PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMIYE SARANAM IYYAPPA....PANVEL BALAGAN PATHAM POTRI


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. வியாழக்கிழமையாகிய இன்று நம் அனைவராலும் போற்றித் துதிக்கப்படும் ஷீரடி சாய்நாதருக்கும் உகந்த நாளாகும் .. 
தங்கள் மனதில் உள்ள கவலைகளெல்லாம் சாய்நாதரின் திருவடிகளில் சமர்ப்பியுங்கள் .. அனைத்தும் ஓர் முடிவுக்கு வந்துவிடும் .. தங்களனைவருக்கும் மனநலமும் .. உடல்நலமும் நல்குவாராக .. 

ஓம் ஷீரடி வாஸாய வித்மஹே !
சச்சிதானந்தாய தீமஹி !
தந்நோ சாய் ப்ரசோதயாத் !! 

சத்குரு ஸ்ரீ ஷீரடிபாபா துதிப்பாடல் -
ஷிர்டி சாய்பாபாவின் பாதமலர் பணிவோம்!
பகவான் அவதார மஹிமையை அறிவோம் !
மாயைகள் விலகாமல் மன்னவன் வருவானோ !
மமதையில் வாழ்ந்தால் மாயவன் தெரிவானோ !
நேசமுடன் குழந்தாய் பக்திவழி நின்றால் !
நிச்சயம் .. சத்தியம் இறைவனை காண்பாய் !
தண்ணீர் .. மேட்டினிலே தங்குவதுமுண்டோ !
தற்பெருமை நெஞ்சம் தலைவனை காட்டுமோ !
எண்ணிடு இறைவனை ! எங்கும் அவனே ! 
என்றிட்ட எங்கள் இதயத்தின் தெய்வமாம் ! மனமது தெளிவானால் மண்ணும் .. பொண்ணும் ஒன்று !
மதமெது ஆனாலும் ஆண்டவனும் ஒன்று !
தினம் உனைத் துதித்தே உன்னடியை தேடுவோம் !
நிச்சயனே ! நிர்மலனே ! எங்கள் அருள்வடிவான சாயிதேவனே!

பாபாவைப் போற்றுவோம் ! அவரது அருட்கடாக்ஷ்த்தைப் பெற்றிடுவோம் ! “ ஓம் சாய் ராம் “ வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED THURSDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF SHIRDI SAI ..
MAY HE SHOWER YOU WITH GOOD HEALTH .. PEACE OF MIND .. AND HAPPINESS .. " OM SAI RAM "

No comments:

Post a Comment