PANVEL BALAGAR
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. வியாழக்கிழமையாகிய இன்று ‘ பிரதோஷ விரதமும் ‘ வருவதால் .. மாலையில் சிவாலயம் சென்று பிரதோஷவேளையாகிய 4.30 - 6.00 மணிவரையிலான நேரத்தில் சிவனையும் .. நந்தீஸ்வரரையும் தரிசிப்பது சாலச்சிறந்தது .. தங்களது அனைத்து தோஷங்களும் .. துன்பங்களும் நீங்கி மகிழ்ச்சியுடன் வாழ ஈசனைப் பிரார்த்திக்கின்றேன் .. ஓம் தத்புருஷாய வித்மஹே ! மஹாதேவாய தீமஹி ! தந்நோ ருத்ர ப்ரசோதயாத் !! மூவுலகிற்கும் ஏற்படவிருந்த பேரழிவை சிவபெருமான் தன்னகத்தேயிருத்திக் காத்த காலவேளையே பிரதோஷவேளை ( மாலை 4.30 - 6.00 மணிவரை ) .. பிரதோஷத்திற்காக கூறப்படும் புராணக்கதையில் செல்வத்திற்காக அசுரர்களும் .. தேவர்களும் பாற்கடலைக் கடையும் பொழுது ஆலகாலம் எனும் விஷம் வெளிப்பட்டது .. அதற்கு அஞ்சிய தேவர்களும் .. அசுரர்களும் .. சிவபெருமானை தங்களை காக்கும்படி வேண்டினர் .. அவர்களுக்காக சிவபெருமான் ஆலகால விஷத்தினை உண்டார் .. அவ்விஷம் சிவனின் வயிற்றினை அடையாமல் இருக்க அருகிலிருந்த அன்னை பார்வதிதேவி சிவபெருமானின் கழுத்தினை இறுகப்பிடித்தார் .. இதனால் ஆலகாலம் சிவனின் கழுத்தினை நீலமாக மாற்றிவிட்டது .. இவ்விரதத்தை நோற்க விரும்புபவர்கள் .. சித்திரை .. வைகாசி ஐப்பசி .. கார்த்திகை .. ஆகிய நான்கு மாதங்களில் வரும் சனிப்பிரதோஷ நாளில் விரத அனுஷ்டானத்தைத் தொடங்குதல் மரபு .. பகல் முழுவதும் உபவாசமிருந்து பிரதோஷவேளையாகிய சூரிய அஸ்தமனத்தின்போது சிவாலயங்களில் சிவதரிசனமும் .. நந்தீஸ்வரரின் தரிசனமும் செய்தபின்பு போசனம் செய்தல் வேண்டும் .. சிவனைப் போற்றுவோம் ! அவரது அருட்கடாக்ஷ்த்தையும் பெற்றிடுவோம் ! ஓம் நமசிவாய ! வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED PRADOSHAM DAY .. MAY LORD SHIVA BLESS YOU AND SHOWER YOU WITH HAPPINESS AND PROSPERITY .. " JAI BHOLE
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment