PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

சுவாமியே சரணம் ஐயப்பா!! பன்வேல் பாலகன் நாமம் போற்றி!! குருவின் பாதார விந்தங்கள் போற்றி! போற்றி!! Swamiye Saranam Iyyappa!Panvel balagane saranam Iyyappa!! Guruve Saranam! Saranam




அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. இரண்டாம் ஆடிச்செவ்வாயாகிய இன்று அன்னையைத் துதித்து தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஒரு சுபீட்சமிக்க நன்நாளாக அமைந்திட பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் ஸர்வஸம் மோஹின்யை வித்மஹே !
விஷ்வ ஜனன்யை தீமஹி !
தந்நஸ் சக்தி ப்ரசோதயாத் !! 

ஆடிமாத செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் எண்ணை தேய்த்து .. மஞ்சள் பூசிக்குளித்து விரதம் இருந்து அம்மனை வழிபட்டு வந்தால் அவர்களது மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கை .. 

இன்று பெண்கள் ஒளவையார் விரதம் அனுஷ்டிப்பார்கள் .. 
செவ்வாய்க்கிழமை இரவு 10.30 மணிக்கு மேல் ஆண்களும் .. குழந்தைகளும் .. உறங்கிய பின்னரே இவ்விரதம் இருப்பர் .. பெண்கள் மட்டுமே ஒன்று கூடி மூத்த சுமங்கலிப் பெண்கள் வழிகாட்ட இளைய பெண்கள் விரதத்தைத் தொடங்குவர் .. 

பச்சரிசிமாவில் வெல்லம் சேர்த்து கொழுக்கட்டை தயாரிப்பர் .. அதன் வடிவம் வித்தியாசமானதாக இருக்கும் .. அன்றைய நிவேதனங்கள் எதிலும் உப்பு போடமாட்டார்கள் .. அனைத்தும் தயாரானதும் ஒளவையார் அன்னையை நினைத்து விளக்கேற்றி பூஜைகள் செய்வார்கள் .. 

ஒளவையார் அம்மன் கதையினை ஒருவர் சொல்ல மற்றவர்கள் பக்தியோடு கேட்பர் .. இறுதியாக விரத நிவேதனங்கள் அனைத்தையும் அந்த பெண்களே உண்பர் ..
பூஜைமுடிந்த உடனே வழிபாடு நடந்த இடத்தை தூய்மைபடுத்திவிடுவார்கள் .. இந்த விரதம் ஒவ்வொரு ஆடிச்செவ்வாய் கிழமைகளில் ஒவ்வொரு வீட்டிலும் நடத்துவர் .. இப்படி விரதம் அனுஷ்டித்தால் குடும்ப ஒற்றுமை நிலைக்கும் என்பது ஐதீகம் ..

அம்மனைப் போற்றுவோம் ! அன்னையின் அருட்கடாக்ஷ்த்தையும் பெற்றிடுவோமாக ! .. ஓம் சக்தி ஓம் ! 
வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED TUESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF GODDESS SHAKTHI 'MAA' .. MAY MAY SHE BLESS YOU WITH PEACE AND PROSPERITY .. " JAI MATA DI " ..

No comments:

Post a Comment