PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMIYE SARANAM IYYAPPA.....

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. 
புதன்கிழமையாகிய இன்று பிரதோஷ விரதமும் வருகின்றது .. மாலைவேளையில் .. பிரதோஷவேளையாகிய 4.30 - 6.00 மணிவரையில் சிவாலயம் சென்று சிவனையும் .. நந்தீஸ்வரரையும் தரிசிப்பது சாலச்சிறந்தது .. தங்களைனருக்கும் அனைத்து சம்பத்துக்களும் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துகிறேன் .. சிவபெருமானை வணங்குகின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹாதேவாய தீமஹி !
தந்நோ ருத்ர ப்ரசோதயாத் !! 

சிவபெருமானுக்குரிய விரதங்களுள் மிகவும் விசேஷமானது பிரதோஷ விரதம் .. தோஷம் என்றால் - குற்றம் என்றும் .. 
பிரதோஷம் என்றால் - குற்றமற்றது என்றும் பொருள் தரும் ..
மாலை 4.30 - மணிமுதல் 6.00 மணிவரையிலான காலமே பிரதோஷ காலமாகும் .. இதை சந்தியா காலம் என்றும் அழைப்பர் .. 

ஒவ்வொருமாதமும் வளர்பிறை .. தேய்பிறை என்னும் 2 காலங்களிலும் திரயோதசி திதியில் வருவது பிரதோஷ தினமாகும் .. இந்த வேளையில் சிவபெருமானை வழிபாடு செய்வதே இந்த விரதத்தின் நோக்கம் .. பிரதோஷவேளையில் இறைவனை வழிபடுவதால் நமது முற்பிறவி குற்றங்கள் .. சகலதோஷங்கள் நீங்கி நலம் கிடைக்கும் .. பாவம் விலகி புண்ணியம் சேரும் .. வறுமை அகலும் .. பயம் .. மரணவேதனை நீங்கும் .. பிறவி ஒழித்து முக்திபேற்றினை அடைவர் .. கல்வியில் மேன்மை பெறுவார்கள் .. 

சிவனையும் நந்தீஸ்வரரையும் போற்றித் துதிப்போம் ! பலவெற்றிகளையும் பெறுவோமாக ! வெற்றி நிச்சயம் ! 
” ஓம் நமசிவாய “ .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. TODAY IS ' PRADOSHAM ' 
MAY LORD SHIVA REMOVE ALL THE OBSTACLES AND SHOWER YOU WITH ETERNAL SUCCESS .. " OM NAMASHIVAAYA " ..

No comments:

Post a Comment