuram7.Kolanjiappar temple8.Srimushnam9.Vriddhagiriswarar Temple, Vriddhachalam &10.Tittakudi

===============================================

#பழமலைநாதர் கடலூர் மாவட்டத்திலுள்ள விருத்தாசலத்தில் அமைந்துள்ள சைவசமய சிவன் கோயிலாகும். மூலவர் விருத்தகிரிஸ்வரர் (எ) பழமலைநாதர், தாயார் விருத்தாம்பிகை (எ) பெரிய நாயகி மற்றும் பாலாம்பிகை (எ) இளைய நாயகி ஆவர்.
இந்தக்கோயில் மிக முக்கிய சிறப்பு 5 என்கிற எண்ணாகும். இந்த கோயிலில் 5 கோபுரம், 5 நந்தி, 5 தேர், 5 கொடிமரம் என எல்லாமே ஐந்து ஐந்தாக அமைந்துள்ளது.
இந்தக்கோயிலில் உள்ள ஆழத்து விநாயகர், விநாயகரின் ஆறுபடை வீடுகளில் ஒன்று.
காசியை விட வீசம்(தமிழ் அளவை) புண்ணியம் அதிகம் என தல வரலாறு குறிப்பிடுகிறது. இதனால் விருத்தகாசி என்கிற சிறப்புப்பெயரும் இவ்வூருக்கு உண்டு.


#கொளஞ்சியப்பர் கடந்த சில நூற்றாண்டுகட்கு முன்பு தோன்றியது.திருக்கோவில் அமைந்துள்ள இடம் முன்னொரு காலத்தில் அடர்ந்த காடாக சூழ்ந்துள்ளது. பசு மாடு ஒன்று அடர்ந்த காட்டில் நிறைந்திருந்தகொளஞ்சிச் செடிகளின் நடுவே தன் கால்களால் சீய்ந்து பலிபீட உருவில் இருந்த கற்சிலையின் மேல் தானாக பால் சொறிவதை மக்களால் காணப்பட்டு இது ஒரு புனித தெய்வம் எனக் கருதி வழிபாடு செய்துவரப்பட்டது.சுவாமி உருவமின்றி உள்ளதால் என்ன தெய்வம் என்பது குறித்து ஆராய்ந்த போது,விருத்தாசலம் திருத்தல வரலாற்றில் “தம்பிரான்தோழன்” என்று சொல்லகூடிய சுந்தரமூர்த்தி நாயனார் தில்லையில் இருந்து பதிகம்பாடி விருத்தாசலம் அடைந்த ஊர்.சுவாமி பெயர்களைக் கேள்வியுற்று முதுமைதன்மை வாய்ந்த இவர்களால் பொன்,பொருள் எனக் கருதி பாடாதொழிந்து சென்றபோது திருமுதுகுன்றத்து ஈசனாகிய பரம் பொருள் பக்தனோடு விளையாட எண்ணி தனது மைந்தன் முருகனிடம் ”சுந்தரன் மதியாது செல்வதால் அவரை எமது இடத்திற்கு வருவிக்கச் செய்” என ஈசன் பிராது கொடுத்த இடம் மணவாளாநல்லூர் எல்லைஎன்பது தெரியவந்தது.அதன்படி விருத்தாசலம் நகருக்கு மேற்கு திசையில் “முருகன் தான் பலிபீடஉருவில்” அமைந்துள்ளார்என உறுதி செய்யப்பட்டது கொளஞ்சி செடிகளின் ஊடேயும். பசுவின் கொளம்பின் மூலமாகவும் வெளிப்பட்ட அவருக்கு அருள்மிகு கொளஞ்சியப்பர் எனும் திருநாமத்தை சூட்டி வழி பட்டு வந்துள்ளார்கள்.தமிழ் கடவுள் உருவமின்றி அருவுருவ நிலையில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் திருத்தலமாகவும் விளங்குவதால் இத்தலம் பிரசித்து பெற்ற பிரார்த்தனை திருத்தலமாக திகழ்கிறது.

No comments:

Post a Comment